google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: உலகையாளும் ஒரு வரிக்கவிதை

Sunday, May 05, 2013

உலகையாளும் ஒரு வரிக்கவிதை

freeonlinephotoeditor  

ஒரு வரியில் 
ஒரு கவிதையா...?

ஆத்திசூடி-
அது
கவிதையல்ல 
சுற்றும் உலகின் 
அச்சாணி  

இவ்வுலக மாந்தர்
அறியாமை அகல
அறவழியில் செல்ல 
உயிர் எழுத்துக்களால் 
உருவாக்கப்பட்ட 
அறிவைத் தீட்டும் 
சாணைக்கல்...

அதை அறியாதோர் 
உலகில் வாழும் 
உயிருள்ளப் பிணங்கள் 
அவ்வழி போகாதோருக்கு 
எவ்வழியும் உய்வில்லை

freeonlinephotoeditor

ஔவையார்-
தமிழ்தாயின்
உண்மை உருவம் 
அவள் பார்வையில் 
உலக மக்கள் 
அனைவரும் குழந்தைகள்

இன்றைய 
ஹைக்கூ கவிதைகளை
என்றோ எழுதிவைத்தவள் 

இன்றைய 
எஸ்.எம்.எஸ் கவிதைகள்
என்றுகூடச் சொல்லலாம் 

அன்னையின் கூற்று 
கற்றது கையளவு கல்லாதது உலகளவு 
இன்று ஆங்கில மொழியாக்கப்பட்டு 
நாசாவின் ஆய்வுக்கூடத்தில்....
What you have learned is a mere handful; 
What you haven't learned is the size of the world

அத்தகைய தமிழ் மூதாட்டியை 
அம்மா போற்றி வணங்கியது 
தமிழ் உலகுக்கு பெருமை

 


கவிதை தந்த குறள் 28:

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
கலைஞர் உரை:
சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.
**********************************************************************
உயிரெழுத்துக்கள் ஆத்திசூடி
அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயமிட்டு உண்
ஒப்புர வொழுகு
ஓதுவது ஒழியேல்
ஒள ஒளவியம் பேசேல்
அஃகஞ் சுருக்கேல்
                                          thanks-YouTube-by kvnvasu

குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்     

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1