அடேய்...அரிச்சந்திரா!
அதுதான் உன் மனசாட்சி
அதை நீ மறந்துவிடாதே!
எது நல்லதோ
அது நடக்க
ஆயிரம் பொய் சொல்
எது கெட்டதோ
அதை முடக்க
ஆயிரம் பொய் சொல்
மெய் என்பது
பூவுக்குள் மறைந்திருக்கும்
வாசம் போன்றது
முகர்ந்தால்தான் தெரியும்
பொய் என்பது
சாக்கடையில் கலந்திருக்கும்
நாற்றம் போன்றது...
அருகில் போனாலே
அதுவாகவே நாறும்
அடேய்...அரிச்சந்திரா!
நீ பொய் சொல்லக்கூடாது
என்று நினைத்தால்...
உண்மை
உயிரோடு புதைந்துவிடும்
அரசியல்வாதிகள் பேசுவது
பொய்யா..? மெய்யா...?
எதுவும் புரியாது.
அவர்களிலும்
மலரும் உண்டு
மலமும் உண்டு
அடேய்...அரிச்சந்திரா!
எது நல்லதோ
அது நடக்க
நீயும் பொய் பேசு..
தேர்தலின் போது
உன் வாக்குச் சீட்டிலே
மதவாதிகள் செய்வது
பொய்யா..? மெய்யா...?
எதுவும் தெரியாது.
அவர்களிலும்
மலரும் உண்டு
மலமும் உண்டு
அடேய்...அரிச்சந்திரா!
எது நல்லதோ
அது நடக்க
நீயும் பொய் பேசு..
ஆனால்...
கடவுளை வணங்கும்போது
உன் இதயத்தில் பூக்கட்டும்
மனிதாபிமானம்
(ஏதே தோணிச்சு
இப்படி எழுதிப்புட்டேன்...
எனக்கும் புரியல
எதுக்குனும் தெரியல..
எதுக்கும் நீங்க உஷார்
இதப்போட்டு குழப்பிக்காதீங்க...)
..................பரிதி.முத்துராசன்
அண்ணேன்...
கவிதைனா இப்படித்தான் இருக்கும் ...
நீங்க அங்க திட்டுறது இங்க என் காதில விழுது
வேணுமுனா அப்படியே சினிமினி பப்ஸ் சாப்பிடுங்க...
பாலிவுட் பச்சி..அதுதாங்க இந்தி போலிஸ்கிரி படத்தில் குத்துப்பாட்டு கவிதா ஆட்டத்தோடு ஆட்டமா அரைகுறை ஆடையில் போட்டு இருந்துச்சாம் கழுத்திலிருந்து சிலுவை மாலை...அப்படியே கொடுத்துச்சாம் ஆபாச போஸ்....ஹி..ஹி...
அதனால கிருத்துவ அமைப்புகளுக்கு கோபம் வந்துடுச்சாம்...அடிக்காத குறை...அழாத குறையா அம்மணியும் மன்னிப்பு கேட்டுச்சாம்...யாரப்பா அது எனக்குப் புடிக்காத வார்த்த தமிழ்ல மன்னிப்பு எங்கிறது...இது இந்தியிலப்பா..அட..பாப்பா பாவம் விடுங்கப்பா...
யோவ்..பதிவரே...
சும்மா..எங்கள இப்படிக் கடி...ச்சீ..
கோபத்தீய மூட்டாத...ஆங்
கோவிச்சிக்காதீங்க...அண்ணன்மார்களே...
கவிதையினா யாரும் இந்தப்பக்கமே
தலவச்சிப் படுக்க மாட்டேங்கிறாங்க..
அதனால்தான் இப்படி சரி..வந்ததுக்கு
கவுண்டர் அட்டாக் பாருங்க

thanks-YouTube-by Bala Subramanian
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |