எதிர்நீச்சல்-இங்கே நான் கதை சொல்ல வரவில்லை ஆனால்
படம் பார்க்கும் போதே பின்னால் என்ன நடக்கும் என்பதை பார்ப்பவர்களால் முன்னமே அறிந்து தீர்மானிக்கக் வல்ல திரைக்கதை உள்ள ஒரு சாதாரண திரைப்படம் எப்படி ஒரு சிறந்த வெற்றிகரமான பொழுதுபோக்கு திரைப்படம் என்று அனைவரது பாராட்டையும் பெற்றது...? அப்படி என்னதான் இருக்கு எதிர்நீச்சல் திரைப்படத்தில்..? இதைப்பற்றி இங்கே கொஞ்சம் பார்ப்போம்
இத்திரைப்படத்தின் வெற்றிக்கு இப்படத்தில் பங்கேற்ற வெளியே தெரியும் தெரியாத அனைத்து பங்காளிகளும் அவர்களது உண்மையான உழைப்பும் உன்னதக் காரணம்
இயக்குனர் வெற்றிமாறனிடம் முன்னாள் உதவியாளராக இருந்த ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் கதை-திரைக்கதை-உரையாடல் எழுத்து-இயக்கம் என்று எதிர்நீச்சல் திரைப்படத்தில் எல்லாம் அவரே என்று வெளியே தெரியாத ஜொலிக்கும் நட்சத்திரமாக இருக்கிறார்
இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார் என்பதைவிட அவருக்காகவே கதை அமைக்கப்பட்டுள்ளது போன்றும் அக்கதைக்கு ஏற்ற நாயகனாக கனகச்சிதமாக பொருந்தியுள்ளார் எதிர்நீச்சல் போட்டு முதல் இடத்தை வென்றான்
சிவகார்த்திகேயன் என்று இன்று விளம்பரம் செய்யும் தகுதியை பெறுகிறார். இனி மிகப்பெரிய உச்சம் நோக்கி செல்லும் அவரது பயணம் (ஆனால் சினிமாகடலில் எழும் பொறாமை சுனாமியை எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவாரா..? போகப்போக தெரியும்.)
கதை-குஞ்சிதபாதம் என்ற பெயர் சொல்லவே அவமானமாக நினைத்து ஹாரிஷாக பெயர் வைத்துக்கொள்ளும் ஒரு உப்பு உறைப்பு இல்லாத காதலும் நகைச்சுவையாக மேலோட்டமானதாக செல்வது போல் தெரிந்தாலும் உண்மையில் அதில்(சிவகார்த்திகேயன்) ஒரு இளைஞ்சனின் வெற்றியின் தன்னம்பிக்கை மறைந்து கிடக்கிறது
உள்ளீட்டு கதையாக இன்னொரு வெற்றி பெற்ற பெண் வள்ளியின் (நந்திதா) துவண்டுபோன தோல்விக்கதையும் ஒளிந்துகிடக்கிறது
திரைக்கதை வசனம் நல்ல நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கிறது.நீ மாரத்தானில் ஓட வேண்டும் என்று வள்ளிக்கு பயம் எங்கே நீ வள்ளியுடன் ஓடிவிடுவாயோ என்று கீதாவுக்கு பயம் இப்படி படம் முழுக்க சிரிப்பூக்கள் சிதறிக்கிடக்கின்றன அதே நேரத்தில் சிவகார்த்திகேயன்-பிரியா ஆனந்த் காதல் விரசமின்றி விதைக்கப்பட்டுள்ளது
பாத்திரங்கள் அறிமுகமாவது தொடர் ஓட்டமாக வந்தாலும் அவரவர் கதையை அவர்கள் பங்குக்கு ரீலே ரேஸில் ஓடுபவர்கள் போல் படத்தின் வெற்றிக்கு உதவுகிறார்கள்..தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் தாளிக்கிறார்...நயன்தாரா பங்கு மந்தம்
படத்தில் இசையின் பங்களிப்பு அளவிடமுடியாதது.அனைத்துப் பாடல்களும் அனிருத் இசையில் கதைக்கு உயிரோட்டமாக..அதிலும் வெளிச்சப்பூவே வா வித்தியாசமான குரலில் தேனமுது.
இன்னும் படத்துக்கு பெருமை சேர்த்தவர்கள் நிறைய ஒளிப்பதிவு வேல்ராஜ் பாடல் காட்சிகள் மாரத்தான் காட்சிகள்...காட்சிக்கு காட்சி வண்ணத்துப்பூச்சி போல் கண்ணாமூச்சி காட்டுகிறது.. காண்பதற்கு களிப்பூட்டுகிறது.
thanks-YouTube-by sonymusicindiaSME
இனி தொடர்ந்து தமிழில் எதிர்நீச்சல் போன்ற படங்களாக வந்து குவிந்து ரசிகர்களை மூழ்கடிக்க வாய்ப்புள்ளது....பிறகு அவைகளே அறுவைகளாகி ரசிகர்கள் தப்பித்தால் போதும் என்று எதிர்நீச்சல் போடவேண்டிய நிலையும் வரும்
கருத்துக்கணிப்பு-
அன்பர்களே!..நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டு....ஒருவர் எத்தனை காரணிகளுக்கும் வாக்களிக்கலாம்.....
எதிர்நீச்சல் வெற்றிக்கு காரணம்...?
வாக்களித்த அனைவருக்கும் நன்றி....முடிவு-14-05-2013
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |