ஐம்புலன்களையும் அடக்கியவரே
அகிலம் ஆளும் அருகதை கொண்டவர்....
அய்யன் வள்ளுவர் வாக்கு
அதை நினைத்தேன்
அடக்கமுடியாமல் சிரித்தேன்
ஆசைகள் துறந்தவர்
ஆண் பெண் பாகுபாடின்றி
நாக்கை புரட்டி நயமாகப் பேசி
குண்டக்க மண்டக்க யோகம் என்று
பக்தைகளுடன் படுக்கையில் புரண்டவர்
தங்க அரியாசனத்தில்
தங்க கிரீடம் தலையில் அணிந்து..
ஆதி(ன) மடங்களுக்கு அதிபதியானதும்...
அதிரடியாய் கீழே விழுந்ததும்
ஆனாலும் நிற்கவில்லை
அவரின் பல்லாக்கு பவனி
அவர் செய்யும் அக்கிரமங்களுக்கு
அகில உலகிலும் கிளைகள்
ஐயாயிரம் கோடிக்கு மேல் சொத்து
அத்தனையும் அவர் மேல் பித்து
பகுத்தறிவற்றவரின் சொத்து.
அந்த மெஞ்சானியை நினைத்தேன்
அடக்கமுடியாமல் சிரித்தேன்
ஆனால்
அய்யன் சிலை அருகினிலே
முக்கடல் சங்கமிக்கும் குமரியிலே
ஆற்றல் மிக்கத் துறவியின்
அறிவு ஆலயம் கண்டேன்
விழிமின், எழுமின்..என்று
விவேக உரையும் கேட்டேன்..
அவர்தான் மறைந்தாலும்
அவரின் அறிவுஒளி..
கல்விச்சாலைகளாய்
அகிலமெங்கும் ஒளிரக்கண்டேன்
அதனால்தான்
அய்யன் வள்ளுவரும்
அவர் அருகே போய் நின்றாரோ
இவரை நினைத்தேன்..
என் நாத்திகத்தை
கொஞ்சநேரம் தள்ளி வைத்து
நானும் சிந்தித்தேன்...
கவிதை தந்த குறள் 27:
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்கலைஞர் உரை:
வகைதெரிவான் கட்டே உலகு.
ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்
****************************************************************************
கவிதைப் பக்கம்...........
****************************************************************************
மனிதா! மனிதா!
நீ அமர்ந்திட
என் உயிரை
ஏன் எடுத்தாய்...?
மரத்தின் வேதனை
மனிதர்களுக்கு தெரியாதோ...?
ஆனால்
மனிதனின் வேதனை
மரத்துக்கு தெரியும்
நிற்க நிழலும்
புசிக்க கனியும் தரும்
மனிதருக்கு இல்லாத அபிமானம்
மரத்துக்கு உண்டு ...
கவிதைப் பக்கம்...........
****************************************************************************
மனிதா! மனிதா!
நீ அமர்ந்திட
என் உயிரை
ஏன் எடுத்தாய்...?
மரத்தின் வேதனை
மனிதர்களுக்கு தெரியாதோ...?
ஆனால்
மனிதனின் வேதனை
மரத்துக்கு தெரியும்
நிற்க நிழலும்
புசிக்க கனியும் தரும்
மனிதருக்கு இல்லாத அபிமானம்
மரத்துக்கு உண்டு ...
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |