உத்தரகண்ட்-
பகுத்தறிவுவாதியும்
பதைபதைக்கும் நிகழ்வு
அடக்..கடவுளே!
நீயாவது நலமா...?
உம்மையும் மீட்க
யாரேனும் வரணுமா...?
இறந்தவர்கள் எண்ணிக்கை
யாருக்கும் தெரியவில்லை
பாதை தெரியாமல்
பரிதவிக்கும் மக்கள்
பல்லாயிரம் என்று
கணக்கெடுப்பு மட்டும்
கணக்காகச் சொல்கிறார்கள்
உத்தரகான்ட் வெள்ளமே!
நீ வந்த நேரம் தேர்தல் நேரம்
ஆளும் கட்சி ஒருபக்கம்
எதிர்க்கட்சி இன்னொரு பக்கம்
வாரி வழங்கும்....
கோடிகளில் நிவாரணம்
ஆற்று வெள்ளம்
அடித்து வரும் பிணங்களே!
கொஞ்சம் நில்லுங்கள்
உங்கள்
கடைசிப் பயணத்திற்கு
கட்சிகள் தரும்
கடைசித் தொகையை...
வாங்கிச் செல்லுங்கள்
உத்தரகண்ட் பேரழிவு
காடுகளை அழித்ததால்
மலைக்கு வந்த கோபம்
மனிதர்களே!
இது மலைச் சுனாமி
இயற்கை அழித்து
செயற்கையை வளர்த்தார்
மக்கள் வாழ்க்கையை
சிதைத்துவிட்டார்
பக்தர்கள் நம்பிக்கையை
புதைத்துவிட்டார்
உத்தரகண்ட்-
கடவுளின் நிலம்
காடுகளை அழித்து
வீடுகள் கட்டிக்கொண்டார்
அந்தக் கடவுளையும்
ஏமாற்றி விட்டார்......
அந்தக் கடவுளும்
ஏமாற்றி விட்டார்....
உத்தரகண்ட்-பேரழிவு
பகுத்தறிவுவாதியும்
பதைபதைக்கும் நிகழ்வு
அடக்..கடவுளே!
நீயாவது நலமா...?
உம்மையும் மீட்க
யாரேனும் வரணுமா...?
thanks-YouTube-by tv9telugu
(குறிப்பு-அடக்..கடவுளே! உம்மீது சத்தியம் இங்கே எந்தக் கடவுளையும் தனிப்பட்டு எழுதவில்லை எந்தக் கடவுளும் என் மீது அவதூறு வழக்குப் போட்டுவிடாதீர்கள்)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |