google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: புலம்பும் நகரத்து மரங்கள்

Sunday, June 30, 2013

புலம்பும் நகரத்து மரங்கள்

http://affordabletreeserviceandlawncare.com/resources/6.jpg  

சிக்குவிழுந்து கிடக்குதைய்யா
எங்கள் சிங்கார தலைகள்
சீர்குலைந்து கிடக்குதைய்யா
எங்கள் சின்னஞ்சிறு இலைகள்
உங்கள் வாகனப்புகையிலும்
குழிவிழுந்த சாலைப்புழுதியிலும்
சிக்குவிழுந்து கிடக்குதைய்யா.....
சீரழிந்து கிடக்குதைய்யா........

கிராமத்து கனிதரும் மரங்களல்ல
உங்கள் நகரத்தை அழகுசெய்ய
நீங்கள் நட்டிவைத்த மரங்கள்
உங்கள் சாலையை சரிசெய்ய
எங்கள் கைகளை ஓடித்ததால்
அரைகுறை ஆடையில் நிற்கும்
நகரத்து நாகரிக மங்கைகள் போல்
நாங்கள் நகரத்து மரங்களைய்யா

நிழல் தரும் மரங்கள் நாங்கள்
நிற்கமாட்டீர்கள் யாரும் நீங்கள்
அவசரவேலை உங்களுக்கு
ஆனாலும் நீங்கள்
கம்பி இணைப்புகளை
இழுத்துச்செல்ல
தவறாமல் போடுவீர்கள்
திருப்பதி மொட்டை எங்களுக்கு

வாகனங்களின் 
வக்கிர இறைச்சல்களில்
தொலைந்துபோகிறது 
எங்கள் தென்றல் ராகம்
தள்ளாடுகிறது 
எங்கள் தாலாட்டுப்பாடல்

எந்த கத்திரிவெயிலுக்கும்
சுகம்தருவோம் நாங்கள்
ஆனாலும் நீங்கள்
அடைந்து கிடப்பீர்கள்
குளிர்சாதன அறைக்குள்

உங்கள் சாக்கடை நீரைஉறிஞ்சி
எங்கள் தேகமும் நாறுகிறது
உங்கள் நகரத்து நச்சு காற்றால்
எங்கள் சுவாசமும் நாசமானது

(மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் நகரத்து மரங்கள் எப்போதும் இப்படித்தான் இருக்கின்றன...புலம்பி ஆகப்போவது என்ன? அரசியல்வாதிகளின் பிறந்த நாளுக்கு ஆங்காங்கே நட்டி வைக்கப்படுகின்றன கட்சி கொடிக்கம்பங்கள் போல்.... ஒரு நாள் மட்டுமே உயிரோடு இருக்கின்றன..அடுத்த பிறந்தநாளுக்கு மீண்டும் மரம் நடுவதற்கு இடம் வேண்டும் என்பதினாலா?)

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1