அறிஞ்சர் அண்ணா-வின்
பேரறிவையும்
பெருந்தன்மையும்
அறிந்திடாதவர் எவர்...?
அத்தகைய
குனக்குன்றும்
ஆத்திரம் கொண்ட
அறிய நிகழ்வு உண்டு.
அதிலொன்று...
புகைவண்டி பயணத்தில்
அவர் அருகிலிருந்த
ஆங்கிலம் கற்ற மேதாவி
கால் மேல் கால் போட்டு
அண்ணாவின் மீது
காலால் முத்தமிட்டு ...
ஐயம் சாரி.. (I am sorry) என்று
வண்டிவண்டியாக
குப்பைக்கொட்டினார்..
பொறுமையின் சிகரத்திற்கும்
பொசுக்கென்று கோபம்..
ஆனாலும்
அந்தக் குனக்குன்றோ
கோபத்தைப் புதைத்துவிட்டு
நகைச்சுவையுடன்
நாசுக்காகச் சொன்னது....
ஐயம் நாட் எ லாரி...
டு கேரி யுவர் சாரி
(I am not a lorry
to carry your sorry) என்று...
உயர்ந்தோர் உள்ளத்தில்
உருவாகும் கோபம்
ஒரு நிமிடம்கூட நிலையாது
ஆனாலும்
இன்றைய
சினிமா பிரபலங்கள்
அரசியல் பிரமுகர்கள்
கோபத்தில் பொங்குவதும்
ஆத்திரத்தில் அலம்புவதும்
அதையே மனதில் வைத்து
பழி வாங்க நினைப்பதும்....
ஆகச்சிறியோர் செயலாகும்
கவிதை தந்த குறள் 29:
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளிகலைஞர் உரை:
கணமேயும் காத்தல் அரிது.
குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.
குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்
thanks-YouTube-by Sembian R
(அன்பர்களே..பேரறிஞர் அண்ணா பற்றிய இந்த நிகழ்வு நான் சில புத்தகங்களில் அறிந்துகொண்டதே...இதில் ஏதேனும்தவறு இருந்தால் உடன் கருத்திட்டு தெரிவிக்கவும்...)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |