google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வாழ்க்கை-140 வார்த்தைகளில்..(கீச்சுக்கள்)

Monday, February 25, 2013

வாழ்க்கை-140 வார்த்தைகளில்..(கீச்சுக்கள்)


வாழ்க்கையை மூன்று வார்த்தைகளில் -IT GOES ON-என்று சொன்னான் கவிஞன் ராபர்ட் ப்ராஸ்ட் (தமிழில் இரண்டே வார்த்தை...அது செல்கிறது)
அதாவது வாழ்க்கை முடிவில்லாதது என்றோ செத்தப்பிறகு பேயாய் அலைவோம் என்றோ அர்த்தமில்லை 

வாழ்க்கை-அவரவர்கள் எண்ணம் எதுவோ...?அவரவர்கள் செயல் எதுவோ........? அவ்வழியில் அது போகிறது.
கெடுவான் கேடு நினைப்பான். கத்தி எடுத்தவன் கத்தியால் அழிவான்.    

இங்கே நமது கீச்சர்களோ 140-வார்த்தைகளில் வாழ்க்கையை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்கள் இவர்கள்  கவிஞர்களுக்கெல்லாம் கவிஞர்கள்..ஞானிகள் 
 *********************************************************************************



வாளேந்தி எதிரிகளை வீழ்த்திய பின்னே கண்விழிக்கிறேன். கனவிற்கு பாவமாவது.. புண்ணியமாவது?!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


வாழ்க்கைன்றது ராஜா பாட்டு மாதிரி. முன்னலாம் நல்லா இருந்துச்சுன்னு போயிட்டே இருக்க வேண்டியதுதா
*******************************************************************


வாழ்க்கை தத்துவத்தை ஆராய வெளிநாடெல்லாம் போவாதீங்க ட்ரெயின்ல வந்து பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்தாலே போதும்.
********************************************************************************

எல்லா இடத்துலயும் அடிவாங்குனவன் ஓடுவான்,ஆனால் கிரிக்கட்ல மட்டும் தான் அடிச்சவன் ஓடுவான்..!! #அம்புட்டு தான் வாழ்க்கை

********************************************************************************

அலாரம் வைத்து எழுந்திரிக்க வேண்டிய நிர்பந்தம் இல்லாதவர்களே வாழ்க்கையை வாழ்பவர்கள்.மற்றவர்கள் எல்லாம் வாழ்க்கையை ஓட்டுபவர்கள்.
*****************************************************************************

 Embedded image permalink
ஒரு வத்திகுச்சில வாழ்க்கைய சொல்லிட்டாங்கே! :) 

************************************************************************

 

வாழ்க்கைங்கிறது நூடுல்ஸ் மாதிரி, சிக்கலாத்தான் இருக்கும், நாமதான் ஃபோர்க்க உட்டு லாவகமா திங்கனும்!!

*****************************************************************************



இரட்டை பட்டங்கள் வாங்கி கல்லூரியை விட்டு வெளியே வந்தபின்பு தான் தெரிந்தது,பாடமே இனிமேல்தான் துவங்குகிறது என்று #வாழ்க்கை



***************************************************************************
thanks to all twitters and their tweets
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1