பிராந்தியில் பீர் ஊற்றி அடித்தது போல் காதலும் காமெடியும் கலக்கலாக படம் பார்ப்பவர்களை ஒருவித டாஸ்மாக் போதையில் தள்ளாடச் செய்கிறது சுந்தர்.C -யின் தீயா வேலை செய்யணும் குமாரு.........காதல் கவர்ச்சிக்கு சித்தார்த்-ஹன்சிகா.....காமெடிக்கு சந்தானம் இதுக்கு மேல என்ன வேணும்..?
(என்னடா...இது? விமர்சனம் ஆரம்பமே இப்படியா...? என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது. அதைக் கடைசியில் காண்போம்...)
கதை-காதல் பரம்பரையில் வந்த குமாருக்கு(சித்தார்த்) சிறுவயதிலிருந்தே பெண்கள் என்றால் அழற்சி..ஆனால் I.T.கம்பெனியில் வேலை செய்யும் அவருக்கு காதல் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் ரஞ்சனா(ஹன்ஷிகா)-வை காதலிக்க..அவருக்கு தீயா வேலை செய்யணும் குமாரு-னு காதல் அய்டியாக்கள் கொடுத்து மோக்கியா (சந்தானம்) காசு வாங்கிக்கொண்டு உதவி செய்ய.. பிறகு அவரே அவர்கள் காதலுக்கு வில்லனாக மாறுவதும்...கடைசியில் குமாரும் ரஞ்சனாவும் ஓன்று சேர்ந்தார்களா...? என்பதே கதை...அதை விறுவிறுப்பாகவும் நகைச்சுவையாகவும் காட்சிகளால் அழகாகசொல்லியிருக்கிறார்... இயக்குனர் சுந்தர்.சி....
(காதல் +காமெடி) தீயா வேலை செய்திருக்கிறாரு சுந்தரு.....
காதலில் சொதப்புவது எப்படி..? என்று சிரிக்க நடித்த சித்தார்த் இதில் சந்தானத்துடன் இணைந்து காதலில் ஜெயிப்பது எப்படி..? என்று கலக்கியிருக்கிறார். காமெடியன் நீயா..? நானா...? என்று இருவருக்கும் போட்டி போல் தெரிகிறது...ஆனால் சந்தானம் இதில் தூக்கல்...இதில் விரசமின்றி உரையாடல்...அவர் வாய் திறந்தாலே..வார்த்தைகள் நகைச்சுவையாக வந்து விழுகின்றன
ஹன்சிகா...தேனில் பிசைந்த திணை மாவு உருண்டை போல்...கொழு..கொழு..என்று கதைக்கேற்ற கவர்ச்சியில்...பாடல்களில் ஜொலிக்கும் காஸ்ட்டியுமில்... உபயம் குஷ்பு சுந்தர்... விமான நிலையத்தில் ஆத்திரத்தில் குமாரிடம் செருப்பைக் காட்டுவதும்
அதே நேரம் மருத்துவ மனையில் அன்பைக்காட்டுவதும் நன்றாக நடிக்கவும் செய்கிறார்
சந்தானம்-இருவேறு பட்ட நடிப்பு...கமேடியனாகவும் அவரே காமெடி வில்லனாகவும் அவரே..நோக்கியா-கனெக்டிங் பீப்பிள் மாதிரி இதில் அவர் மோகியாவாக காதலர்களை இணைத்து வைக்கும் வேலை...குமாருக்கு I.Q.காதல் டெஸ்ட் வைப்பது துள்ளல் என்றால் மூன்று லெவெலில் 1-பாரில் ஒரு பெண்ணிடம் அடி வாங்குவது 2- அங்காடியில் மொபைல் நம்பர் வாங்குவது 3-காபி பாரில் முத்தம் கொடுத்து அடி வாங்குவது போன்ற காதல் ஐடியாக்கள் கொடுக்கும் காட்சிகள் நன்றாகவே சிரிக்கவைக்கின்றன...
(image with mouse hover effect)
ஒரு நடிகர்-நடிகை பட்டாளமே நடித்துள்ளன அவரவர் வேலைகளை கச்சிதமாக செய்கின்றனர்...டெல்லிகணேஷ் கொஞ்ச நேரம் வந்தாலும் நன்றாகவே சிரிக்கவைக்கிறார்...அந்த மாதிரி விடுதி ஓனர் மனோபாலா-வின் அந்த மாதிரி அட்டகாசம்...அங்காடியில் நளினி-யின் அடி பிடி காமெடி இப்படி நிறையச் சிரிப்பூக்கள் சிதறிக்கிடக்கின்றன
சத்யாவின் இசையில் பா.விஜய் வார்த்தைகளில் பாடல்கள் அத்தனையும் புதுமை...அருமை..ம்..பழைய படப் பாடல்களை டைமிங்காக உள்ளே திணிப்பது இப்போதெல்லாம் பேஷன் ஆகிவிட்டது...நிறைய வருகின்றன ..நன்றாக உள்ளன....
thanks-YouTube-by UTV Motion Pictures
கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் ஜப்பானில் எடுக்கப்பட்ட இரண்டு பாடல்களும் அருமையாக இருக்கின்றன
சுந்தர்.சி...திரைக்கதை வசனத்தில் நிறைய சிரிக்க வைக்கிறார்...பொதுவாக இப்படிப் பட்ட படங்களில் லாஜிக் பார்க்க கூடாது...அது இதுக்கும் பொருந்தும்
பிராந்தியில் பீர் ஊற்றி அடித்தது போல்...என்று ஆரம்பத்தில் எழுதினேனே அது தப்பு...படத்தில் சந்தானமும் சித்தார்த்தும் கடைசியில் ஒரு வெளி நாட்டு மதுப்புட்டியை வைத்துகொண்டு...எதுவும் கலக்காமல் அப்படியே சாப்பிடும் அலப்பறைக் காட்சிகள் ரொம்ப அதிகம் என்றாலும் படத்துக்கு தேவையானது....அப்படித்தான் இதுவும் நம்ம விமர்சனத்துக்கு தேவை
எல்லோரும் இந்த இளமைத் துள்ளாட்டத்தை திரையரங்ம் சென்று அருந்துங்கள்...நகைச்சுவை போதையில் தள்ளாடுங்கள்........
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |