google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கேடி பில்லா கில்லாடி ரங்கா-சினிமா விமர்சனம்

Saturday, March 30, 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா-சினிமா விமர்சனம்


இயக்குனர் பாண்டிராஜ் எழுதி இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா காதல் நகைச்சுவை திரைப்படம் ஆயினும் நகைச்சுவைக்கே முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளாலும் பேசும் வசனங்களாலும் சிரிப்பு சினிமாவுக்குக் கதையோ அறிவுப்பூர்வமான சிந்தனையோ (LOGIC) தேவையில்லை என்பதை நிருபித்த வெற்றித் திரைப்படங்களில் இதுவும் ஓன்று....

ஊதாரியாக வெட்டித்தனமாக திரியும்  இரண்டு நண்பர்கள் அவர்கள் போக்கிலேயே தந்தையர்களால் விடப்பட்டும் திருத்தப்பட்டும்  வாழ்க்கையில் வெற்றிபெறும்  மாமுலான கதைதான் ஆனால் சொல்லப்பட்ட விதம் அருமையாக .சிரிக்கவைத்துச் சிந்திக்கவைத்த சினிமாக்களில் இதுவும் ஓன்று

ஆரம்பத்தில் சிரித்து வயிறு வலித்தது..கடைசியில் கொஞ்சம் சோகம் நெஞ்சை வருடியது ..கடைசியில் இயக்குனர்  தட்டுத் தடுமாறி திறமையாக மறுபடியும் நகைசுவையுடன் முடித்தது...ஆனாலும் ஒன்றுமே இல்லாத கதை ஏதோ ஒன்றை உணர்த்தியது...தந்தை மகன்களுக்குள் உள்ள பாசப்போராட்டம்...இப்படியும் இயக்குனர்கள் நம்மைத் திரைப்படத்துடன் ஒன்றிடச் செய்பவர்கள் இங்கே தமிழ் திரையுலகில் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது பாண்டிராஜ்-க்கு   ஜெ.... போடலாம்....
































நடிகர் விமல்(தேனீ கேசவன்)-நடிகர் சிவ கார்த்திகேயன்(பட்டை முருகன்) இணைபிரியாத நண்பர்கள் காதல்  உந்துசக்தியால் ஊந்தப்பட்டு இடைவேளைவரை நாயகர்களின் ஒருதலை காதல் காட்சிகளால் படம் செல்கிறது இடைவேளைக்குப் பிறகு வலையைத் தேடி வரும் மீன்களாக அவர்களின்  இரண்டு வாயாடி காதலிகளும் இரண்டு நாயகர்களையும் தேடி...ஆனால் படம்முழுக்க அரைகிராக்குகளாக அலைவதும்... .நிகழ்வுகள் சில திருப்பங்களுடன் (எவ்வளவு நேரம்தான் இவர்கள் காதலை பார்த்து நாமும் ஜொள்ளுவது.?).அதனால் அப்படியே அரசியல் தில்லுமுல்லு காட்சிகள் நம்மைக் குதுகலப்படுத்துகின்றன

விமலின் காதலியாக  மருத்துவ மனையில் டோக்கன் போடும் பெண்ணாக வரும் பிந்து மாதவி கண்களை உருட்டி உருட்டி பார்ப்பதும் நடுரோட்டில் விமலை லேடி ஜேம்ஸ்பாண்ட் மாதிரி எகிறி குதித்து நோண்டி  நொங்கு எடுப்பது  நம்பமுடியாததுபோல் இருந்தாலும் சிரிக்க வைக்கும் காட்சி...அதேநேரத்தில் பிந்து மாதவியின் அம்மா...அம்மம்மா..எல்லோருமே இப்படி டிஸ்யும் சீனத்துச் சிங்காரிகள்தான் என்று காட்டும் காட்சிகள்  இன்னும் அடங்காச் சிரிப்பு



























சிவ கார்த்திகேயனுக்குக்  காதலியாகப் பாப்பா ஜெராக்ஸ் கடை நடத்தும் ரெய்னா கொடுத்த தலையில் கொட்டும் தண்டனையும் உக்கி போடும்  கொடுமையும் இன்னும் வித்தியாசமானது..சிரிக்க வைக்கக் கூடியது.பட்டையின் தந்தை தன் மகனை காணவில்லை என்று பாப்பாவிடம் ஜெராக்ஸ் எடுக்க வரும் காட்சி நல்ல காமெடி..
கதாநாயகிகளில் உடலிலும் உடையிலும் நடையிலும் இல்லாத கவர்ச்சி அவர்களது கொஞ்சும் காதல் மொழியில் உரையாடலில் இருக்கிறது... 


பொதுவாக இப்படிப் பட்ட படங்களில் கதாநாயகன் சினிமா மோகத்தில்தான் அலையோ அலையென்று அலைவார்கள் இங்கே அரசியல்வாதிகள் ஆகும் கனவோடு தேனீ கேசவனும்  பட்டை முருகனும்   உள்ளாட்சி தேர்தலில் நின்று அரசியல்வாதிகளாகத் துடிப்பதும் அப்படியே  அரசியல்வாதிகள் நையாண்டித்தனத்தால் வருத்தெடுக்கப்படுவது மொக்கையோ மொக்கையாயினும் சக்கையல்ல நல்ல நக்கல் (நகைச்)சுவையானது

படத்துக்கு உயிரோட்டமாக இருப்பது விரசமற்ற இரட்டை அர்த்தம் இல்லாத வசனங்களும்  கலகலப்பாகக் கலாய்க்கும்  உரையாடல்களும் கிழமொழியான பழமொழிகள்கூட (எள்ளுதான் எண்ணைக்குக் காயுதுனா எலிப்புழுக்கை  எதுக்குக் காயுது...?) பஞ்சாமிர்தமாய் இனிக்கிறது...முகநூல் லைக்- அன்லைக் வார்த்தைகள் உபயோகம் அருமை உள்ளது

எல்லோரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் அதனால் பின்னணி இசை அமைக்க  யுவன் சங்கர்-க்கு இடமே இல்லை ஆன்னாலும் இரண்டு பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன அதிலும் நா.முத்துகுமார்  வார்த்தை வீச்சுக்கள் கதையோட்டத்தோடு ஒட்டி உறவாடுகின்றன..  தெய்வங்கள் எல்லாம் என்ற பாடல் அர்த்தமுள்ளது.

தேனீ கேசவன் தந்தையாக டெல்லிகணேஷ் மகனுக்கும் மனைவிக்கும் செலவு கணக்கு காட்டுவதும் அவர் போடும் ஆட்டமும் அப்புறம் மகனிடம் அடிவாங்குவதும் வித்தியாசமான காட்சிகள்

நடிகர் சூரியின் நடிப்பும் இடையிடையே அடிக்கும் நக்கலும் கதைக்கு நயமாகவும் படத்துக்கு நியாயமாகவும் உள்ளது...

முழு நகைச்சுவை படம் என்பதிலிருந்து தவறி தந்தை மகன் பாச உணர்வுகளை விளையாட்டுத்தனமாகக் காட்டினாலும் விபரீதமாக இல்லாமல் விவரமாகப் படம் தந்த இயக்குனரை பாராட்டலாம் ..எல்லா கதாப்பாத்திரங்களும் பேசிப் பேசியே படம் முழுக்க யாரையாவது கலாய்த்துக்கொண்டிருப்பதும்  ஒருகட்டத்தில்  நம் காது சவ்வு கிழியும் நிலை வரும்போது சட்டு புட்டுன்னு தேனீயை பெரிய பழைய பாட்டால் வியாபாரியாக்கியும் பட்டையை பொன்மலை ரயில்நிலையத்தில் வேலை கொடுத்தும் அப்ப்பப்ப்ப்படா..படத்தை முடித்துவிடுகிறார்கள் நாமும் தப்பித்தோம் படமும் மொக்கையிலிருந்து தப்பித்தது.

கடைசியில் பட்டை முருகன் MY DADDY IS GOD என்றும் தேனீ கேசவன்  MY FATHER IS HERO என்றும் அவரவர் தந்தை நிழற் படங்களில் எழுதுவது சிந்திக்க வைக்கும் காட்சிகள்



எல்லாத் தலைமுறையினரும் அதிலும் இளைய தலைமுறையினர் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய படம் சிரிப்புக்கு உத்திரவாதம் மன அழுத்தம் உள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்..இறுக்கம் இளகிவிடும் 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1