google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: குட்டிப்புலி-சினிமா விமர்சனம்

Thursday, May 30, 2013

குட்டிப்புலி-சினிமா விமர்சனம்



 



குட்டிப்புலி-
படம் ஆரம்பமே அதிரடியாக குட்டிப்புலியின் அப்பா சண்டியர் பெரிய புலி விளக்குமார் விற்கும் தன் சாதிப் பெண்ணை கையைப் பிடித்து இழுத்த ரவுடியை வீடு புகுந்து ஒரே போடு போட்டு வேட்டையாடி விட்டு....  அகப்பட்டுக்கொண்டதும் தன் ஆட்களாலேயே தன் தலையை அறுத்து (கவுரவக்)கொலை செய்யச் சொல்லும்.....என்று கொலைவெறியோடு ஆரம்பித்தாலும்...படம் நகர்வதோ காதல்...நகைச்சுவை...அம்மா-மகன் சென்டிமென்ட் என்று கலக்கலாகப் போகிறது.


கதை-இளம்வயதில் சண்டியர் கணவனை இழந்த தாய் (சரண்யா பொன்வண்ணன்) தன் மகன் (சசிகுமார்)குட்டிப்புலியும் சண்டியராக மாறிவிட்டதால் தன் மகனைக் காதலிக்கும்  பெண்ணை (லட்சுமி மேனன்) திருமணம்  செய்து வைக்க முயலுவதும்...தன் மகன் குட்டிப்புலி  செய்த சண்டியர்தனத்தால்  அவன் உயிருக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து அவனைக் காப்பாற்றி.... அவர்கள் திருமணம் நடந்ததா...? என்பதே கதை...


மதுரை கதைக்களம் என்றால் சும்மாவே வெளுத்துவாங்கும் நடிகர் சசிகுமார் முந்தய படங்களைவிட இதில் தனித்து நின்று ஒற்றைப்புலியாக வெளுத்து வாங்குகிறார்...வேட்டி-லுங்கியில் வந்து அவர் போடும் அதிரடி சண்டைகளாகட்டும் லட்சுமி மேனனுக்கு காதல் கடிதம் கொடுத்துவிட்டு ஓடுவது..காதல் வந்தப்பிறகு ஜீன்ஸ் டி-சர்ட் போட்டு ஊருக்குள் அலப்பறை பண்ணுவது ஆக .காதல் ஜொள்ளு ஆகட்டும் கோயில் உண்டியலில்பணம் எடுக்கும் வித்தையிலாகட்டும் இப்படி நிறைய...அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு குட்டிப்புலி பெரிய புலியாகவே நல்ல நடிப்பு வேட்டை 

பாரதியாக வரும் லட்சுமி மேனன் அழகோ அழகு..உடையிலும் நடையிலும் கிராமத்துப் பெண்களுக்கே உள்ள அப்படியொரு அழகுத்தோற்றம்..கதைக்கேற்ற கேரளா இணிப்பு பலகாரம்....?(என்னவாக இருக்கும் என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்)

அம்மாவாக வரும் சரண்யா அப்படியே கிராமத்து தாயாக மாறிவிட்டார்..தங்கு தடையின்றி வசனம் உச்சரிப்பு அவரது அனுபவத்தின் பிரதிபலிப்பு..ஜவுளிக்கடையில் குட்டிப்புலிக்கு ஜீன்ஸ் பேன்ட் எடுக்க அளவுக்கு சாருக்கானைக் காட்டுவதும் ஷூ..கண்ணாடிகளை அள்ளிக்கொண்டு பண்ணும் அட்டகாசங்களை நினைத்தாலே அடக்க முடியாத சிரிப்பு வருகிறது...அதே நேரம் தன் மகனைக் கொலைசெய்ய துடிக்கும் வில்லனை மிளகாய் பொடி தூவி வலைபோட்டு கட்டி...அடப்பாவமே...அப்படியே தலையைத் துண்டிப்பது ...கொடூரமாகத் தெரியவில்லை ...மகன் மீது உள்ள பாசத்தைக் காட்டுகிறது.

freeonlinephotoeditor
எழுத்து-இயக்கம் ...முத்தையா...சோடைபோகவில்லை ..அட..அதிரடி கொலைகளைக் கூட இப்படை காமெடி கொலையாக மாற்றிவிட்டரே...இப்போதைய யதார்த்தமான சிந்தனை...அதே நேரம் அரசியல்வாதி ஒருவரை  எதிர்த்து பள்ளிப் பேச்சுப்போட்டியில் பேசியதற்காகவே  ஒரு சிறுவனை பொதுமக்கள் மத்தியில்  இப்படி கொடுராமாக கொள்வதாக காட்டியது..சினிமாவாகவே இருந்தாலும் மனதுக்கு நல்லதாகத் தெரியவில்லை...வில்லனின் கொடூரத்தை காட்டவா...? ஆனால்..அதுதான் அந்த கொலைதான் படத்தின் திருப்பமாக ஒரு தாய் வில்லனை கொலைசெய்யும் அளவுக்கு மாற்றிய கதைக்காகவா...? அப்படிஎன்றால் ஒ.கே.

freeonlinephotoeditor
கிப்ரான் இசையில் அனைத்துப் பாடல்களும்  அருமை...தாட்டியரே தாட்டிய்ரே ..பாடலும் காத்து காத்து பாடலும் மனதில் நிற்கிறது.படத்தில் நிறைய ரீமிக்ஸ் பாடல்கள் நகைச்சுவைக்காக...

                                   thanks-YouTube-by IGTAMILMOVIES

இப்படிநல்லதொரு திரைக்கதையும் கிராமத்து கதைக்களமும் சிரிப்பும் காதலுமாக செல்லும் குட்டிப்புலி....வித்தியாசமான புலிதான் ...தாய் பாசத்தை உணர்ந்துக்கொள்ள ஒவ்வொருவரும் ஒருமுறையேனும் பார்க்கவேண்டியப்படம்...வசனங்கள் அனைத்தும் அருமை... அதிலும் கல்லாக இருக்கும் சாமிக்கு காசு பணம் எதற்கு...? இப்படி நிறைய குத்தல்கள் உண்டு.. 

இது குட்டிப்புலி அல்ல....மைனர் புலி...சண்டியர் புலி.. காதல் புலி...காமெடி புலி..முத்தையாவின் எழுத்து இயக்கத்தில் சசிகுமாரின் குட்டிப்புலி..  நல்லாவே பாயுது
    
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1