google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தொலைக்காட்சி Vs சினிமா

Tuesday, June 04, 2013

தொலைக்காட்சி Vs சினிமா


பணயக்கைதிகள்: செய் அல்லது செத்துமடி-(Hostage: Do or Die ) என்ற நிகழ்ச்சி..அதிரடி சினிமாக்களை மிஞ்சும் காட்சிகள் ஒரு தொலைக்காட்சியில் சுமார் ஒரு மணி நேரம் காணும் இந்தக் காட்சிகள் த்திரிலர் திரைப்படம் போல் உள்ளது...இப்போது History Tv 18 - ல் விருந்து படைக்கிறார்கள்

freeonlinephotoeditor

நமது தமிழ் தொலைக்காட்சிகளில் இன்னும் இராமாயணம்,மகாபாரதம் போன்ற தொடர்களும் அழுதுவடியும் சீரியல்களையும் வடை...போச்சு போன்று அருவெறுப்பு ஊட்டல்களையும் காண்பித்து நமது அறிவாற்றலையும் சிந்தனைகளையும் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்க...வெளிநாட்டுச் சேனல்கள்  அறிவுக்கு விருந்து படைக்கின்றன..உண்மை நிகழ்வுகளைச் சித்தரித்து நம்மைச் சிந்திக்க வைக்கின்றன 

இங்கே சினிமாவுக்கே முக்கியத்துவம் பாடலுக்கு ஒரு சேனல் படத்துக்கு இன்னொரு சேனல் என்று  24 மணி நேரமும் சினிமா...சினிமா... இந்தப் போதையிலையே நமது வாழ்க்கை அதிலும் சனி..ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சினிமா பிரபலங்களை வைத்து இவர்கள் அடிக்கும் கூத்து காணச்சகிக்கவில்லை

அங்கே ஒரு தொலைகாட்சி தொடர் எப்படியெல்லாம் சினிமா தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகிறது என்பதைக் காணுங்கள்..தொலைகாட்சி தொடருக்கு அவர்கள் செலவிடும்  பணத்தில் இங்கே ஒரு திரைப்படம் எடுத்து வெளியிடலாம் 

 

                              thanks-cinimatic touch video by investigation.discovery

பணயக்கைதிகள்: செய் அல்லது செத்துமடி-என்பது ஒர் உண்மைச் சம்பவத்தின் பிரதிபலிப்பு.நடந்த நிகழ்வை தத்ரூபமாகக் காட்சிப்படுத்துகிறார்கள் அந்த நிகழ்வின் போது  அதில் பங்கு கொண்டவர்கள் சாட்சிகளாகப் பேசுகிறார்கள்..எப்படி பணயக்கைதிகள் கடத்தல்காரனிடமிருந்தும்,கொலைகாரனிடமிருந்தும் காக்கப்படும் அந்த உண்மை நிகழ்வு அப்படியே ஒரு திரைப்படம் போன்று............

freeonlinephotoeditor

ஒரு விமானக்கடத்தல் தொடர் -இது பிப்ரவரி 12, 1993 அன்று பயணிகளுடன் லுஃப்தான்சா விமானம்-592 கடத்தப்பட்ட உண்மைக் கதை. இந்தத் தொடரில் கடத்தல் காரனுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரியின் சொந்த அனுபவம் அந்த விமானத்தில் பயணித்த பல்வேறு  பயணிகளின் மனநிலை கடத்தல் நிகழ்ச்சிக்களுக்கிடேயே பேட்டியாக...

freeonlinephotoeditor
இன்னொரு ஆவணப்படத்தில் ஓர் உயர்நிலைப்பள்ளியில் 1992 மே மாதத்தில் ஒரு நாள், எரிக் ஹூஸ்டன் என்ற முன்னாள் மாணவர் மூன்று மாணவர்களையும் ஒர் ஆசிரியரையும் கொலை செய்துவிட்டு எண்பது மாணவர்கள் பணயக்கைதிகளாகத் துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துக்கொண்டு....இந்த சித்தரிப்பு நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகளாக.....

freeonlinephotoeditor

இன்னொரு நிஜ சித்தரிப்பு படத்தில்..நான்கு பொதுமக்களையும் இரண்டு காவல் அதிகாரிகளையும் கொலைசெய்துவிட்டு வில்லியம் க்ரூஸ் என்ற கொலைகாரான் ராபின் பிரவுன் என்ற டிபார்ட்மெண்டல் ஷாப்பில் கணக்கராக வேலை செய்த 21 வயது பெண்மணியைப் பணயக்கைதியாகப் பிடித்து வைத்திருக்கும் பதறச் செய்யும் காட்சிகள்...

                                             thanks-video by investigation.discovery

இப்படி நிறைய....நிஜ சம்பவங்கள் திரைப்படம் பார்க்கும் உணர்வுடன் தமிழிலும் தினமும் History Tv 18 தொலைகாட்சி திரையில்.. கண்டுகளியுங்கள்    

*************************************************************
நாளைய சினிமாப் பதிவு................
*************************************************************


 

                                   அல்லு அர்ஜுன் 

                        அமலா பால்-கேத்தரின் திரேசா

                                          இணைந்து வழங்கும் 

 

 

 

        இத்தரம்மாயிலது(தெலுங்கு)

                           சினிமா விமர்சனம்

 

 

 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1