google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: லிடோ டி பாரிஸ்- சொர்கத்தில் கொஞ்ச நேரம்

Tuesday, June 11, 2013

லிடோ டி பாரிஸ்- சொர்கத்தில் கொஞ்ச நேரம்









லிடோ டி பாரிஸ்- 
சினிமாவை மிஞ்சும் சிங்காரம்..
அந்த பூலோகத்தின் சொர்க்கத்தில் 
 மயங்கிக்கிடந்த  கொஞ்ச நேரம் 
என் வாழ்நாளில் எந்நாளும் 
என்னால் மறக்கமுடியாத 
எழில்மிகு அனுபவம் 

1999-ல் ஒரு நாள்  
பாரிஸ் நகரின் மையப்பகுதி
ஈபிள் கோபுரம் இருக்கும் சாலையில்.. 
நண்பரோடு நடந்துவரும் போது
திரையரங்கம் போல் ஓன்று
என்னவென்று வினாவியபோது...  







அது ஒரு கலையரங்கம் என்றும் 
அங்கே இன்னிசையுடன் நடனங்கள் 
அருமையாக நடக்கும்... 
அதன் பெயர்.... 
லிடோ டி பாரிஸ் (LIDO DE PARIS ) 
 நள்ளிரவு ஷோவுக்கு   
நாமும் போகலாம் என்றார்..... 

 



    


லிடோ டி பாரிஸ்- 

பாரிஸ் Champs Elysées Avenue-ல்  
1946-ல் ஆரம்பிக்கப்பட்ட 
ஒர் இரவு காபரே கலையரங்கம்.. 

 இதன் பெருமைக்கு பெருமை சேர்த்து
தங்கள் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் 
லாரல்-ஹார்டி, எல்விஸ் பிரெஸ்லி,
இன்னும் நிறையப் பிரபலங்கள் 

ஆனால் உற்றுப்பார்த்தால்  
ஒலி-ஒளி அமைப்புகளுடன்
நம்ம ஊரு நாடகக் கொட்டகைதான்.. 
எந்த மூலையில் இருந்தாலும் 
அருகில் இருப்பது போல் 
அடுக்கு இருக்கைகள் 

 நகரும் மேடையில் 
கண்கவரும்  காட்சியமைப்புகள்..
BLUE GIRLS  கன்னியர்களும் 
டான்சர் பாய்ஸ்களும்  
விதவிதமான ஆடைகள் 
அழங்கார ஒப்பனைகள்
கலைநயத்தையும் ஓய்யாரத்தையும்  
கவித்துவமாகக் காட்டும் அரங்கம்








 நுழையும் போதே 
அன்பான வரவேற்பு
திருமண மண்டபத்தில்
நுழைந்தது போல்...

சிறிது நேரத்தில் 
நிகழ்சி ஆரம்பம்
அய்யோ...
ரம்மியமான இசை

ஜொலிக்கும் நட்சத்திர ஒளி
ஆடை அனிந்தும் அணியாமலும் 
தேவதைகள் போல் ஒப்பனையுடன்  
உண்மையான இளம் தேவதைகள்  
அந்தரத்தில் அங்குமிங்கும் பறக்க...

எங்கள் மேஜை மீது...
எங்கள் இருவருக்கும் ஓன்று என்று 
பிரெஞ் நாட்டு மதுப் (champagne) புட்டி...?

அதை சப்புக்கொட்டி அருந்தும் போதே... 
அருகில் தரையிலிருந்து ஒரு பட்சி 
அப்படியே அந்தரத்தில் பறந்தது...
என்னங்கடா...நடக்கு இங்கே?
அத்தனையும் மர்மமாக...மாயமாக  









நடுமையத்தில் நகர்ந்த மேடையில் 
ஒரு வண்ண நீருற்று...
அதன் நடுவில்  அழகான பெண் 
அங்கங்கள் குலுங்க அவளது  நடனம்...
அவளைச் சுற்றியும் ஆரணங்குகள்...

திடிரென்று ஆவேசமாக 
குதிரையில் பாய்ந்துவரும்
அலெக்சாண்டர்...? நெப்போலியன்...?

பொங்கிவரும் கடல்....
பறந்து வரும் பட்டாம்பூச்சிகள்

இப்படி நிறையக் காட்சிகள்...
ஒன்றரை மணி நேரம் 
போனதே தெரியவில்லை....

அங்கே ஆபாசம் இல்லை 
அருவெறுப்பு இல்லை 
அழகு..நேர்த்தி..ரம்மியம் 
அதைத் தவிர....
வேறொன்றுமில்லை..







                                        thanks-YouTube-by Conciergerie.com Tours








>





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1