google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அம்மா! தாயே!வாழ்த்திய வாயும் தூற்றும்

Friday, April 26, 2013

அம்மா! தாயே!வாழ்த்திய வாயும் தூற்றும்

http://www.netanimations.net/Rain-on-my-Parade-animation.gif


மாமன்னரின்
அந்தப்புரமும்
நொந்தப்புரமாகிவிடும்
மாதம் மும்மாரி
மழை பெய்யவில்லை எனில்....

http://dl4.glitter-graphics.net/pub/2927/2927774q0x7xfjh8d.gif
அம்மா! தாயே! என்று
வாழ்த்திப்பாடும் வாயும்
சும்மா சொன்னதாக
தூற்றிப் பாட துணியும்..



அதனால்தான்
இங்கே
மழையில்லா காலத்தில்
அடைத்து வைத்த காவேரியை
அழைத்து வர அறிவிக்கை
உண்ணாவிரதம் போராட்டம்
இல்லையேல்
அரசுபாடு திண்டாட்டம்
கடவுள்கூட காணாமல் போவார்


குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்    

கவிதை தந்த குறள் 18:


சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
 மு.வ உரை:


மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
சிந்திக்க வைக்கும் நிழற்படம்


No Grass by 3 Joko (3Joko)) on 500px.com
thanks-500px-No Grass by 3 Joko
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1