அடேய்...தம்பி அறிவுச்செல்வா...என்னடா..என் மேல கோபத்தில இருக்கிறது மாதிரி தெரியுது....
(ஆம்மாம்....அண்ணேன் ...எல்லா படத்துக்கும் எண்ணக் கூட்டிட்டு போவீங்க...ஒரு நடிகையின் டைரி-படத்துக்கு மட்டும் நீங்க ரகசியமாய் போயிட்டு வந்திட்டீங்க....)
அடேய்..தம்பி...அது ஒருமாதிரி சில்பாஞ்சி படம்னு நினைச்சேன்...அப்படியொண்ணும் ஷிக்கிலா படம் மாதிரி இல்லடா...உன்னப் பார்த்தா குயந்த பய மாதிரி இருக்கு..எதுக்கும் நீ தனியா போறதாயிருந்தா...நம்ம கீரிப்புள்ள மாதிரி மையில பெரிய மீச வச்சிக்கடா
(அப்படி என்ன..அண்ணேன் அது பெரிய சில்பாஞ்சி படம் நான் பார்க்காததா...? நீங்க கதையைச் சொல்லுங்க அதையும்தான் பார்த்திடுவோமே..)
அதான...நீதான் பிஞ்சிலப் பளுத்தவனாச்ச....எதுக்கும் காதப் பொத்திக்க..கதையக் கேட்டுக்க...பூங்கொடி பூங்கொடினு ஒரு அழகு தேவதை வேலைக்காரி ரூபத்தில இருந்து (சில்க்) ஸ்மிதா என்ற பெரிய நடிகையான கதையும் அவளுடைய மர்மமான மரணமும் பற்றிய கதைதாண்டா...
(அதுதான்....அப்பமே டர்டி பிச்சர்னு வித்தியா பாலன் நடிச்சி..அம்மணி நடிப்புக்கு தேசிய அவார்டுலாம் கொடுத்தாங்களே...இதுவேற புதுசாவா...?)
அடேய்..பனங் கொட்டத் தலையா..உன்ன காதப் பொத்திக்கனு சொன்னா ஒட்டு கேட்கிற..?...அது வேற இது வேறடா...அதில ஒரு வேலைக்காரி எப்படி பெரிய நடிகையாக என்ன என்ன தில்லாலங்காடி வேலையெல்லாம் செயுரானு காட்டுனாங்க....இதுல பெரிய நடிகையான ஒரு வேலைக்காரி தான் சம்பாதித்த பனைத்தையும் கடைசியில் தன் உயிரையும் எப்படி இழக்கிறாள் என்பதைக் கிளுகிளுப்பாய் காட்டுறாங்க
இது கிளைமாக்ஸ்(climax) மலையாள டம்மி டும்மி படம் என்பது அங்கே இங்கே வீசும்...மலையாள பேச்சுக்கள் காட்டுகின்றன ..இயக்குனர் அனில்குமார் எந்த வம்பு தும்பும் வந்திடக்கூடாதுன்னு நல்லாவே இயக்கியிருக்கிறார்
படம் ஆரம்பமே ஒரு அதிரடி இயக்குனரைக் கூப்பிட்டு ஒரு தயாரிப்பாளர் கதை கேட்பதுபோலவும் அந்த இயக்குனர்தான் மறைந்த ஸ்மிதா என்ற கவர்ச்சி நடிகையை சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர் என்பதால் அவளின் வாழ்க்கையைப் படமாக எடுக்கக் கதை கேட்கிறார்.கதைசொல்வது போல் படம் நகர்கிறது..ராம்குமார் என்ற தொழில் அதிபர் ஸ்மிதாவுக்கு உதவுவதுபோல் தனது வீட்டைக் கொடுத்து சின்ன வீடாக செட்டப் செய்துகொள்கிறார் ..அவருக்கு ராகுல் என்ற வாலிப வயதில் பெரிய மகன் இருப்பதும் அவன் ஸ்மிதாவைக் காதலிப்பதும் ஆக கதை இப்படி ஜல்ஜாப்பாய் போகிறது.ஒரு கட்டத்தில் தன் மகன் ராகுல் தீவிரமாக ஸ்மிதாவை திருமணம் செய்ய முடிவெடுத்ததால் (முறை மாறுகிறதே...?) ராம்குமார் குளியல் அறையில் குளிக்கும் ஸ்மிதாவுக்கு படுக்கையறையில் கிளுகிளுப்பான மரணம் அத்தோடு படம் முடிகிறது
படத்தில் சுரேஷ் கிருஷ்ணா,சுபின் சன்னி,அரவிந்த் ஆகாஷ் என்று பலர் நடித்திருந்தாலும் ஷனா கான் என்ற மும்பாய் அம்மணி மட்டும்தான்படம் முழுவதும் வருகிறார்....
ஆபாசம் இல்லாத கிளுகிளுப்பு வசனங்களுடன் காதல் த்திலர் படம் தந்த இயக்குனர் அனில்குமாரைப் பாராட்டலாம்..இசை பெரிதாக இல்லை என்றாலும் இரண்டு பாடல்கள் கேட்கலாம் ...ஒளிப்பதிவு அருமையோ அருமை..பாடல் காட்சிகளில் மட்டுமன்றி மாங்கு மாங்கு என்று ஷனா கான் வரும்போதெல்லாம் கேமரா நல்லாவே ஜொள்ளுகிறது
வசனம் அத்தனையும் இரட்டைக்கிழவியோ...? குமரியோ...? மஞ்சள் பத்திரிகைகளில் வரும் வார்த்தைகள்.. கிளுகிளுப்பும் மூட்டுகின்றன நகைச்சுவையும் ஊட்டுகின்றன
"கோடிக்கணக்கான பணத்த இன்வெஸ்ட்மென்ட் பண்ணி பிரமாண்டமாய் படம் எடுக்கிற தயாரிப்பாளர்களுக்கு வெட்க ரொம்ப ஜாஸ்தி ..படம் மட்டும் சரியாப் போகலைன்னு வச்சிக்க நாங்க செலவு பண்ணுன காசெல்லாம் கடல்லப் போட்டமாதிரித்தான் அப்படியும் நாங்க மீண்டும் படம் எடுக்கணும்னா அது உங்கள மாதிரி அழகான பொண்ணுக இன்ஸ்பிரேசன்தான்..." என்று ஸ்மிதாவை தொட முயலும் ஒரு ஜொள்ளு தயாரிப்பாளர் இப்படித்தான் படமுளுவதும் ஜொள்ளு வடியும் வார்த்தைகள்
உண்மையில் இந்தப்படம் நாம பார்ப்பதைவிட இன்றைய சினிமா நடிகைகள் பார்க்கவேண்டியப் படம்...பார்த்து தங்கள் வாழ்க்கையைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால்...இன்னும் இருபது வருடங்கள் கழித்து அவர்கள் கதையும் இப்படி முகமூடிப் போட்டு திரையில் அலையும்
(அதெல்லாம் சரி அண்ணேன்...
இப்படி மாயி படத்தில வருகின்ற
வா...மின்னல்... மாதிரி
படம் காட்ட ஆரம்பிச்சிட்டீங்க)
அடேய்.....
தம்பி அறிவுச்செல்வா....
இதுக்கு மேல காட்டுனா
நல்லா இருக்காதுடா...
வேணும்னா நீ
திரையரங்கில் போய் பார்த்துக்க.... காதுகளை மூடிக்கிட்டுப் பார்த்தா..? கவர்ச்சியாக இருக்கும்...கண்களை மூடிக்கிட்டு கேட்டா...? அலர்ச்சியாக இருக்கும்
இதுக்கே யாரும் என்னச் சொல்லப் போறாங்களோ...ஆங்...
நானே பயந்துக்கிட்டு இருக்கிறேன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |