உண்மையான ஹைக்கூ கவிதைகள்-4
19 ஆம் நூற்றாண்டின் முதல் ஆண்டுகளிலிருந்து ஹைக்கூ பல பரிசோதனைக்கு உட்பட்டது...பல்வேறு மாற்றங்ககளை சந்தித்தது.
ஜப்பானில் வசித்த டச்சு நாட்டைச் சேர்ந்த நாகசாகி கவர்னர் ஹெண்டிரி டோயிப் Hendrik Doeff (1764–1837) எழுதிய ஹைக்கூ மாதிரி ஹோக்கு கவிதை....
உன் கரங்களை எனக்கு இரவல் கொடு
மின்னலைவிட வேகமாக....
என் பயணத்திற்கு தலையணை செய்ய
என்று தன் வாழ்க்கைத் துணைவியை சொல்வதிலாகட்டும்
அல்லது...
ஒரு வசந்த காற்று
அங்கேயும் இங்கேயும் அசைக்கிறது
படகோட்டம்போல் என் சிறியப் படகை
....என்று இயற்கை இன்பத்தை அனுபவிப்பதிலாகட்டும்
அதே காலகட்டத்தில்...இங்கிலாந்தில் பிறந்து கொரியாவில் வளர்ந்து ஜப்பானில் வாழ்ந்த ஆங்கிலேயர் ஆர். எச் ப்ளித் என்பவர் ஜென்,ஹைக்கூ,சென்றியு என்று எல்லாம் கலந்து 1949 ஆம் ஆண்டு ஹைக்கூ என்ற தனது முதல் தொகுப்பை வெளியிட்டார்...அவர் அமெரிக்கர்களையும் ஹைக்கூ எழுதிட அழைத்தார்.. ஆங்கிலத்தில் ஐக்கூ எழுதுவதற்கு அவர் தூண்டுதலாக இருந்தார் அவருடைய நான்கு ஹைக்கூ கவிதை தொகுப்புகளே இன்றைய ஆங்கில ஹைக்கூ கவிதைகளுக்கு முன்னோடி என்று சொல்கின்றனர்.
ஒரு நத்தை
நீலக் கனவு காண்கிறது
அந்த இலையின் பின்புறம் இருந்து...
ரெஜினால்ட் ஹோரஸ் ப்ளிதின் இந்த ஹைக்கூ கவிதையில்....மனிதன் எல்லா வளமும் தன் காலடியில் வைத்துக்கொண்டு எதுவும் முயற்சி செய்யாமல் வீனாப்போவதை ஒரு நத்தை பசுமையான இலையின் பின்புறம் அமர்ந்து கனவில் சோம்பிக் கிடப்பதாகச் சொல்கிறார்...
மூளை கட்டி நோயினால் பாதிக்கப்பட்ட ஆர். எச் ப்ளித் மரணிக்கும் தருவாயில்.....
இந்த பயண நாளில்
நான் என் இதயத்தை
சசன்கு மலர்களிடம் விட்டுச் செல்கிறேன்
என்று எழுதி வைத்தார்.....
அவரது கடைசி விடைபெரும் ஹைக்கூ கவிதையாக...
அங்கும் இங்கும் அலைந்து
என் சிந்தனைகளை
சசன்கு மலர்களில் விட்டுச் செல்கிறேன்
என்று எழுதிவைத்தார் இங்கே அவர் சசன்கு மலர்கள் என்று சொன்னது அவரது கவிதை தொகுப்புகளாக இருக்கலாம்
இன்று ஒரு ஆங்கில இணையத்தளம் தனது ஒரு தளத்திலேயே ஒரு கோடி ஆங்கில ஹைக்கூ கவிதைகளுக்கு மேல் பகிரப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது....அந்த அளவுக்கு ஜப்பனீஸ் ஹைக்கூ கவிதை உலகமெங்கும் இன்று எல்லாமே ஹைக்கூதான் என்று பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது
.........................(இன்னும் வரும்)
(ஹைக்கூ கவிதைகள்-தமிழ் மொழியாக்கம்..பரிதி.முத்துராசன்.)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |