google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சிங்கம்-2 கடிக்குமா? நடிக்குமா?

Monday, June 03, 2013

சிங்கம்-2 கடிக்குமா? நடிக்குமா?



















என்னடா இந்த சிங்கம்-2 சினிமாவுக்கு வந்த சோதனை? தலைப்பே எங்கோ இடிக்கிறதே என்று நினைக்காதீர்கள்...சிங்கம்-2 வெளிவரும் இப்போதைய தமிழ் சினிமாவின் காலகட்டத்தை நினைத்து இப்படிக் கேட்கத் தோன்றியது.


freeonlinephotoeditor
 
இப்போது கோலிவுட்சினிமா குறும்பட இயக்குனர்களின் கைகளில் சக்கப்போடு போடுகிறது.அதிரடி நடிப்புக்கு பெயர் பெற்றவர்கள் அரண்டு போய்க் கிடக்கிறார்கள் நச்சுனு பஞ்ச்  டயலாக் பேசி கலக்கியவர்கள் கலங்கிப்போய்க் கிடக்கிறார்கள்...இந்த நேரத்தில் முதலில் வந்து வெற்றிநடை போட்ட இயக்குனர் ஹரி-நடிகர் சூர்யா வின் அதிரடி சிங்கம்....தொடராக மீண்டும் சிங்கம்-2 என்ற பெயரில் கர்ஜனை செய்து வருகிறது

ஆனால் இயக்குனர் ஹரியோ மிகவும் சாமார்த்தியமாகக் காய் நகர்த்துகிறார் அவரது சிங்கம்-2 எல்லாவற்றையும் எதிர்த்து நிற்கும் திறமையுடன் வளர்க்கிறார் அவைகளை இங்கே காண்போம்.................

freeonlinephotoeditor  

சிங்கம்-2 சாதாரணமான சிங்கம் அல்ல முதல் முறையாக இயக்குனர் ஹரி தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிகாடுகளில்... சாரி....வெளிநாடுகளில்   பிடித்து வரும் சிங்கம்..இந்த சிங்கத்தை எதிர்த்து நிற்க  பிரிட்டிஷ் நடிகர் டேனி சபானி(Danny Sapani) என்ற இன்னொரு நைஜீரியா சிங்கத்தையும் பிடித்துவந்து மல்லுகட்ட விடுகிறார்..


freeonlinephotoeditor

இந்தச் சிங்கம்-2 துரைசிங்கத்துக்கு எத்தனை காதலிகளோ?... அய்யோ... அழகு தேவதை அனுஷ்கா ஷெட்டி ஒருபுறம் 

freeonlinephotoeditor

குண்டு கன்னங்கள் கொண்ட தாரகை ஹன்சிகா மோட்வானி இன்னொரு புறம் இருக்க....குத்து பாட்டு ஓட்டத்துக்கு...ச்சே...ஆட்டத்துக்கு அஞ்சலி ஒருபுறம்..என்று மூன்று கவர்ச்சி புள்ளி மான்களோடு கொஞ்சிக் குழாவி வருகிறது 


freeonlinephotoeditor

மலேசியாவில் நடுக் கடலில் கப்பலில் எடுக்கப்பட்ட சிங்கம்-2 படத்தின் கடுமையான சாகச சண்டைக்காட்சிகளில் நடிகர் சூர்யா மிகவும் சிரத்தையுடன் டம்மி டும்மி போடாமல் அவரே நடித்துள்ளது பெயருக்கேற்ற சிங்கம்தான் 

                             thanks YouTube-by PRINCEPICTURESnU

எல்லாவற்றையும் விடச் சிங்கம்-2 டீசர் இணையத்தில் பெற்ற (16/05/2013 -லிருந்து இதுவரை 15 லட்சம் பேர்களுக்கு மேல் பார்வை) அதீத வரவேற்பு ஆச்சரியமானது. மேலும் இயக்குனர் ஹரி சொன்னது போல்...சிங்கம்-2 கதை முதல் சிங்கத்தின் தொடர்ச்சியாக இல்லை என்பதும் இதில் உறுதியானது.

freeonlinephotoeditor

இத்தனை எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வரும் சிங்கம்-2 நடிகர் சூர்யாவின் விசிறிகளாலும் மட்டுமன்றி இயக்குனர் ஹரிக்கு உள்ள தனிப்பட்ட திறமையாலும் கம்பீரமாக ராஜநடை போடும் என்றும்

பார்வையாளர்களைக் கடிக்காமல் சர்கஸ் கூடாரத்தில் உள்ள நிஜ சிங்கம் போல் நன்றாகவே நடிக்கும் என்றும் நம்புவோமாக....வாழ்த்துவோமாக.
(அப்பாடா...எப்படியோ வச்ச தலைப்புக்கு பாதகமில்லாம எழுதிப்புட்டேன்...அவ்வ்வ்வவ்...இனி ஹரியாச்சு...சூர்யாவாச்சு..) 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1