google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 10-ஆம் வகுப்பு தேர்வில் மாணவிகளே முன்னணி ஏன்?

Friday, May 31, 2013

10-ஆம் வகுப்பு தேர்வில் மாணவிகளே முன்னணி ஏன்?


10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவில் வழக்கம் போல் இந்த வருடமும்  மாணவிகளே அதிக மதிப்பெண்கள்  பெற்று 9 பேர் முதலிடத்தில் இருக்கிறார்கள்...இதனால் ஆண்களைவிடப் பெண்கள் அறிவில் சிறந்தவர்கள் என்ற முடிவுக்கு வந்தால்...? என்னவாகும் இந்தப்  பதிவைப் படிக்கும்  உங்களுக்கு என் மீது கோபம் வரும்... நீயென்ன  பெரிய விஞ்ஞானியா...? என்று.

http://demeliou.files.wordpress.com/2012/12/screen-shot-2012-12-14-at-7-20-29-am.png?w=470&h=251

உருவத்தில் ஆண்கள் மூளை அளவில் பெண்கள் மூளையை விட 10% அதிகம்.அதனால் ஆண்கள் அறிவில் சிறந்தவர்கள் என்ற முடிவுக்கு வரமுடியாது...அந்த அதிக அளவு வேறுபாடு ஆண்களுக்கு அதிகத் திறன் கொடுத்தாலும் அதனால் அவர்கள் அறிவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை..அது பெண்களைவிட ஆண்களின் அதிக உடல் உயரம் எடை மற்றும் சதை அளவைப் பொறுத்தது மட்டுமே 

http://www.iovalgo.com/wp-content/uploads/2011/03/maschilismo.jpg
பல ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த உண்மை.....பிரச்னையைத் தீர்ப்பதற்கு முடிவெடுக்கும் திறன் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் வலிமை ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகம்....ஏன் இப்படி?


ஆண்களுக்குத் தீவிரமாக இடது மூளை ஆதிக்கம் செலுத்துகிறது.அதே நேரத்தில் பெண்களுக்கு இடது..வலது இடையே மூளையின் செயலாக்கம் சமச்சீராக உள்ளது. சமுகத் தொடர்பு கொள்ளுதல்(communication) ஆண்களைவிடப் பெண்கள் எளிதாக உணர்ச்சிவசப்படாமல் செய்யமுடியும் 

http://mumbai.indiadynamics.com/adpics/50b464b0799409692a460258b.jpg

இப்போது தெரிகிறதா...? ஏன் ஹோட்டல் வரவேற்பாளர்கள், தொலைப்பேசி ஆபரேட்டர்கள்,(சார்..நாங்க சீ...ட்டி பேங்ல இருந்து பேசுறோம் உங்களுக்குப் பெர்சனல் லோன்..கிரெடிட் கார்ட்..வேண்டுமா?.) மற்றும் நர்ஸ்கள் சமுகச் சேவகிகள் இப்படி நிறைய துறைகளில் பெண்களே முன்னிலை வகிக்கிறார்கள் என்று?

http://img-fotki.yandex.ru/get/6611/14486906.b/0_7757c_15c84719_L

அதே நேரத்தில் கணக்கில் ஆண்கள் சூரப்புலிகள்...கணக்குனா அந்தக் கணக்குப் பண்ணுவது அல்ல அண்ணேன்..உண்மையான கணக்கு(Maths)..நம்ம ராமானுஜம் அய்யா மாதிரி..இன்னும் நிறைய வான்வெளி அறிஞர்கள்..அப்புறம் மழை வருமானு சொல்ற நம்ம ரமணன் அண்ணன் இதில வருவாரா..? வருவார் ஆனால் வரமாட்டார்..இது ஏன் தெரியுமா? மூளைச் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் மூலையில் உள்ள தாழ்வான சுவர்போன்ற வட்டப்பிரிவு (inferior-parietal lobule) பெண்களைவிட ஆண்களுக்குப் பெரியது...அதன் செயல்பாடுதான் கணக்குப்போடுவது...நம்ம மளிகைக்கடை அண்ணாச்சிகளைப் பார்த்திருப்பீங்களே........? 

https://si0.twimg.com/profile_images/2344677911/image.jpg

மனஅழுத்தம் வரும் போது அய்யோ...நம்ம அண்ணன்மார்களைப் பார்க்கணுமே சண்டைச் சேவல்கள்..(ஆனால் வீட்டுள்ள மட்டும் அப்படியே மாற்றம் ..இல்லனா சோத்துக்குத் திண்டாட்டம்?) ஆனால் பெண்கள் தங்களுக்கு இயற்கையாக அமைந்துள்ளது ஆதரிக்கும் குணம் பராமரிக்கும் குணம் 

https://si0.twimg.com/profile_images/2057717901/________.jpg
எப்படி ஆண்கள் கணக்கில் சூரப்புலிகளோ? அப்படியே பெண்கள் மொழி சார்ந்த பணிகளில் படா கில்லாடிகள் அதற்குக் காரணம் இந்தச் செயல்பாடுகளைச் செய்யும் இரு பக்க மூளைகளில் ஆண்கள் ஒரு பகுதியை அதிகம் உபயோகிப்பதில்லை...(இப்போது தெரிகிறதா..பெண்கள் ஏன் வாயாடிகள் என்றும்...ஆண்கள் நிறைய பேர் ஏன் மௌனச் சாமியார்கள் என்றும்)

freeonlinephotoeditor
என்ன ஒரு விந்தை பார்த்தீர்களா...? தேர்வு போன்ற அறிவை பரிசோதிக்கும் செயல்களில் பெண்கள் மூளைப் பகுதியில்(parietal region) தடிமனாக இருப்பதால் அவர்கள் அதில் சிறந்து விளங்க முடியாது...எளிதில் சோர்வடைவார்கள் என்று ஆய்வு சொல்கிறது...ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன....? பள்ளி..கல்லூரி தேர்வுகளில் மாணவர்களைவிட அதிகம் மாணவிகளே சிறப்பாகத் தேர்ச்சி அடைகிறார்கள்...இதுதான் கால மாற்றம்...இனிவரும் காலங்களிலும் பெண்களே உலகைக் கட்டி ஆளுவார்கள்

http://img.banjig.net/d/bb/user_uploads/195781/think_127f9766.jpg
(அண்ணேன்....நம்ம ஆளுக முக்காவாசிப்பேரு மூளைய பத்திரமா இருக்கட்டும்னு டாஸ்மாக்ல அடகு வச்சிப்புட்டாயிங்க...அவ்வவ) 
****************************************************************************
           சும்மா சிரிங்க...மக்கா...சிரிங்க
****************************************************************************
இந்தியாவின் பிரதமராக என்ன  தகுதி வேண்டும்.....?

கமல்ஹாசன்-வேட்டி கட்டியிருக்க வேண்டும் 
சரத்குமார்-சேலை கட்டியிருக்க வேண்டும் 
கருத்து கருந்தேள்-வேட்டியோ சேலையோ எதையாவது கட்டிக்கிட்டு போங்கப்பா...சும்மா போனா நல்லாயிருக்காது..ஆங்    http://reviews.in.88db.com/images/Singam-2-first-look/Singam-2-Surya-first-look-pics.jpg

கவிதை..அரசியல்...மதம் பற்றி எழுதினால் தினம் 150 பேர் வாசிப்பதில்லை அதே நேரம்...சினிமா விமர்சனங்கள் எழுதினால் ..நேற்று 5 மணிக்கு எழுதிய குட்டிப்புலி விமர்சனத்துக்கு இன்று மாலை 5 மணிவரை வாசித்தவர்களின் எண்ணிக்கை............3500 க்கும் மேல் ...குட்டிப்புலிக்கே இப்படியா...? அப்படினா சிங்கம்-2 க்கு எப்படியோ...?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1