இன்று பஞ்சம் வந்தால்
இங்கே பாரி வள்ளலும்
மீண்டும் பிறந்திருந்தால்
முல்லை கொடிக்கு எங்கே
தேர் கொடுப்பார்...?
அப்படியே கொடுத்தாலும்
அதனிடம் வாடகை கேட்பார்?
மயிலுக்கு போர்வை கொடுத்த
மன்னரும் இன்றிருந்தால்...
மயில் தோகையைப் பிடுங்கிடுவார்.
இன்று நாட்டில்
வாக்குறுதி கொடுப்பவர்களே
வள்ளல்கள் ஆகிறார்கள்
அடிக்கல் நாட்டுவதிலும்
அறிவிக்கை விடுவதிலும்
அரசியல் செய்கிறார்கள்
இனி
மழை பொய்த்தால்தான்
பஞ்சம் என்பதில்லை
ஆளும் அரசு பொய்த்தாலும்
அந்த நாட்டில் பஞ்சம் வரும்
டாஸ்மாக் கடைகள் பெருகிவிட்டாலும்
கஞ்சித்தொட்டிகளும் பெருகிவிடும்
தொட்டிதான் இருக்கும் கஞ்சி இருக்காது.
அப்போது
வள்ளல்கள் எல்லாம்
கருமியாகிவிடுவார்கள்....
மதுக்கடைகளுக்கு
பூட்டு போடுபவர்கள்
ஒரு கையில் திண்டுக்கல் பூட்டு
இன்னொரு கையில் பீர் புட்டி
இவர்கள் இன்றைய வள்ளல்கள்
தள்ளாடாமல்
நிற்க முடியாதவர்கள்
நாளை நாட்டுமக்களுக்கு
நல்லது செய்ய நினைப்பவர்களாம்
குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்
கவிதை தந்த குறள் 19:
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்சாலமன் பாப்பையா உரை:
வானம் வழங்கா தெனின்.
மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |