இதுவும் நேரம் படத்தின் விமர்சனம்தான்..இதுபோன்ற வித்தியாசமான படத்துக்கு உங்களோடு நானும் வித்தியாசமாக அசைபோடும் விமர்சனப் பதிவு....
நேரம்-யாருக்கு இங்கே போதாத நேரமோ இப்படி மிக குறைந்த பட்ஜெட் படங்கள் தமிழில் ஜெட் வேகத்தில் வந்து குவிகின்றன...மிகப் பெரிய பட்ஜெட்டில் பெரிய நட்சத்திர நடிகர்களை வைத்து வெளிநாடுகளில் காட்சிகளை சுட்டு தீயா வேலைசெய்தும் பாரின் சரக்கோடு ரூம் போட்டு கதை எழுதியும் பாவம் படம் ஊத்திக்கிறது...இது எல்லாம் தெரிந்த வலியோர்களுக்கு கெட்ட நேரம்...
.மிக குறைந்த பட்ஜெட்டில் லைட்-வெயிட் கதையுடன் அறிமுகமில்லாத புதுமுக நாயகர்கள் வைத்து நம்ம தெருக்களிலும் சந்து பொந்துகளையும் காட்டி இப்படி நேரம் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியடைவது....எளியோர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் நல்ல நேரம் ..உண்மையில் இதெல்லாம் நேரம்பார்த்து சரியாக அடித்து வீழ்த்தும் மாங்கா...அதிஸ்டத்தில் அதுவாக விழும் தேங்கா அல்ல
முதலில் நேரம் திரைப்படத்துக்கு படம் தமிழில் வெளிவரும் 10 நாட்கள் முன்பே கேரளாவில் மலையாள பதிப்பு வெளிவந்ததால் அதை மையமாகக் கொண்டு நான் எனது வலைப்பதிவில் நேரம் (தமிழ்)-திரை முன்னோட்டம் வெளியிட்டேன்...நல்ல வரவேற்பு கொடுத்த உங்களுக்கு நன்றி சொல்லிவிடுகிறேன்
அதில் நான் சொல்லியது மலையாள சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சனர்கள் பார்வை ஆனால் நமது தமிழ் வலைப்பதிவர்களும் ரசிகர்களும் மிகச் சிறந்த படம் என்று தீர்மானித்துள்து முழுக்க முழுக்க உண்மைதான்
மலையாளப் படங்களில் உள்ள யதார்த்தமும் தெலுங்கு படங்களில் உள்ள மைனஸ்-லாஜிக் நகைச்சுவையும் கவர்ச்சியை கொஞ்சம்தள்ளி விரசமற்ற காதலுடன் தமிழுக்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்தரன் படைத்துள்ள த்திரிலர்....காதல்... நகைச்சுவைத்...சினிமா!
தமிழ் சினிமாவின் ரசனை அறிந்து எடுக்கப்பட்ட மலையாள ஆப்பமும் கடலைக் கறியும் போல் நேரம் -காரம் நிறைந்த நல்ல (நகைச்)சுவைப் படம்
திரைக்கதை...ஒரே நாளில் நடக்கும் நிகழ்வு...சுவாரசியமான வசனங்கள்..பார்வையாளர்கள் யாரும் எதிர்பார்க்காத திருப்பங்கள் என்று படம் விறுவிறுப்பாக செல்கிறது
கதாநாயகன் வட்டிராஜாவுக்கு பயந்து வேறு வழியில்லாமல் வழிப்பறி செய்ய முயலும் போது கதையில் ஏற்படும் திருப்பமாக அந்த வட்டிராஜா என்ற கொடுரம் + கோமாளி வில்லனின் எதிர்பாராத கிச்சு கிச்சு மூட்டும் மரணம்... இப்படி நிறையச் சம்பவங்கள் யாரும் எதிர்பார்க்காதது
கதை என்று பார்த்தால் எந்த லாஜிக்கும் இல்லாத (அதே நேரம் சப்பு கொட்ட வைக்கும்) சப்பக் கதை... வேலையிழந்த ஒரு வாலிபன் (வெற்றி) வட்டிராஜாவிடம் கொடுக்க வேண்டிய ரூபாயை வழிப்பறியில் இழந்து தவிக்கும் நிலையும் வீட்டை விட்டு அவனை கைபிடிக்க வெளியேறிய காதலி(வேணி) தன் நகையை பறிகொடுக்கும் நிலையையும் அந்தக் கெட்ட நேரத்திலும் அவர்களுக்கு நல்ல நேரம் எப்படி வருகிறது...? அவர்கள் எவ்வாறு இணைந்தார்கள்? என்று சிரிப்பூக்கள் சிதறிக்கிடக்கும் பூந்தோட்டம்...படம் நேரம்
நிவின்- இயல்பான நடிப்பு ..தமிழ் சினிமாவுக்கு நேரம் மூலம் இவர் வந்த நேரம் இவருக்கும் நமக்கும் நல்ல நேரம் ...புது முகம் என்ற முகமூடி இவர் முகத்தில் இல்லை அனுபவ நடிகர்களையும் மிஞ்சி விஞ்சித்து நிற்கிறார்...நடிப்பு மேல் உள்ள அக்கரை இவரது ஒவ்வொரு செயல்களிலும் அற்புதம்
நிஸ்ரியா-தமிழில் ஒரு மிகப் பெரிய இடம் இந்த அழகு அம்மணிக்கு அமையும் அப்படியொரு அழகும் முகபாவனையும் ஒருங்கே அமைத்த நாயகி...ஆனால் நிறைய நேரம் இயக்குனர் இவரை கார் டிக்கியில் அடைத்து வைத்துள்ளார்..(உண்மையில் இதுதான் அம்மணிக்கு நல்ல நேரம்...ரொம்ப மூஞ்சியக் காட்டினாலும் நம்ம வாலிப ரசிகசிகாமனிகளுக்கு அடச்சீ..இந்தப் பழம் புளிக்கும் கதையாகிவிடும்)
சிம்ஹா-வட்டிராஜாவாக நடித்துள்ள (காமெடி) வில்லன்..ஆனால் அசத்தலான வில்லத்தனமான நடிப்பு
தம்பி ராமையா-சரவனர்ர்ர்ர்ர்...ராக நடித்துள்ள இவருக்கு ரொம்ப நாளைக்குப் பிறகு நடிக்க நல்ல கதாப்பாத்திரம் கிடைத்துள்ளது..
அவரது துடிப்பான நக்கலுக்கும் நடிப்புக்கும் இதுவே நல்ல நேரம் வீட்டில் KNIFE-வோடு வரும் அவரது WIFE-போடு அவர் போடும் சாகசங்கள்... காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கட்ட (குஞ்சு) வோடு அவர் செய்யும் வாக்குவாதங்கள் அத்தனையும் சுவையோ சுவை
நாசர்- கொஞ்ச நேரமே வந்தாலும் தண்ட.....ம் (DHANDA M) அதாவது M.தண்டபாணியாக வரும் இவருக்கும் நேரம் நல்ல நேரம் எப்போது V.K.ராமசாமியாக மாறினார்...? இவரது பாத்திரம் படத்துக்கு முக்கிய திருப்பம்...இவர் பேசும் வார்த்தைகள் அத்தனையும் நம்மளை வாய்விட்டு சிரிக்க வைக்கும்
ஜான் விஜய்-காவல் அதிகாரியாக நடித்துள்ள கட்ட (குஞ்சு) நடிப்பிலும் செம காட்டு காட்டுகிறார்...நேரம் கிடைக்கும் போது அவரிடம்...
அண்ணேன்..நீங்க நல்லவரா? கெட்டவரா? என்று அவரைப்பார்த்து கேட்கவேண்டும்
ஒரு வார்த்தைப் பேசினாலும் மார்ச்சுவரி டாக்டர் மனோபாலா மனதில் நிற்கிறார் அவரது நேரம் அப்படி சார்லி, கிரேன் மனோகர் இவர்களுக்கும் நல்ல நேரம்தான்
ராஜேஷ் முருகேஷின் இசையில் கதைக்கு ஏற்ற இசையும் பாடல்களும் நல்ல உயிரோட்டம் ஐந்து பாடல்களும் அருமை அதிலும் படத்தோடு இணையாத போதிலும் பிஸ்தா பாடல் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் நன்றாக உள்ளது ஒளிப்பதிவும் அட்டகாசமாக இருக்க இத்தகைய அருமையான நேரம் படத்தை தமிழுக்கு தந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்தரனுக்கு நல்ல நேரம்
thanks-YouTube-by thinkmusicindia
நேரத்தை சரியான நேரத்தில் தமிழுக்கு தந்த ரெட் ஜெயன்ட்க்கும் நல்ல நேரம்...........இரண்டுமணி நேரம் சிரிக்க வைத்து நேரம் போவதே தெரியாமல் போகும் நேரம் படம் பார்க்க போனவர்களுக்கும் நல்ல நேரம்...வட்டிராஜாவின் திடீர் மரணத்தை என்னால் மறக்கமுடியவில்லை நினைத்து நினைத்து சிரிப்பை அடக்க முடியவில்லை அதேநேரம் இப்படி ஆமை வேகத்தில் எழுதிய இந்தப் பதிவுக்கு அட..தேவுடா..நல்ல நேரமா? கெட்ட நேரமா? தெரியலையே
(யோவ்..பரிதி....இத்தோடு முடிச்சிக்கிட்டா எங்களுக்கு நல்ல நேரம்...இன்னும் நீட்டி முழங்கினால் அது உனக்கு கெட்ட நேரம்)
சரி...நீங்கள் சொல்லுங்கள் (படம் பார்த்தவராக இருந்தால்...)
உங்கள் பார்வையில்.........
நேரம் திரைப்படத்தின்
வெற்றி ரகசியம் என்ன..என்ன..?
ஒருவர் எத்தனை காரணிகளுக்கும் வாக்களிக்கலாம் ..
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி!... நன்றி!!...நன்றி!!!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |