google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தமிழ் சினிமாவின் (தலை)விதிகள்?(பகுதி-1)

Monday, February 25, 2013

தமிழ் சினிமாவின் (தலை)விதிகள்?(பகுதி-1)


ஒரு வெற்றிப்படத்தைத் தீர்மானிக்க 32 காரணங்களைச் சொல்கின்றனர் திரையுலக ஆய்வாளர்கள்............அவைகள்தான் ஒரு சினிமாவின் தலைவிதியை தீர்மானிக்கின்றன சினிமா விதிகளில்  சிலவைகள்  முழுமையாக  இருந்தால் போதும் அவை ஒரு திரைப்படத்தின் வெற்றியை தீர்மானிக்கின்றன

இங்கே நாம் தமிழ் சினிமாவின் தலைவிதியைப் பார்ப்போம் அவைகளைச் சில தமிழ் திரைப்படங்களுடன் ஒப்பிட்டு கூட்டி கழிப்போம் 

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும்...நீ யார்? உனக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்? என்று.உண்மையில் எனக்கும் இந்தச் சினிமா துறைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை   நான்-உங்களைப் போல் ஒருவன்..ஒரு சினிமா பார்வையாளன்..அதிகப் படங்கள் பார்த்த (பைத்தியக்கார)அனுபவத்தால் சினிமாவை இப்படி அலசுகிறேன் இதுவரை  நானும் என்னைச் சார்ந்தவர்களும் சினிமா பார்க்க செலவு செய்த பணத்தை ஏதேனும் ஒரு வங்கியில் நான் போட்டு வைத்திருந்தால்....நானும் ஒரு சினிமா  தயாரிப்பாளன் ஆகியிருப்பேன்...

எனவே எனக்கு தெரிந்தவரையிலும் என் அனுபவத்திலும் வலைதளங்களில் தேடி அகப்பட்டவைகளை உங்கள் முன் சமர்ப்பின்கின்றேன் சுவராசியமாக இருக்கட்டுமே என்று சில தமிழ் படங்களை ஒப்பிடுகின்றேன் ..முழுக்க முழுக்க  நடு நிலை  தொடர் பதிவு. அவைகளைப் பகுதிகளாகப் பிரித்து இங்கே நாம் காண்போம்


பெரியோர்கள் நிச்சயம் செய்யும் திருமணத்துக்கு ஜாதகம் பார்ப்பார்கள் ஜோதிடரும் ஜாதகத்தைப் பார்த்து ஏதேதோ கணக்குப் போட்டு...கூட்டி..கழித்துப் பத்துப்  பொருத்தங்களில் ஏழு சரியாக இருக்கு...(சாதகமாக)  நல்ல பொருத்தம் என்பார் பெற்றோர்களும் சந்தோசத்தில் அவருக்கு அதிகமாகவே பணம் கொடுப்பார்கள் (சில சோதிடர்கள் பணத்துக்காவோ அல்லது கணக்கில் வீக்கோ? அல்லது ஜோதிடம் என்பது பொய்யோ?..அந்த திருமணம் ஒரு சில நாட்களிலேயே புட்டுக்கும்)நான் இங்கே பொய் ஜோதிடராகச்  சினிமா கணக்கு போடவில்லை...என் எண்ணத்தை உங்கள் முன் சமர்பிக்கிறேன்


1. லட்சியம்(AMBITION:)-பார்வையாளர்கள் விரும்புவதைவிட அதிகம் கொடுப்பது.சில திரைப்படங்கள் பார்வையாளர்கள் விரும்பியதை ஆதாரத்துடனும் சில சவாலான திறமையுடனும் கொடுக்கும் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த எந்திரன் திரைப்படம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைவிட அதிகம் கொடுத்தது அவர்கள் இருவருக்கும் ஒரு சவாலாகவும் அவர்களின் லட்சியமும் அப்படத்தின் வெற்றியானது அதிலும் சிட்டி கதாப்பாத்திரம் யாரும் எதிர்பார்க்காதது

இன்னும் சில படங்கள் ஏற்கனவே சொல்லப்பட்ட கதை வேறு ரூபத்தில் அதாவது பழைய கள் புதிய மொந்தை என்பார்களே அப்படி...நிறைய படங்கள் சொல்லலாம் அதிலும் இந்தியில் அமிதாப் நடித்த டான் படத்தை ரஜினி-அஜித்போன்றவர்களின் நடிப்பில் பில்லா தமிழ் திரைப்படம் எல்லாம் பார்வையாளர்களுக்கு தெரிந்த சங்கதியை மீண்டும் புதுப் பொலிவுடன் தந்து அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகம் கொடுத்தன 
<a href="http://slideful.com/v20130225_1623763890115822_pf.htm">View the slide show</a> சுருக்கமாக.....ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பவர்கள் ஒரு லட்சியத்துடன் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைவிட அதிகமாகக் கொடுக்கும் போது அது வெற்றிப்படமாகிறது அதேநேரத்தில் சிலபடங்கள் அவர்களை அதிகமாக எதிர்பார்க்கவைத்துத் திரையரங்கில் வெறுப்பேற்றும் போது அவர்கள் விட்டால் போதும் என்று ஓடுகிறார்கள்  

இன்னும் தெளிவாக... சமீபத்திய தமிழ் படம் கண்ணா லட்டு திங்க ஆசையா?..இப்படம் பார்வையாளர்களுக்குப் பாக்கிய ராஜின் இன்று போய் நாளை வா திரைப்படத்தின் உல்டா என்று தெரிந்தும் மிகுந்த எதிர்பார்ப்பை தந்தது அதில் சந்தானம் மற்றும் பவர் ஸ்டார் போன்றவர்கள் நடித்தது அவை எல்லாவற்றையும்விட  நடிகர்களுக்கு ஏற்றவாறு கதையில் நிறைய மாற்றம்..இது பார்வையாளர்கள் எதிர்பார்க்காதது  

இவ்வாறாக ஒரு லட்சியத்துடனும் சவாலுடனும் பார்வையாளர்கள் எதிர்பார்ப்பைவிட அதிகம் தந்து தமிழ் சினிமாவின் தலைவிதியை நல்லபடியாக நிர்மானிப்பவர்கள் நிறையப் பேர்.......(தொடரும்)

                    ..............................................பரிதி.முத்துராசன் 

                                                      thanks-YouTube-erostamil
*************************************************************
இப்பதிவைப் பற்றிய தங்கள் கருத்து....?       
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1