அம்பது ரூபாய் கொடுத்துவிட்டு ஐரோப்பா நாடுகளின் சந்து பொந்துக்களைக் கண்டுகளிக்க வேண்டுமா...? .
பூரி ஜெகனாத்தின் இத்தரம்மாயிலது (தெலுங்கு) திரைப்படம் போனால் போதும்...அந்த அளவுக்கு ஒளிப்பதிவாளர் கனகதோ ராம்பாபு அருமையாகக் குளுமையான காட்சிகளைக்
சுட்டுக்கொண்டு வந்துள்ளார்
ஐரோப்பாவுக்குப் படிக்கவரும் அகான்ஷா(காத்ரின் தெரஸா) கையில் கிடைத்த கோமளி(அமலாபால்)யின் டைரியை படிக்க...சஞ்சு ரெட்டி (அல்லு அர்ஜுன்)- கோமாளியின் காதல் கதையாகப் படம் நகர்கிறது..
இப்படியே போய்க்கொண்டிருந்தால் என்னாவது...? அதிரடி சண்டைகாட்சிகள் வேண்டாமா? கடற்கரை இயற்கைக் காட்சிகளை கோமளி தனது வீடியோவில் படம்புடிக்க அதில் வில்லன் செய்யும் கொலையும் பதிவாகிறது..அதனால் ஏகப்பட்ட நின்ஜோக்கள் பாயிந்து வந்து குதித்துக் குதித்து சஞ்சு ரெட்டி-கோமளி குடும்பத்தினரை வெட்டுகிறார்கள்... எல்லோரும் சாக இவர்கள் இருவரும் பிழைத்து....சஞ்சு கடைசியில் பழிவாங்குகிறார்...அகான்ஷாவின் காதல் அடுத்தப் பார்ட்டில் தொடருமாம்..தொடரட்டும்
அலட்டிகொள்ளாத நடிப்புடனும் பெண்களைக்கவரும் காந்தக் கண்களுடனும் அல்லு அர்ஜுன் அசத்துகிறார்... அமர்களமான கூத்து கட்டழகி அமலா பாலுடன்...தொட்டும் தொடாமலும் கவர்ச்சிப் பதுமை காத்ரினுடன்..அடடா..அவர் போட்ட டான்ஸ் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது...விரசமில்லா காதல்..ரோமியோ ஜூலியட் என்று மலையாளத்தில் வருவதும் பொருத்தமே
நகைச்சுவையும் தூக்கல்...மலை முகட்டில் பிரமானந்தம்-அலி இருவருக்கும் நடக்கும் ஷாக் காட்சி நல்ல நகைச்சுவை.. சங்கராபரணம் பாடலுக்குப் பிரமானந்தம் போடும் நடனம் டாப்-டக்கர்
இசை-தேவி ஸ்ரீபிரசாத் ...பாடல்கள் அனைத்தும் கேட்பதைவிட..படத்தில் பார்ப்பதற்குக் காட்சிகளோடு ஒத்துப்போகிறது.சண்டைக்காட்சிகளிலும் நல்ல அதிரடி இசை...கடைசியில் வரும் குத்துப்பாட்டு செம குத்து...
படத்தில் எல்லாவற்றையும் மிஞ்சி...விஞ்சி நிற்பது ஒளிப்பதிவாளர் கனகதோ ராம்பாபுவின் கேமரா (கை)வண்ணம்தான்..
இங்கிருந்து வெளிநாடுகளில் போய் படம் எடுப்பவர்கள் இப்படி குளுமையான காட்சிகளை சுட்டுவரும் போது... வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வந்து சேரிகளையும் சாக்கடை தெருக்களையும் படம்பிடித்து (slumdog millioner) ஆஸ்கார் விருதுகள் அள்ளிக்கொள்கிறார்கள்
நம்ம நாட்டிலும் இதுபோல் இயற்கை காட்சிகள் இல்லையா...? கேரளாவின் படகு இல்லம் ஓன்று போதுமே...?
thanks YouTube-by

இதைத் தமிழில் யாரேனும் டப்புனாகூட...டப்பு தேறாது..
இனியும் இப்படியொரு காட்சிகளை இங்கே இவர்கள் எடுக்க மாட்டார்கள்... நடிப்பை விடப் படபிடிப்புதான் அருமை!
கவர்ச்சிக் கண்ணிகளைவிட கவர்ச்சி காட்சிகளே பெருமை!
இங்கே நடிக்கிறேன் என்று கடிப்பவர்களே அதிகம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |