google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கலைஞர் சொன்ன அணியும் பிணியும்

Monday, May 20, 2013

கலைஞர் சொன்ன அணியும் பிணியும்

freeonlinephotoeditor  

(இது நகைச்சுவைப் பதிவு...மற்றபடி யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல...எதற்கும் அரசியல் விசுவாசிகள் படிக்க வேண்டாம்) 

அடேய்...தம்பி அறிவுச்செல்வா!
நம்ம தலீவரு கலைஞரு
இப்படிக் குழம்பியதையும்
இப்படிப் புலம்பியதையும்
இதுவரை நான் பார்த்ததில்லை

அன்பு உடன்பிறப்புகளுக்கு
அதிலும் அவுங்க
சொற்பொழிவாளர்களுக்கு
அவரு சொன்ன...
அணியும் பிணியும் கதை
கேட்க நல்லாத்தான்  இருக்கு
கேப்பையில நெய் வடிஞ்ச 
கேளிக்கக்  கதையாட்டம் ...


http://usimages.jagbani.com/admincontrol/all_multimedia/2013_5image_14_45_272772578rr-ll.jpg

ஊருக்கு ஊர் உருவாகின்ற
அணிகள் ஒழியவேண்டும்
என்று சொன்னாரே...
எந்த அணியைச் சொன்னாரு?
நம்ம ஊரு பசங்க ஆடுறாங்களே
கிரிக்கெட் அணியச் சொன்னாரா...?
ஒருவேளை ஐ.பி.எல்-ல
சூதாட்டமாடிய அணியை  
சாடைமாடையா 
சொல்லியிருப்பாரோ..? 

freeonlinephotoeditor

இந்த "அணிகள்" பெருகினால்
இவை "அணிகளாக" இருக்காது
(கழகத்துக்கு) "பிணிகளாக" ஆகிவிடும்
அடேய்..தம்பி அறிவுச்செல்வா!
அவர் சொன்ன 
அணியும் பிணியும் யாரடா...?
அவர்களை ஆட்டும் முனி யாரடா...?
இந்த அணியையும் பிணியையும்
இவர்கள் சரிசெய்வார்களா...?
இல்லையென்றால்
அதுவே இவர்களுக்குச் சனியாகுமா...?

freeonlinephotoeditor  

அதுவாவது பரவாயில்லையடா...
அடுத்து போட்டாரே ஒரு போடு
பெரியார் என்ன சொன்னார்? என்று 
அதுதான் எதுவும் புரியவில்லைய.டா .
அண்ணா சொன்ன
கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு
அதில் கடமையும் கண்ணியமும்
காணாமல் போனாலும்
கட்டுப்பாடு வளரவேண்டும்னு
அய்யா சொன்னாருன்னு 
கூப்பாடு போட்டாரே...தம்பி
சாப்பாடு சரியாகப் போட்டாரா...?

ஈரோடு செயல்வீரர்கள் கூட்டத்தில்
சிக்கன் பிரியாணி  போட்டதில் 
சிக்கல் வந்து வாந்திஎடுத்தார்களாம்

ஏ-அணி பி-அணி என்றுதான்
தலிவரு சொன்ன அணி ஏதோ?
ஏ-அணி என்றால்
அதிமுக அணியா?
அப்ப...பி-அணி என்றால் 
அது  பாமகா கூட்டணியா?

உள்வீட்டு அணிகளை
சரிபண்ணாமவிட்டுப்புட்டு
ஊர் அணிகள அவரு 
எப்படிச் சரிபண்ணுவாரு...?

freeonlinephotoeditor

எது எப்படியோ....?
இந்தத் தொண்ணூறு வயதிலும்  
தொண்டு செய்யத் துடிக்கும்
தலைவரை வாழ்த்துவோம்

இல்லறம் நல்லறமாக
எப்படிக் குடும்பத்தலைவரு
காரணமாகிராரோ
அப்படித்தானோ...
கட்சியும் நல்ல கட்சியாக
கட்சித் தலைவரே காரணம்...?   
அட்வான்ஸ் 
ஹேப்பி பர்த்டே..தலீவரே

(அண்ணேன்..
தமிழ்ல சொல்லுங்க...
அவிய்ங்க..
அணித் தொண்டர்கள்
கோபிச்சுக்கப் போகிறாங்க..
அப்புறம் இதுக்கும் 
அய்யன் குறள் ஒண்ணு
போட மறந்திடாதீங்க....)    

கவிதை தந்த குறள் 41:

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

 
கலைஞர் உரை:

பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்
 

                                         thanks-YouTube-by kalaignarfan1


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1