google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஜய் படங்களில் சிறந்தது காதலா? அதிரடியா?

Monday, June 17, 2013

விஜய் படங்களில் சிறந்தது காதலா? அதிரடியா?



vijay



இளைய தலைமுறையின் இணையில்லா நட்சத்திர நடிகர் இளைய 

தளபதி விஜய்-யின் பிறந்தநாள் சிறப்பு பதிவாக.....60 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள அவரது படங்களில் சிறந்ததாக கருதப்படுவது காதல் திரைப்படங்களா...? அதிரடி ஆக்சன் திரைப்படங்களா...?

vijay

வெற்றி திரைப்படத்தில்  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான  விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தில்தான் நடிகரானார்.செந்தூர பாண்டி,ரசிகன்,தேவா....என்று அவரது வாலிப வயதுக்கேற்ற படங்கள் அவருக்கு பயிற்சி பட்டறையாகத்தான் இருந்தன...லவ் டுடே படத்திலிருந்து அவரது நடிப்பு நல்ல பரிணாமம் அடைந்து....

vijay

காதலுக்கு மரியாதையில்அவரது காதல் நடிப்பு உச்சத்தை எட்டியது...முதன் முதலாக தமிழ்நாடு அரசின் விருதையையும்  பெற்றுத்தந்தது.துள்ளாத மணமும் துள்ளும்..குஷி போன்ற படங்கள் அவரை ஒரு காதல் ஹீரோவாக நிலைநிறுத்தின

vijay

ஆனால்...அவர் தன் பரிணாமத்தை பிரெண்ட்ஸ் படத்திலிருந்து அதிரடி நடிப்புக்கு; மாற்றிக்கொண்டு...பத்ரி,பகவதி,திருமலை...போன்ற அதிரடிப்படங்களில் பட்டை தீட்டிக்கொண்டு அவரது நடிப்பின் இன்னொரு பரிணாமத்தைக் காட்டினார்....அது கில்லி படத்தில் அவரது மிதமிஞ்சிய  அதிரடி நடிப்பு....பிலிம் பேர் விருது முதல் இன்னும் பல விருதுகளை இன்றுவரை அவருக்கு வாரி வழங்கி வருகிறது  

vijay


திருப்பாச்சி,சிவகாசி,போக்கிரி..என்று தொடர்ந்து அவரை நட்சத்திர நடிகராக்கி...துப்பாக்கியில் நிலையான இடத்தை தந்தது.
ஒரு சிறந்த நடிகன் எதை வைத்து தீர்மானிக்கப் படுகின்றான் என்றால்....(A great actor is so convincing in a role that he can hold an audience captive and make them feel as if there is nothing but the story at hand..).ஒரு சிறந்த நடிகன் பார்வையாளர்களை கதையின் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தன் நடிப்பால் சிறை பிடிக்கும் வல்லமை கொண்டவன் என்று வரையறுக்கப்படுகிறது.

vijay

அதைத்தான் விஜய் தன் அதிரடிப்படங்களில் செய்கின்றார்..நகைச்சுவை உணர்வு அவரது அதிரடிப்படங்களில் அதிகம் தென்படும் ..அது அவரது கதாபாத்திரத்தின் அதீத தன்மையை அதிரடியாய் வெளிப்படுத்தவே அதனால்தான் அவரது காதல் திரைப்படங்களைவிட ..காதலும் நகைச்சுவையும் கலந்த அவரது அதிரடிப்படங்கள் அவருக்கு நிறைய விருதுகளையும் ரசிகர்களையும் அள்ளித்தருகிறது...

thalaiva
அதே பார்முலா இனிவரும் தலைவாவிலும் தொடருமென்றால்...அவர் இந்திய சினிமா உலகில் நிலையான மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்த்தைப் பெறுவார்...அவருக்கு நம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.....வாழ்த்துக்கள்


இதுவரை நீங்கள் படித்தது....எனது பார்வையில் விஜய் படங்கள்
அதுவே உங்கள் பார்வையில் என்னவென்று வாக்களித்து தெரிவியுங்கள்.... 

விஜய் படங்களில் சிறந்தது 

காதலா? அதிரடியா?



வாக்களிக்கும் அனைவருக்கும்.நன்றி...
கருத்துக்கணிப்பு ...ஒரு நாள் மட்டுமே         
***************************************************************************
 ஒரு தில்லு முல்லு படத்துக்கு 
இதுவும் ஒரு தில்லு முல்லுப் பதிவு




தில்லு முல்லு
சினிமா விமர்சனம்

ஒரிஜினல் தில்லு முல்லு 
வெற்றிப்படமாக ஓடியது 
சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக...

இந்த தில்லு முல்லு 
என்ன சொல்லுது...? 
நம்மை 
கிச்சு கிச்சு மூட்டுமா...?
இல்லையேல் 
நமச்சல் ஊட்டுமா...?

விரைவில்...
நமது 
சினிமா விமர்சனத்தில் 
காண்போம்... 

தில்லு முல்லு -சினிமா விமர்சனம்
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1