google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 7-D சினிமா-அனுபவம் புதுமை

Wednesday, May 22, 2013

7-D சினிமா-அனுபவம் புதுமை

https://static.crazeal.com/94/41/1364753754194.jpg  
3-D சினிமா-போயே போச்சு இப்ப 7-D சினிமாதான் புது சுகண்ணா புதுசு 
7-D படம் நவீன தொழில்நுட்பத்தில் அதற்கென்றே வடிவமைக்கப்பட்ட திரையரங்குகளில் சினிமா பார்க்கும் புது அனுபவத்தைதருகிறது.

freeonlinephotoeditor

வெளிநாடுகளில் இது முன்பே வந்துவிட்ட தொழில் நுட்பமாயினும் இந்தியாவுக்கு கல்கத்தா,மும்பாய்,பெங்களூரு,...போன்ற பெரு நகரங்களில் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரையரங்கம் இந்தியாவில் முதன் முதலாக சென்னை அபிராமி மாலில் நேற்று இசையமைப்பாளர் தேவா அவர்களால் திறக்கப்பட்டுள்ளது ....

http://www.7dcinema-oasis.com/_ph/1/2/709859963.jpg

மிகப் பெரிய எல்.இ.டி. திரை...படத்தின் இயல்புக்கு ஏற்று அசைந்தாடும் இருக்கைகள் கொண்ட  சுமார் முப்பது பேர் அமரக்கூடிய சிறிய திரையரங்கம்....சிற்றோரும் பெரியோரும் அவர்களோடு பத்து நிமிடத்துக்கு நானும் ஒரு குழந்தையாக.. மாறிவிட்டேன்

http://amybohac.wikispaces.com/file/view/STALAGMITES.jpg/33217923/STALAGMITES.jpg

ஒரு குகைக்குள் திறந்த வேகனில் பயணிக்கும் படம்..........ஆரம்பமே அதிரடியாக கரடுமுரடான பாதையில் போடப்பட்ட தண்டவாளத்தில் குகைக்குள் அழைத்துச் செல்கிறார்கள்...காதை கிழிக்கும் சப்தத்துடன் அந்த பாழடித்த குகைக்குள் பயணம்..நிறைய பெருச்சாளிகள் ஓடுகின்றன அவைகளின் இரைச்சல் ..கூவத்துக்குள் நாம் நடந்து போனால் எப்படியிருக்கும் அப்படியொரு உணர்வு...அப்படியே மின்னல் அடிக்க..நமக்கும் கண்களில் மின்னல் தாக்கிய காட்சி...மழை பெய்யும் சப்தம்..நாமும் மழைச்சாரலில்  நனையும் உணர்வு...அப்படியே பயணம் ஒரு பணிக்குகைக்குள் செல்கிறது...அங்கே ஒரு பனிக்கரடி நம்ம தாக்க வரும் பயங்கரம்..நம்மைத் தழுவும் பனிக்காற்று அதன் யதார்த்தமான குளுமை இன்னும் தொடகிறது...அனகோண்டா பாம்புகள் மத்தியில் த்திரிலிங் பயணம்.. இத்தனையும் பத்து நிமிடத்தில் முடிகிறது..ஒரு புதுமையான அனுபவம்

https://static.crazeal.com/92/98/1364817749892.jpg
                       thanks-YouTube-by 7DCinemas
இதில் என்ன புதுமை...? என்றால் ஏழு பரிணாமங்களை காண்பிக்க சிரத்தை எடுத்து தயாரிக்கப்பட்ட கிராபிக்ஸ் வீடியோ கிளிப் வித்தியாசமான உணர்வு உருவாக்கும் இருக்கைகள் கொண்ட திரையரங்கம் ..தத்ரூபமாக புயல்,பனிப்பொழிவு,மின்னல்,மழைச்சாரல்..
இவைகளை உணரும் தன்மை...இங்கே புதுமை 

                         thanks-YouTube-by 7DCinemas

நீங்கள் பெரியவர்களாக இருந்தால் மீண்டும் குழந்தையாக பத்து நிமிடங்கள் குதுகளிக்கலாம்...ஆனால் பத்து நிமிடம் படம்  பார்க்க ஒருவருக்கு டிக்கெட் விலையோ ரூ.150/-  பணத்தை நினைத்தால்  குதுகளம்...ஒடும்களம்  ஆகலாம்...குழந்தைகளுக்கு பிடிக்கும் பெரியவர்களுக்கு இடிக்கும் 
(ஒரு 7-D திரையரங்கில் என்ன உணர்வுகளை நீங்கள் அறிவீர்கள் என்பதை இங்கே காணலாம்)
                          thanks-YouTube-by SİNEMA SİSTEMLERİ
(ஆனால்..இந்த அளவுக்கு இப்போது நாம் இந்த திரையரங்கில் 100%  முழுமையாக உணரவில்லை என்றாலும் இனிமேலும் வரலாம் )

என்னுடன் 7-பேர்களுடன் குடும்பத்தோடு வந்த அனைவரும் ஏக குஷியில் ஆனால் அந்த குடும்பஸ்தரோ ஏக கடுப்பில்...அங்கே 7-D கண்ணாடிகளை சேகரிக்கும் பையனிடம் ...என்னப்பா இப்படி முடிச்சிட்டீங்க..நான் அவதார் மாதிரியில்ல இருக்கும் என்று நினச்சேன்...காசு போச்சப்பா என்றும் இன்னொரு தடவையாவது  காட்டுங்கப்பா என்றும்  அடம் பிடித்துக்கொண்டிருந்தார்
நேரம் படம் பார்க்க போன எனக்கு படம் ஆரம்பிக்கும் நேரமானதால் நான் அடுத்த அரங்குக்கு பிடித்தேன் ஓட்டம்
என்றும் புதுமைக்கு விலை அதிகம் தான் 7-D வந்து 3-D யை காலம் கடத்துகிறது.  அனைத்து இடங்களிலும் இது பெருகி வரும்போது விலை மலிவு வரும் அதுவும் விரைவில் வரும் அதுவரை காத்திருக்க வேண்டாம் புதுமையை அனுபவியுங்கள்
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1