நிறையக் கடவுள்கள் இருப்பது
கடவுள்களுக்கு நல்லதல்ல
யார் பெரிய கடவுள் என்று
கடவுள்களுக்குள் சண்டை வரும்
(கடவுள் சண்டையாவது
கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும்
கடவுள்வாதிகள் சண்டை
பெரிய தொல்லையாக இருக்கும்
யார் குண்டு வெடித்தது..? என்று
ஆய்வு செய்வதற்குள்
அடுத்தக் குண்டு வெடித்துவிடும் )
நிறையச் சாதிகள் இருப்பது
சாதிகளுக்கு நல்லதல்ல
யார் உயர்ந்த சாதி என்று
சாதிகளுக்குள் சண்டை வரும்
(உயர்ந்தசாதி தாழ்ந்தசாதி என்று
சண்டை போட்டாலும் பரவாயில்லை
தாழ்ந்த சாதிகளில் யார் உயர்ந்த சாதி?
தரித்திர சண்டை உடையும் மண்டை)
நிறையக் கட்சிகள் இருப்பது
கட்சிகளுக்கு நல்லதல்ல
அரசியல்வாதிகளுக்குள்
கூட்டணி சண்டை வரும்
(கூட்டணி சண்டை
வந்தாலும் பரவாயில்லை..
எந்தக் கூட்டம் நல்ல கூட்டம்
கண்டுபிடிப்பது பெரிய திண்டாட்டம்)
நிறையப் பெண்கள் இருப்பது
பெண்களுக்கு நல்லதல்ல
ஆண்களுக்கு அவர்கள்
அடிமையாக வேண்டி வரும்
(அடிமைகள் பரவாயில்லை
அய்யகோ...பாலியல் வன்கொடுமை
வயது வித்தியாசமின்றி பரவிவிடும்)
நிறைய வலைப்பதிவுகள் இருப்பது
கணனிக்கு நல்லதல்ல
கண்ட வைரைஸ் வந்து நுழையும்
(ஆண்டி-வைரைஸ் இருந்தாலும்
மாமா-வைரஸ் இருந்தாலும்
காதல் வைரஸை கண்டால்
அதுவும் பல்யிளித்து வழிவிடும் )
நிறையக் கவிஞர்கள் இருப்பது
நாட்டுக்கு நல்லதல்ல
அதுவும் என்னைப் போல்
நையாண்டிக் கவிஞர்கள்
நாட்டுக்கு தேவையில்லை
(எதையும் இப்படியே
எடக்கு மடக்காய் பேசி..
கவிஞ்சர்கள்
இந்த நாட்டின் சாபக்கேடு
மிகப்பெரிய சோம்பேறிக்கூட்டம்)
(அப்பாடா...
உள்குத்தோ வெளிக்குத்தோ
நம்ம தமிழ் சினிமா மாதிரி
ஒரு குத்துப்பதிவு போட்டாச்சு..
சாடை மாடையாய்
எல்லோரையும் திட்டிவிட்டு..
நம்மளை நாமே திட்டலைனா
அது நல்லாயிருக்காதில்லையா...?)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |