google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நாகராஜா சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ.-விமர்சனம்

Saturday, May 11, 2013

நாகராஜா சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ.-விமர்சனம்

http://www.cinemalead.com/photo-galleries/nagaraja-chozhan-ma-mla/wmarks/nagaraja-chozhan-ma-mla01.jpg  
நாகராஜா சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ-
ஓர் அரசியல்வாதியும் அவரது அல்லக்கையும் என்று பெயர் வைத்திருக்கலாம் ...அட...கொக்காமக்கா-வில் ஆரம்பிக்கும் அதிரடி அரசியல் வசனம் படம் முடிந்து வீடு போய்ச் சேர்ந்த பின்பும் காதில் விழுந்துக்கொண்டிருந்தது....உய்..உய்..னு..

freeonlinephotoeditor

அட..கொக்காமக்கா..இது மகாதேவி...அரசிளங்குமாரி காலத்தில் வரவேண்டிய படம் ..இப்போ ப்பே..பேய்..னு இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசி நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் போன்ற காலகட்டத்தில் வந்திருப்பது (நமக்கு) போதாத காலம்.ஆனாலும் இரண்டு பெருசுகளின் அட்டகாசமான நக்கலும் விக்கலும்..நல்லா நேரம் போகிறது   

freeonlinephotoeditor

1994-ல் வந்த அமைதிப்படை தொடர் படமாக இயக்குனர் மணிவண்ணனுக்கு இது 50-வது திரைப்படம் என்பதை நம்பமுடியவில்லை..புதுமுக இயக்குனர் போல் தலையைச் சொரிகிறார் ..அவர் தலையை அல்ல படத்துக்குப் போன நம்ம தலையை (என்ன மணி அண்ணன்..உங்களுக்குத்தான் கலாய்க்க தெரியுமா...?) அது..சரி ..இந்த கணணி காலத்தில் இன்னும் நீங்கள் எழுத்தாணி கொண்டு எழுதிக் கொண்டிருந்தால் எப்படி அண்ணேன்...? அதுவும் எழுதுனாக்கூடப் பரவாயில்லை..இப்படி குத்தி கிழிக்கிறீங்களே..

freeonlinephotoeditor

உங்கள் அரசியல் நையாண்டித்தனங்கள் அத்தனையும் ஒருவழிப்பாதை மாதிரி ஒரு குறிப்பிட்ட கட்சியையும் அதன் தலைவரையும் டார்ஜெடாகத் தாக்குவது உங்களுக்கு வேண்டுமென்றால் சிரிப்பாகத் தெரியலாம் பார்ப்பவர்களுக்கு  வெறுப்பாகத் தெரிகிறது....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjH4M0_dMGK7RuQAcB_yHOJH2sZbCzu5GI_jIF2bJ4bUtB5SYm2su0TZ5jVsurqNLvpRrgVxKuRWjFI1xofxEK01NwrPf_0OAx9FXdW35rRZyw_HpJUSXHqkPfwQo9f_UF9lHA49dLPe_Y/s1600/260517amaithipadai.jpg


அமைதிப்படையின் வெற்றிக்குக் காரணம் வெறும் வெற்றுவேட்டு அரசியல் நக்கல் மட்டுமல்ல..அதுனூடே மறைந்திருந்த தேங்கா பொறுக்கி அமாவாசையின் அல்வா காதல் கதையும் அம்மாவாக நடித்த சுஜாதாவின் சென்டிமென்ட் நடிப்பும் சத்தியராஜின் அப்பா-மகன் இரு மாறுபட்ட மோதல் காட்சிகளும்  என்பதுதான்

http://www.cinemalead.com/photo-galleries/nagaraja-cholan-ma-mla/wmarks/nagaraja-cholan-ma-mla06.jpg
அரசியல்வாதி நாகராஜா சோழனும் அவரது அல்லக்கை மணிமாறனும் படத்தில் 90 விழுக்காடு  பங்கு போட்டுக்கொள்வதால் சீமான் பாவம் சிவனேன்னு வந்து போகிறார்.மிருதுளா  ஹன்சிபா , கோமல் ஷர்மா,ரகு மணிவண்ணன் ...மற்றவர்களைப் பற்றி எதுவும் சொல்வதற்கு இல்லை
கவர்ச்சிக்கும்  கொலை  கற்பழிப்பு காட்சிகளுக்காக மலைவாசி கதை திணிக்கப்பட்டு உள்ளது.

                                thanks-YouTube-by SaregamaTamil

இசை ஜேம்ஸ் வசந்தன்  ஏனோ தானோவென்று இருக்க  D.சங்கரின் ஒளிப்பதிவு  மலையும் மலை சார்ந்த இடங்கள் அடிக்கும் அக்னி வெயிலில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கின்றது
இயக்குனர் மணிவண்ணனின் சமுகச் சிந்தனையுடன் அரசியலை கிள்ளிப் பார்க்கும் நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ வெற்றிபெறாவிட்டாலும் ..டெபாசிட் இழக்கமாட்டான் படம்-ஒருமுறையேனும் பார்த்து சிரிக்கலாம்...சிரிக்க மட்டுமே 

 **************************************************************************

அட..கொங்காமக்கா....இப்படியுமா பன்னுவாயிங்க 

நாகராஜா சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ.-விமர்சனம் ...ஆன இந்தப் பதிவை எப்படி எல்லாம் வெட்டி நொட்டி இருக்கிறார்கள் என்று பாருங்கள் 
..அடங்.. கொக்காமக்கா தாமர வரணியில் தலை முழுக!
என் பதிவுக்கு அந்த திரட்டியில் 4 ஓட்டுக்கள் ...ம்.. .ம்...திருட்டுப் பதிவுக்கு 33 ஓட்டுக்களையும் 
தாண்டி ஓடுது....
இன்னொருத்தரு நாகராஜசோழன்எம்.ஏ.எம்.எல்.ஏ
இன்னும் நாலு பதிவர்கள் எழுதியதையும் அங்கே இங்கே வெட்டி ஒட்டி....அப்பு சூப்பர்  அப்பு
   
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1