ராஞ்சனா(இந்தி)- ஒரு காதல் காவியம்...என்றும் வாழ்வில் மறக்கமுடியாத முதல் காதலை தனுஷ்-சோனம் கபூர் மூலம் இயக்குனர் ஆனந்த் எல். ராய் அழகாக காட்சிப்படுத்தி நம் கண்களுக்கு விருந்தளிக்கிறார்...
பெனாரஸ் புனித நகரில் உள்ள குந்தன்(தனுஷ்) தன் சிறு வயதுதிலேயே ஜோயா(சோனம் கபூர்) மீது காதல் கொள்ள..
அவளோ தில்லிக்கு படிக்க செல்கிறாள்.. ஆனால் அவனோ அவள் நினைவிலேயே.. சில வருடங்களுக்குப் பிறகு ஜோயாவை சந்திக்கும் குந்தன் அவளுக்கு அக்ரம் (அபய் தியோல்) மீது உள்ள காதலையும் அவர்கள் காதலை சேர்த்துவைக்கும் படி குந்தனிடமே அவள் கேட்பதும் ஆக மிகப்பெரிய காதல் ட்விஸ்ட்...குந்தன் இளமைக்காதல் வென்றதா...? அல்லது ஜோயாவை அக்ரமுடன் சேர்த்து வைத்தானா...? என்பதே கதை.
இதற்கிடையில் தில்லி அரசியல்,AICP (ALL INDIA CITIZEN PARTY)..அப்படி இப்படி என்று கதை த்திரிலர் படமாக தடம் மாறிப்போனாலும் குந்தன்-ஜோயா காதலும் ஊடலும் என்று படம் காதலை மையம் கொண்டு...ஒரு காதல் நாவலைப் படிக்கும் உணர்வைத் தருகிறது.
படத்தின் சிறப்பான காட்சிகள் -
-ஜோயாவிடம் ஆட்டோவில் குந்தன் தன் காதலை கையைக் காயப்படுத்திக் கொண்டு சொல்லுவது.
-வாரணாசி தெருக்களில் குந்தன் போலீஸ்காரரை விரட்டி விரட்டி நடத்தும் ஹோலிப் பண்டிகைக் காட்சி
- குந்தனுடன் ஜோயா ஸ்கூட்டரில் போகும் போது அக்ரம் மீது உள்ள அவளது காதலைச் சொல்ல....குந்தன் அப்படியே பிரமை பிடித்தவனாக அவளுடன் ஆற்றில் போய் விழுவது
-வாரணாசி ரயில் நிலையத்தில் ஜோயாவை சைக்கிளில் விரட்டும் காட்சி
-தில்லியில் நடக்கும் AICP சமுக சேவைக் காட்சிகள்
வாரணாசி நகரத்தின் சந்து பொந்து எல்லாம் சிறப்பாக படம் பிடித்து உள்ளார் ஒளிப்பதிவாளர் நடராஜன் சுப்பிரமணியன்...படத்தின் சிறப்பு ஒளிப்பதிவின் கண்ணுக்கு குளிர்ச்சியான கலர் டோன்
ஏ ஆர் ரஹ்மான் இசை கதைக்கும் காட்சிகளுக்கும் நல்ல உயிரோட்டம்..பாடல்கள் அவ்வப்போது காட்சிகளுக்கிடையில் பிட்டு பிட்டாக வந்தாலும் காதுக்கு இனிமை.
thanks-YouTube-by sonymusicindiaSME
தேசிய விருது பெற்ற நடிகர் என்பதும் கொலை வெறி டி பாடல் தந்த புகழும் தனுஷ்க்கு பாலிவுட்டில் நடிகராக அங்கீகாரம் கிடைத்துள்ளது...
அவருக்கே உள்ள திறமையும் அதிஷ்டமும் நிச்சயம் அங்கேயும் அவருக்கு நிலையான இடம் தரும் என நம்புவோமாக....
thanks-YouTube-by Eros Now
முதல் காதல் என்றும் முடிவில்லாதது...என்று சொல்லும் ராஞ்சனா-படம் பார்க்கலாம்...பார்க்கும் போது உங்கள் முதல் காதல் நினைவுக்கு வரலாம்...நல்லதொரு காதல் நாவலை வண்ண ஓவியமாக பார்த்த உணர்வு...நெஞ்சை விட்டு நீங்காது.
ராஞ்சனா (இந்தி)தான் அம்பிகாபதி (தமிழ்)
அம்பிகாபதி (தமிழ்)தான் ராஞ்சனா (இந்தி)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |