google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: டாஸ்மாக்- ஹைக்கூ கவிதைகள்

Tuesday, June 25, 2013

டாஸ்மாக்- ஹைக்கூ கவிதைகள்


1-டாஸ்மாக் கவிதை
மை ஊற்றியபோது வராத கவிதை
பிராந்திக்கு வந்தது வாந்தி போல....


2-டாஸ்மாக் காதல்
விதவிதமானப் புட்டிகள் கண் சிமிட்ட 
எனக்குக் காதல்  என்  கல்யாணி மீதுதான்


3-டாஸ்மாக் வீரம்
நெப்போலியன் மாவீரனா...? அப்புறம்
அதைக் குடித்தால் ஏன் தள்ளாடுது....?


4-டாஸ்மாக் நண்பன்
என்றும் என் நண்பன் ஓல்ட் மாங்.. 
உடுத்தவை களையும் காரசாரமானவன்


5-டாஸ்மாக் சோகம்
ஏன்தான் இவர்கள் பிறந்தார்களோ...? அய்யோ
அன்றுதான் டாஸ்மாக் விடுமுறை தினங்களாம் 

 

6-டாஸ்மாக் கடவுள்
எந்தக் கடவுள் புகைப்படமும் இங்கு இல்லை
அன்று சோமபானம் குடித்தக் கடவுள் யாரோ...?

http://www.outlookindia.com/images/tamil_nadu_liquor_outlet_20061204.jpg  

7-டாஸ்மாக் சாதி
ஒன்றே குலம் என்றே பிளாஸ்டிக் கிளாஸ்
இல்லை தீண்டாமை இங்கே எல்லோரும் ஏ-கிளாஸ்

http://scotchwhiskyauctions.s3-website-us-east-1.amazonaws.com/products/7998-large.jpg  

8-டாஸ்மாக் டாக்டர்
சோக நோயை விரட்டும் போதை டாக்டர்...
துக்கம் விரட்டி (நிரந்தர)தூக்கம் வரவைப்பார்

http://farm2.static.flickr.com/1295/4660308688_56bef1a026.jpg  

9-டாஸ்மாக் ஞானி
குவார்ட்டனா குறை ஞானி ஆப்னா அரை ஞானி
புல்-லாப்  போட்டால்..? முழு ஞானி

10-டாஸ்மாக் கோசம்
குடி  நீ குடிக்காமல் போனால்..
அரசு கஜானா காலியாகிப் போகும்

அண்ணேன்...
உங்க டாஸ்மாக் கவிதைகளைப்  
படிச்சாலே போதை ஏறுதே..
உங்க கவிதையை 
கல்வெட்டுல எழுதிவைக்கனும்
நீங்கதான்  
உண்மையானக் குடிமகன் 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1