விஜய் சேதுபதி-
தமிழ் சினிமாவில் நாம் இதுவரை நடிகர்களை மட்டுமே பார்த்திருக்கிறோம் ஆனால் இவர் போன்று சினிமாவின் கதையோடு கதாப்பாத்திராமாக ஒன்றி உயிர்வாழும் ஒருவரைப் பார்த்ததில்லை
ஒரு கணக்காளராக இருந்து சினிமாவை தன் தொழிலாக மாற்றிக்கொண்ட இவர் ஐந்து ஆண்டுகள் பின்னணி நடிகராக இருந்து இன்று முன்னணி நடிகராக மாறியவர்
நடிகர் சிவகுமார் தனது சுயசரிதை நூல்
இது ராஜபாட்டை அல்ல என்பதில் படித்த ஞாபகம்..உயர்ந்த மனிதன் படபிடிப்பில் நடிகர் திலகத்துடன் அமர்ந்து உணவு மேசையில் சாப்பிடும் காட்சி எடுக்கும் போது சிவகுமார் அவர்கள் சாப்பிடுவது போல் நடிக்காமல் இலையில் இருந்த உணவுப் பதார்த்தங்களைப் பாதி உண்டுவிட்டாராம்..அதனால் அடுத்தக் காட்சியின் போது கண்டினியுட்டி இல்லாமல் போனதாம்..அன்று நடிகர்திலகம் கோபத்தில்லும் சிரித்துக் கொண்டு சில விசயங்ககளைச் சொல்லிக்கொடுத்தாராம்
இப்படிச் சினிமாவுக்கு என்று சில விஷயங்கள் இருக்கிறது
சினிமாவில் புரட்சி செய்த ஒரு மிகப் பெரிய நடிகர் திரையில் அழவேண்டிய காட்சிக்கள் வந்துவிட்டால் அவ்வ்வ்வ்...அவ்வளவுதான் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு ஏதேனும் தூணுக்குப் பின்னால் மறைந்து கொள்வார் ..ஆனால் அவரே காதல் என்று வந்துவிட்டால்...ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து.. என்று அப்படியே கதாநாயகியை அள்ளி அனைத்துக்கொள்வார்..சண்டைகாட்சிகள் வந்துவிட்டால் அவருக்குச் சக்கரைக்கட்டி..துள்ளி துள்ளி பத்து பேரை பந்தாடுவார்.
இன்னொரு நடிகரோ நடிப்புச் சக்கரவர்த்தி...அழும் காட்சி வந்தால் அவ்வ்வ்வ்...அவ்வளவுதான் சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று படம் பார்ப்பவர்களையும் பத்து நாளைக்குத் துக்கத்தில் மிதக்க வைப்பார்
இன்னொரு நடிகரோ தலையைத் தடவியே (அவர் தலையைத்தான்) ஸ்டைலு ஸ்டைலுதான் சூப்பர் ஸ்டைலுதான் என்று அதிரடியாக அசத்தினார்...திரையில் சிகரெட்டைத் தூக்கிப்போட்டு வாயில் கவ்வி...திரையுலகில் நடிப்பவர்களையெல்லாம் மண் கவ்வ வைத்தார்
(இது என்ன நடிப்போ அந்த ஆண்டவன்தான் சினிமாவைக் காக்க வேண்டும்)
இன்னொரு நடிகரோ குழந்தையிலிருந்தே நடித்துக்கொண்டிருந்தாலும் இன்று திரையிலும் நிஜத்திலும் விஸ்வரூபமாக மாறி நடிப்போ நடிப்பென்று நடிக்கிறார்...உலகமுழுக்க நானே நாயகர் என்று முழங்குகிறார்...இவர் எப்ப எந்த ரூபம் காட்டுவார் அவருக்கே தெரியாது
அன்று காதலுக்கு மரியாதை கொடுத்து நடித்த இளைய தளபதியும் என்ன ஆச்சோ இன்று சில நேரங்களில் சுறா போல் கடிப்பார்
சிலநேரங்களில் கில்லி போன்று துடிப்பார்....
அய்யோ தலைவா...தலைவாவில் என்ன செய்யப்போகிறாரோ....?
இயல்பாக நடித்துக்கொண்டிருந்த தல...சில நேரங்களில் பல வேடங்களில் அதிரடியாக நடிப்பதாக நம்மளையும் அடிப்பார் சில நேரங்களில் மங்காத்தா ஆட்டம் போடுவார்
இப்படித் தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்கள்...? மத்தியில் அய்யோ..பாவம் விஜய் சேதுபதி எதுவும் நடிக்கத் தெரியாமல் கதாப்பாத்திரமாகத் திரையில் அலைந்து திரிவது...அவரைப்பார்த்துக் கொஞ்சம் நடிங்க பாஸ்...? என்று கேட்கத்தோன்றுகிறது
நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் துபாயில் பார்த்துக்கொண்டிருந்த கணக்கர் வேலையையும் விட்டுவிட்டு விஜய் சேதுபதி என்ற இந்த ராஜபாளயத்துக்காரர் கூத்துப்பட்டறையில் சேர்ந்து கணக்கு எழுதிக்கொண்டு அங்கே நடிப்பவர்களைப் பார்த்துத் தன்னைப் பட்டை தீட்டிக்கொண்டார் இப்படித்தான் வில்லியம் சேக்ஸ்பியர் என்ற நாடக ஆசிரியரும் நாடகக் கொட்டகையில் திரைச்சீலை இழுப்பவராக இருந்தவர் மிகப்பெரிய நாடக ஆசிரியரானார்
தொலைகாட்சி பெண் போன்ற தொடர்களிலும் நாளைய இயக்குனர் சின்னத்திரைப் படங்களிலும் இன்னும் சில திரைப்படங்களில்...தனுஷ் நண்பராகப் புதுப்பேட்டையிலும் அதே நேரத்தில் இன்றைய புதுமை இயக்குனர்கள் பிரபு சாலமனின் லீ, சுசிந்திரனின் வெண்ணிலா கபடிக்குழு,நான் மகான் அல்ல போன்றப் படங்களில் பின்னணி நடிகராக...எப்படியெல்லாம் நடிக்கக் கூடாது என்று அறிந்து கொண்டாரோ...அய்யோ பாவம் இயக்குனர் சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று இவருக்கு தேசிய விருதுகள் வாரி வழங்கியது....
சுந்தரபாண்டியனில் சசிகுமாருடன் இவருடைய எதிர் மறை நடிப்பு இவருக்குத் திரைவானில் மிகப்பெரிய திருப்பம் எல்லாவற்றையும் விட இவரது கதாப்பாத்திரமாக வாழும் கலை (நடிப்பல்ல) பாதிப் பிட்சா-விலும் முழுவதுமாக நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்திலும் வெளிப்பட்டது
இன்று இவை எல்லாவற்றையும் விடச் சூது கவ்வும் திரைப்படத்தில் எப்படி சும்மா நடிப்பு மட்டும் போதாது....கதையோடு வாழவேண்டும் என்பதைக் கட்டியுள்ளார்..பொதுவாக நடிப்பு என்றால் நடிகர்கள் சில மேனரிசங்கள் காட்டுவதும் சிலர் பன்ச் டயலாக் அடிப்பதுமே என்று நாம் தமிழ் சினிமாவில் பார்த்து பழகிவிட்டதால் விஜய் சேதுபதியின் நடிப்பு நமக்கு வித்தியாசமாகத் தெரிகிறது..........அதனால்தான் கொஞ்சம் நடிங்க பாஸ்...? என்று நாமும் சொல்ல வேண்டியதானது.
சுயநல திமிங்கலங்கள் நிறைந்த சூது கவ்வும் அலப்பறை சினிமா உலகில் யாரிடமும் எதனிடமும் சிக்கி சிதையாமல் சூது கவ்வும் ஐந்து விதிகள் போன்று இவர் தனக்குத்தானே சில விதிமுறைகள் வகுத்துக்கொண்டார் என்றால் இவர் தமிழ் சினிமாவில் நட்சத்திரமாக ஜொலிக்கும் காலம் விரைவில் வரும்....இப்படித்தான் சாருக்கான் என்ற இந்தி நடிகரும் உச்சத்தை அடைந்தார் என்பதை அறிந்திடல் நலம் ....நேற்றுக் கனவில் வந்து பட்சி சொல்லிச்சு...விஜய் சேதுபதி....நடிப்புக் கலையின் நாலும் தெரிந்த நீவீர் நல்லா வருவீர்...என்று.
thanks-YouTube-by thinkmusicindia
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |