google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மாணவ போராட்டங்கள்-ஓர் அலசல்

Monday, March 25, 2013

மாணவ போராட்டங்கள்-ஓர் அலசல்


சாதரணமாகத் துவங்கிய லயோலா கல்லூரியின் எட்டு  மாணவர்களின் உண்ணாவிரத அறப்போராட்டம் இந்த அளவுக்குத் தீவிரமடைந்து  தமிழகம் முழுவதும் பரவும் என்று யாரும் அதிலும் அரசியல்வாதிகள் நினைக்கவில்லை..இன்று மாணவர் கூட்டமைப்பாக வளர்ச்சியடைந்து பாரிமைந்தன் தலைமையில் விஸ்வரூபம் எடுக்க நிற்கிறது...

அம்மாவின் மறைமுக அரவணைப்பும்  தாலாட்டும் இல்லையேல் இது சாத்தியமா? என்பது ஒருபுறம் இருந்தாலும் 
இன்னொரு புறம் தமிழ்நாட்டில் உள்ள மற்ற அரசியல்வாதிகள் அனைவரையும் திகைப்படையச் செய்தது...


திமுக மத்திய அரசுக்கு ஆதரவை கைகழுவி விட்டு நந்தவனத்தில் ஒர் ஆண்டி நிலையில்....மற்ற உதிரிக் கட்சிதலைவர்கள்  உதிர்ந்த மலராக அங்கும் இங்கும் அலப்பறையில்..பாதி பேருக்கு நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் ...பே..பே...என்ற நிலையில்..

மத்திய அரசோ ஆட்டிசம்   போல்   எருமை மாட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டார்களோ...? சொரணையில்லாத நிலையில்...

மாணவர்களும் தமிழ் நாட்டு மக்களும் கேட்பது..........
1-ஐ.நா. சபை இலங்கையில் தனித் தமிழீழம் கோரி பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும்
2- இலங்கையின் இறுதிப்போரில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாகச் சர்வதேச, பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.
3-இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.
4- இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டு வரப்பட வேண்டும்.
5-கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும்.

சல்மான் குர்ஷித் போன்றவர்கள் ட்வீட்டர் பேஸ்புக் இணையதளங்களை  முதலில் தடை செய்ய வேண்டும் என்றார்கள் இன்று சீர்படுத்த போகிறார்களாம் ..ட்வீட்டர் பேஸ்புக் ப்ளாகர் கூகிள் ப்ளஸ் போன்ற சமுக வலைத்தளங்களை  இவர்கள் எங்கள் பாட்டன்  சொத்து என்ற நினைப்பில் பேசுகிறார்கள் ...என்ன ஆச்சு இவர்களுக்கு...........?

தமிழகத்தில் நடந்த அரசியல் கொலைக்காக இன்னும் இவர்கள்  தமிழர்களை எத்தனைகாலம்தான் வஞ்சிப்பார்களோ....?
இலங்கையில் சிங்களர்களை ஏவி விட்டுத் தமிழ் இனத்தை அழித்தார்கள்
இந்தியாவில் தமிழர்களை அழிக்கக் கூடங்குளத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்  

இன்னும் ஒரு பரிதாப  நிலை இங்கே சினிமா பிரபலங்களுக்கு....இந்த மாணவர்கள் போராட்டத்தை  ஆதரித்தால் எங்கே மத்திய அரசு தங்கள் வேட்டை நாய்களை அனுப்பிப் பதுக்கி வைத்திருக்கும் கள்ளப்பனத்தைப் பிடுங்கிக் கொள்வார்களோ....? பயம் ஒருபக்கம் மாணவர்கள் போராட்டத்தை ஆதரிக்க வில்லை என்றால் எங்கே தங்களது பித்தலாட்டங்களைத் திரையில் ரசிக்க மாட்டார்களோ? பரிதாபம் இன்னொரு புறம் ...ஆக இருதலைக்கொள்ளி எறும்பாக..போராட்ட காலங்களில் வேடிக்கை காட்டிவிட்டு இப்போது  ஏப்ரல் 2-ல் உண்ணாவிரதம் படம் காட்டுவார்களாம்........

பாம்புக்குப் பல்லில் விஷம் தேளுக்கு (வாலில் கொடுக்கு) விஷம் அரசியல் வாதிக்கு.................? நாக்கில் விஷம் அதிலும் அரசியல் பேசும் சினிமாவாதிகளுக்கோ  உடல் முழுக்க விஷம்........... 

ஓன்று அரசியல்வாதியாக இருக்கவேண்டும் இல்லையேல் சினிமாவாதியாக  இருக்கவேண்டும் சினிமாவில் இருந்துகொண்டு அரசியல் பேசி நாட்டின் தலைவிதியை தீர்மானிக்க நினைப்பது நாடு என்ன சினிமா கொட்டகையா...? சினிமாவை துச்சமாக மதித்து அரசியலுக்கு வந்தவர்களே இங்கு மதிக்கப்பட்டார்கள்...இன்றும் வாழ்த்தப்படுகிறார்கள்  அரசியல் பேசும் இந்தச் சினிமாவாசிகள் எப்போது படம் எடுப்பார்கள்? எப்போது படம் காட்டுவார்கள்?... அவர்களுக்கே தெரியாது.

இவ்வாறாக மாணவர்கள் போராட்டங்கள் யாரும் எதிர்பார்க்காமல் எழுசிகொண்டது.அது அமெரிக்கத் தீர்மானம் போல் நமுத்துப் போகுமா...? அல்லது நல்லதோர் விடிவுகாலம் பிறக்குமா...? வரும்காலம் கட்டாயம்  பதில் சொல்லும்................வெற்றி நமேதே! நம்புவோமாக..! 

 

மாணவர்கள் போராட்டம் அரசியல்வாதிகளை மூச்சுத்திணற வைக்கிறது-கமல்#ஏற்கனவே நமக்கும் அவங்களுக்கும் வாய்க்கா தகராறு இருக்கு!
பள்ளி கல்லூரி மாணவர் போராட்டங்களை பார்க்கும்போது மனிதம் இன்னும் செத்துவிடவில்லை என்ற உணர்வு எழுகிறது !!!
மாணவர்களின் போராட்டங்களை திசை திருப்பும் அரசியல் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம்- தபூ n FB
அரசியலை விலக்கி ப்ரச்னைகளை விளக்கி தமிழகத்தை கலக்கிவரும் மாணவர் போராட்டங்கள் தமிழீழம் எனும் பூட்டை திறக்கவல்ல "பொற் key
தமிழக மாணவர் போராட்டங்கள் மத்திய அரசை அசைத்துப்பார்த்தாலே வெற்றிதான் # ஜெனீவா குப்பைதான்
தமிழ்நாட்டு மாணவர் போராட்டங்கள் தீவிரவாத செயலாம்: இலங்கை தூதர்#யோவ் நீ எல்லாம் என்ன படிச்ச அப்பாவி மக்களை கொல்லறது தான்யா தீவிரவாத செயல்
இலங்கைக்கு எதிராக இத்தனை போராட்டங்களையும், பரபரப்பையும் ஏற்படுத்த காரணியான அந்த எட்டு மாணவர்களை மறுபடியும் வணங்குகிறேன்!!
அரசியல் கட்சிகள் மட்டுமே நாட்டின் கொள்கைகளை தீர்மானிக்க முடியாமல் போகும் நிலை வரவிருப்பதை மாணவர் போராட்டங்கள் உணர்த்துகின்றன!
புலவர் சா இராமாநுசம்(முகநூல்)
ஒட்டுமொத்த மாணவரும் கிளம்பி விட்டார்-இன்று
ஊர்தோறும் விரதமென ஒன்று பட்டார்
பட்டுமெத்தை பதவிசுகம் தேடீ யல்ல!-அவர்
படிக்காமல் பட்டம்பெற விரும்பி அல்ல
திட்டமிட்டு தினந்தோறும் சிங்கள வெறியன் -பெரும்
தீங்குதனை தமிழருக்கு இழைக்கும் சிறியன்
கொட்டமிடும் பக்சேவை குற்றக் கூண்டில்
கொலைக் குற்றவாளியென நிறுத்தல் வேண்டி!

..............................புலவர் சா இராமாநுசம்
 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1