google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சு.சுவாமி பேட்டியும் நடுவில கொஞ்சம்..

Wednesday, March 06, 2013

சு.சுவாமி பேட்டியும் நடுவில கொஞ்சம்..


'இலங்கையில் தமிழர்களுக்கு தனிமாநிலம்' என்று ராஜபக்சேவை சந்தித்துவிட்டு  வந்த சு.சுவாமியின் பேட்டி குமுதம் ரிப்போர்டர்(10-03-2013)  வாரப்பத்திரிகையில் படித்தபோது...ப்பே...என் மண்டையில் என்ன ஆச்சு..? நடுவில கொஞ்சம் பக்கத்தக் காணோம்...? இப்படி என் பால்ய கால நினைவு வந்துவிட்டது...    


திருச்செந்தூர் அருகில் உள்ள ஒரு சிறு கிராமமான எங்கள் ஊரில் பனங்காட்டுக்குள் குடியிருக்கும் எங்கள் குல தெய்வம் சுடலை மாடசாமிக்கு வருடம் ஒருமுறை நடக்கும் கொடை(திருவிழா) யில் நள்ளிரவில்தான் பூஜை நடக்கும் ...சிறுவர்களான எங்களை பூஜையில்  அனுமதிக்கமாட்டார்கள்...





























 
ஒரு முறை நானும் மறைவாக கூட்டத்தோடு நின்று அங்கே என்ன நடக்கிறது என்று பார்த்தேன்.....ஒரு சேவலை உயிரோடு எரியும் தீயில்..(அதன் பெயர் சுடலை அக்னி குண்டம்) போட்டு பச்சைப் பனை ஓலையால் மூடுவார்கள்...உள்ளே என்ன நடக்கும்...பாவம் அந்த சேவல்..

இன்னொருபுறம் சுடலை சாமி(அவரும் மனிதர்தான்)நாக்கை கடித்துக்கொண்டு (சட்டசபையில் நம்ம கேப்டன் நாக்கைக் கடிப்பாரே அப்படி) ஆடிக்கிட்டு வருவார் ..கையில் ஒரு நீண்ட வெட்டரிவாள் இருக்கும்.... அடிக்கும் உறுமி மேளம்...அதற்கேற்றவாறு ஆடும் கணியன் கூத்தும் ஒருபுறம் வில்லுப்பாட்டும் இன்னொருபுறம்   ...சாமிக்கு  பிரத்தியேகமாக தயாரித்து படைக்கப்பட்ட பட்டச்சாராயம்(அப்போது காய்ப்பு சாராயம்தான்..பாவம் சுடலை மாடன் சாமி இபோதுதானே டாஸ்மாக் வெளிநாட்டு மதுபானங்கள்..) அவர்களுக்குள்ளிருந்தும் ஆவேசமாக ஆட்டம் காட்டும்.....

அவரோ அப்பாவியாக கழுத்தில் மாலையுடன் நின்று கொண்டிருக்கும் கிடா வாயில் உரித்த வாழைப்பழத்தை திணித்து விட்டு(அதுதான்...பாலகன் பாலச்சந்திரனுக்கு திங்க சாக்குலேட் கொடுத்துவிட்டு பாதகர்கள் படுகொலை செய்தார்களே அப்படி...) அருவாளால்  ஒரே போடு...கிடா தலை துண்டிக்கப்படும்.....கொப்பளிக்கும் இரத்தத்தை எடுத்து குடிப்பார் ...இந்தக் கொடூரக் காட்சிகளை காணக்கூடாதுன்னுதான் எங்களை விரட்டுவார்கள்

இதனாலேயே எனக்கு இடையில் கொஞ்சகாலம் அசைவ சாமிகள் மீது கோபம் சைவ சாமிகள் (சுப்பிரமணிய சாமி) மீது நாட்டம் திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் கல்லூரியில் அப்போதைய P.U.C.படிக்கும்போது...

அங்கே கடலோரம் உள்ள சுப்ரமணிய சாமி கோயிலுக்கு போவதுண்டு...உள்ளே போவதற்கு முன் ஆண்கள் (அரை நிர்வாணமாக) மேல் சட்டை..பனியன் எல்லாம் கழட்டி இடுப்பில் கட்டிக் கொள்ளவேண்டும்.(இப்படி ஏன்..? என்று ரொம்ப காலம் தெரியவில்லை.இப்போதுதான் தெரிகிறது 'அவாள்'களுக்கு அங்கே தனி மரியாதை.அடையாளம் இல்லாதவர்கள் இழப்பதோ சுயமரியாதை) 

இப்போது எந்த சாமி மீதும் ஆட்டமுமில்லை..நாட்டமுமில்லை . ஆனால் இந்த சைவ சாமிகள்...போடுகிற ஆட்டம் ...அடடா...அந்த சொல்ல மாடனே பரவாயில்லை.....அவராவது.. கிடா .. சேவல்தான் கொன்றார் இங்கே (சைவ)சாமிகள் ஆளையே உயிரோடு கொல்கிறார்கள்....அதுதான் சுயமரியாதையை இழந்து வாழ்வதும் இறந்து வாழ்வதும் இரண்டும் ஒன்னுதான்னேன்..... 

ஏன் பெரியார் இந்து மத மூடநம்பிக்கைகளையும், பிராமணியத்தையும் எதிர்த்தார் என்று இப்போது தெரிகிறதா...?
ஜாதி, மதம், கோவில், குளம், சாமி, பூதம் கூடாது என்று நான் சொல்லுவதால் அவற்றினிடம் எனக்கு ஏதாவது தனிப்பட்ட துவேஷமா? நான் ஏதாவது எதிர் மதக்காரனா? அல்லது தீண்டாத ஜாதியா? என்றால் அப்படி ஒன்றும் இல்லை. நான் 22 வருஷம் தேவஸ்தான கமிட்டியில் முக்கியஸ்தனாகவும் தலைவனாகவும் இருந்திருக்கிறேன். என் அபிப்பிராயம் எப்படி இருந்தாலும் அனேக கோவிலுக்கு திருப்பணி செய்திருக்கிறேன். .................அப்படி இருக்க நான் ஏன் இப்படிச் சொல்லுகின்றேன்? அவற்றால் ஏற்படும் கெடுதிகளை அறிந்தேதான்...(நன்றி...தந்தை பெரியார் உரை 15.11.1936)

(யோவ்...பரிதி... 'இலங்கையில் தமிழர்களுக்கு தனிமாநிலம்' சு.சுவாமி பேட்டி  என்று தலைப்பு வைத்து விட்டு ..என்னத்தையோ கதைவிட்டுகிட்டு இருக்க ...காதுல  நல்லா பூ சுற்றுற...)

ஆங்..அதுதான் முதலிலேயே சொன்னேனே சாமி.....சு.சுவாமியின் பேட்டியைப் படித்தேன்......அய்யயோ...என் மண்டையில் என்ன ஆச்சு..? நடுவில கொஞ்சம் பக்கத்தக் காணோம்...? இப்படி என் பால்ய கால நினைவு வந்துவிட்டது...என்று.. 

உங்களுக்கும் உங்கள் பால்ய கால நினைவுகள் வரவேண்டுமென்றால் நீங்களும் படியுங்கள் சு.சுவாமியின் பேட்டியை....அதற்குமுன் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் இடம் காலியாக இருக்கிறதா...? என்று கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
பத்து ரூபாய் கொடுத்து பத்திரிக்கை வாங்கி படித்துவிட்டு எனக்கு பல ஆயிரம் சிலவு ஆனது....எல்லா மதக் கடவுள்கள்(சாமிகள்) என்றைக்கு அரசியலில் காலடி எடுத்து வைத்தார்களோ அன்றே நாடும் நாசமாப் போச்சு.....

ஆனால் இன்று அம்மா அவர்கள் இதிலிருந்து மாறுபட்டு தெரிவது ஆச்சரியமாக இருக்கு ...அதிலும்  ஈழமக்களுக்காக  இன்று அம்மா-வின்(win)குரல்  ஆவேசாமாக ஒலிப்பது உலகெங்கும் கேட்கிறது ஐநா சபை காதில் நிச்சயமாக விழும் ..
யார் மூலமாவது ஈழத்துக்கு விமோச்சனம் கிடைத்தாலும் நல்லதுதானே..?இரத்தக்கண்ணீர் வடிக்கின்ற ஈழத்தமிழர்களுக்கு சாமியால்...அம்மாவால்....அய்யாவால்..அண்ணனால்..தம்பியால்.. 
விமோச்சனம் யாரால் கிடைத்தாலும் அவர்கள் தமிழ் இனம் இருக்கும் வரை வணங்கப்படுவார்கள்  

இவ்வளவு நேரம் பொறுமையாய் வாசித்த உங்களுக்கு நன்றி....
இங்கே வாக்களித்தீர்களா.....?
தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்குவந்தால்  ஈழவிடுதலை ஆகியவை சாத்தியமாகும்....?
முடிவு-10-03-2013 ...வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி  

                                                         ....................................பரிதி.முத்துராசன்


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1