google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இக்கடச் சூடு....இதைக் கொஞ்சம் கேளு....

Friday, March 29, 2013

இக்கடச் சூடு....இதைக் கொஞ்சம் கேளு....


இன்று சிங்களவர்களும்
வட இந்தியர்களே...
என்று சொல்லும் கரியவாசமே!
உன் காரிய வாசகம்
நாற்றமெடுக்கிறது ....

நீயும் உன் கூட்டமும்
மனிதக் கொல்லிகள் 
கொடியவைரைஸ் நோய்கள்
பயங்கரவாத பேய்கள்....
சுடுகாட்டில்கூட 
வாழ தகுதியற்ற காட்டேரிகள்

 
இங்கிருக்கும் வட இந்தியர்கள்
எம் சொந்த சகோதரர்கள் 
என்று சொல்லியே நீயும்

நீ செய்த சதிவேலைகளுக்கு 
சந்தாதார் ஆக்குகிறாயே...


அட சிங்களச் சண்டாளா.....
அதனால்தான் அவர்கள் உனக்கு
விருந்து வைத்தார்களா...?
நெஞ்சமெல்லாம்
நஞ்சு கொண்ட கூட்டமே!
உண்ட நாட்டுக்கு
நஞ்சு கொட்டுகிறீர்களே....?

 
ஏ...எச்சில் பதரே!
நீ இனிக்கத் தின்ற திருப்பதி லட்டு
என் அப்பாவி தமிழன்
உண்டியலில் போட்ட துட்டு....

இங்கே  மாணவர்கள் படைதிரண்டாச்சு...
இனி பலிக்காது உன் வஞ்சக பேச்சு....
 
யோவ்...கரியவாசமே!

கரகரப்பு குரலில்  எங்கள் தலைவர்கள்
உடன் பிறப்பே என்று ஆரம்பித்தால்...
உயிரோடு  நீ சாகும்வரை விடமாட்டார்கள்...
அன்று அவர்களை நீங்கள்  ஏய்த்ததாக 
இன்று அவர்கள் புலம்புகிறார்கள்


எங்கள் அம்மா கதை சொல்ல ஆரம்பித்தால் 
உங்கள் கூட்டம் காது கிழிந்து சாவீர்கள்.... 
இப்போதுதான் ஆரம்பம் அவர்கள் ஆட்டம்  
இனி நீங்கள் எடுக்கவேண்டும் ஓட்டம்
சட்டசபையில் போட்டாச்சு தீர்மானம் 
கெட்ட நேரம்தான் உனக்கு வருமானம்  

இன்னும் இருக்கிறார்கள் 
சுடுகாட்டில் வீர ஒப்பாரி வைப்பவர்கள் 
மைக் கிடைத்தாளும் கிடைக்காவிட்டாலும்  மணிகணக்கில் பேசியே...
உன் மண்டை வெடித்து சாகடிப்பார்கள் ....
இன்னும் நிறைய 
எழுதிப் பிழைக்கும் எழுத்தாளர்கள் 
பாடிப் பிழைக்கும்  கவிஞர்கள்...
எழுதுகோலை   எடுத்துவிட்டார்கள்...
அவர்கள் அரம்பாடியே உன் வம்சம் அழிப்பார்கள் 

உனக்கு மட்டும்தான் பேசத்தெரியுமா...?
உன்னைவிட பெரிய நடிகர்கள் 
இங்கே நிறையப் பேர்கள் உண்டு...
இக்கடச் சூடு....இதைக் கொஞ்சம் கேளு....   


ஏண்டா..பன்னித்தலையா...!
ஒரு தமிழ் மாநிலத்துக்காக 
ஏன் இந்தியாவே கவலைபடவேண்டும்?
என்று கேட்கும் பனங் கொட்ட மண்டையா!
தமிழ்நாடுதாண்டா...இந்தியா.அண்ணேன்..அவிங்க 
அண்ணன் தம்பிகளெல்லாம் 
ஓடிசாவுல இருகிறாங்களாம்ல...
ஊத்தவாயன் உளறுறான்...
அவிங்கலாம் யாரு அண்ணேன்....?
இங்கத்தானே இருக்கான்  சுனா சானா 
இவிங்க யாரைச் சொல்றானுங்க,,,,?


எலேய்...சில்லாட்ட மூதே...
எங்க தமிழச்சிக மானத்தோட  
விளையாண்டது போதலையா?
பன்னாட பரதேசிப் பயலே
இன்னும் நீ ஐ.பி.எல்.-ல விளையாடனும்மால
அதையும் நான் காசுகொடுத்து பாக்கனுமால... 

இலங்கை தமிழர் பிரச்சனை தமிழ் மக்கள் பற்றிய ஒர் இனப்பிரச்சனை அல்ல மனிதர்கள் உரிமையை அழித்த மனிதாபிமானமற்றவர்கள் பற்றிய உலகப்பிரச்சனை ...இதை  உணர்ந்து கொள்ள மனிதர்களால் மட்டுமே முடியும் அதையும் தாண்டிஉன்னைப்போல் மிருகங்களால் முடியாது..முடியாது...முடியாது.

ஏய்..ய்...நா ஒரு தடவ சொன்னா...நூறு தடவ சொன்னமாதிரி....நீ ஒரு போர் குற்றவாளி...ஆண்டவன் உன்னைப் போலக் கெட்டவங்களைத் தண்டிப்பான்..ஈழத்தமிழர்களைக் கைவிடமாட்டான் ..2-ம் தேதி உண்ணாவிரதம் இருந்து உன்னைச் சோலி முடிச்சிடுறேன்...ஆ..ங் 

என்னோட நண்பனா இருக்கிறதுக்கு எந்தத் தகுதியும் வேண்டாம் ஆனா எதிரியா இருக்குறதுக்குத் தகுதி வேணும்...நான் 'தல'டா..மவன என்கிட்டவேயா ....?

கையாள அணைகட்டி தடுக்க நா ஒன்னும் கால்வாய் இல்லைடா...காட்டாறு...
நீ அடிச்சா....அடி விழும்...
நா அடிச்சா...இடி விழும்   
எவ்வளவோ பண்ணுறோம் இதப் பண்ணமாட்டோமா...?
ஏய்...இந்த ஆட்டத்த ஆரம்பிச்சது நீ...
நடத்திக்கிட்டு இருக்கிறது அவன்...
ஜெயிக்கப்போறது நாங்கதான்டா.....

                                        thanks-YouTube-SriHari S
நீ சொல்லுவ..நாங்க செய்வோம்....ஆட்டம்-போட்டி-பந்தயம்னு வந்துட்டா சும்மா...சொல்லி அடிப்பான் தமிழன்... கில்லி ..கில்லி மாதிரி 
 
அடேய்..கரியவாசமே! கரையான் ...கரிச்சான் குஞ்சே!
எங்களிடம் இப்படி நிறைய பஞ்ச் இருக்கு
அத்தனையும் கேட்டால் நீ பஞ்சறாகிடுவ....... 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1