google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நான் ராஜாவாகப் போகிறேன்

Wednesday, May 01, 2013

நான் ராஜாவாகப் போகிறேன்

http://parithimuthurasan.blogspot.com/2013/05/naan-rajavagapogiren.html
நான் ராஜாவாகப் போகிறேன் -

சமுக அவலங்களை அங்கே இங்கே தொட்டு முழுக்க முழுக்க (இரண்டு சில்லி சிக்கன்) மசாலா திரைப்படம்... பிருத்வி ராஜ்குமார் இயக்கத்தில் நகுல் ராஜா-ஜீவா என்று இரு வேடங்களிலும் நடிக்க...இந்த மசாலா எக்ஸ்பிரெஸ் இமாசல் பிரதேசத்தில் குளுகுளு குலுமனாலியில் தொடங்கிப் போபால் வழியாகச் சென்னையில் வந்து தடம் புரண்டாலும் விபத்தில்லாமல்வந்து நிற்கிறது.



பிருத்வி ராஜ்குமாருடன் வெற்றிமாறன் கதை வசனம் எழுதி பி.டி.கத்தரிக்காய்,வீரிய விதைகள் என்று வார்த்தைகள் மட்டுமே வீரிய மாக இருக்கின்றது தவிரக் காமராஜர் என்ற பெயருடன்  நடித்துள்ள மணிவண்ணன்  பேசும் வசனங்கள் புழுத்த கத்தரிக்காய் போன்றுதான் உள்ளது..விசேசமாக சொல்வதற்கு எதுவும் இல்லை.

குலுமனாலியில் உள்ள ஜீவா என்ற நகுல் தன்னைப்போல் ஒருவர் சென்னையில் இருப்பதை அறிந்து அவரைக்காண ரயில் பயணம் தொடர்கிறார் வழியில் இறங்கி ரீமா என்ற பெண்ணைச் சந்தித்து ராஜா யார் என்பதைத் தெரிந்து கொள்ளும் போது இடைவேளை..நல்ல வேளை...காட்சிகள் அதிவேகத்தில் போகிறது 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmgcwJE4e2tgXIy6v4ry1d8WcbMTieBcdJto5WkLlAdxrjDOHLl3Q15lrxo1dTpKqaKJxTlQTBR0mn-XAcYI1eF5_K_Z1jvxgfzNnZfUNavwAGPczM57nLnTGEAKgpyipdAAX-6Pgsofo/s1600/naan_rajavaga_pogiren_movie_stills_010.jpg

கதை-பி.டி.விதைகளை எதிர்க்கும் காமராஜர் மரணம் தற்கொலை அல்ல அது பி.டி.விதை விவசாயத்தை ஆதரிக்கும் இசக்கி முத்து அண்ணாச்சி (ஏ.வெங்கடேஷ்)என்ற பெரிய புள்ளி செய்த கொலையைக்  கண்டறிந்த வக்கீலுக்குப் படிக்கும் வள்ளி (சாந்தினி) வெளிப்படுத்தியதால் கொலை செய்ய விரட்டுகிறார்கள் வள்ளியை காதலிக்கும் ராஜாவையும் தாக்க முயலும் போது அவர் மரத்துவமனையில் இருந்து தப்பித்து இமாசல் பிரதேசம் சென்று மீண்டும் வந்து இசக்கி முத்துக் கூட்டத்தை கொலை செய்வதே பல திருப்பங்கள் நிறைந்த திகில் மசாலா படம்

http://3.bp.blogspot.com/-TmULh_I8pJs/UG5LVKEXoUI/AAAAAAAANTM/RoF5vDDwmNk/s1600/Zareen+Khan+at+Naan+Rajavaaga+Pogiren+Shooting+Spot+Stills+(2).jpg

ஜி.வி.பிரகாஷ்குமார் பின்னணி இசையும் திரைப்பாடல் இசையும் சிறப்பு ஆனால் குத்துப்பாட்டை விட ரொமாண்டிக் மெலோடி பாடலில் யார் இவனோ...மதன் கார்க்கியின் வார்த்தைகளில்   ஜி.வி.பி.-சைந்தவி உள்ளம் உருக உருக பாடியுள்ளனர்..ஆனால் திடிரென்று வரும் குத்துப்பாட்டு ...பாடலும் சரி..இசையும் சரி..ஆட்டமும் சரி எல்லாம் அபத்தம் 




கதையில்கூடச் சமுக அவலங்களைத் தொட்டு வித்தியாசமாக  
நான் ராஜாவாகப் போகிறேன்  என்று சிலேடையில் கவித்துவமாகப் பெயர் வைத்த இயக்குனர் பிருத்வி ராஜ்குமார்..முழுக்க மசாலாவாகவும் இல்லாமல் அப்படியும் இப்படியுமாகத் தஞ்சாவூர் பொம்மை போன்று சாய்ந்தாடிக் கொண்டிருந்தாலும்  நிலையாக நிற்பார் என்று நம்பிக்கை இருக்கிறது ...பாவம் அவர் என்ன செய்வார் இப்போதெல்லாம் இப்படி குட்டிகளை இழுத்துக்கொண்டு நாயகர்கள் ரோட்டில் ஓடுவதுதான்தமிழ் சினிமாவின் சிக்கனமான புதுமையாக இருக்கிறது.



இமாசல் பிரதேசம் குலுமனாலியாகட்டும் போபாலாகட்டும்  இந்தக் கோடை வெயிலுக்குக் குளு குளு காட்சிகள்  வேல்ராஜ் ஒளிப்பதிவு அடடா..ஜில்லுனு சாரல் போல் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது.....நீங்களும் பார்க்கலாம்


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1