google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அன்னக்கொடி-சினிமா விமர்சனம்

Wednesday, July 03, 2013

அன்னக்கொடி-சினிமா விமர்சனம்


அன்று கிராமத்து காதலுக்கு  திரைக்  காவியமாக முன்னுரை எழுதிய பாரதிராஜா இன்று அன்னக்கொடியில் எழுதியது முடிவுரை.அன்று கிராமத்து காதலுக்கு புதிய அத்தியாயம் படைத்தவர் இன்று அன்னக்கொடி படம் மூலம் கடைசி அத்தியாயம் எழுதிவிட்டார்.

இதைத்தான் சிம்பாலிக் ஷாட்டாக படம் ஆரம்பிக்கும் போது பாரதிராஜா காட்டுகிறார் (பெரிய மண் தாழியில் ஆடு,கோழி..போட்டு அய்யனாரை வணங்கி மலை முகட்டிலிருந்து உருட்டி விடுகிறார்கள் கிராமத்து ஊர் மக்கள்) என்று நினைக்கத் தோன்றுகிறது 

freeonlinephotoeditor

அன்னக்கொடியின் கதை-
ட்வீட்டர்,முகநூல்,பதிவர்கள்...இப்படி எல்லோரும்  புலம்பித் தடுத்ததையும் மீறி படம் பார்க்கப் போன என் சோகக்கதை...
இருபது பேர்கள் கூட இல்லாமல் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது திரையரங்க வாசலில் நின்ற காவல்துறை அதிகாரிகள் கூட்டமும் எங்களை அவர்கள் பார்த்த பார்வையும்...(விஷமிகள் நுழைந்து விட்டார்கள் என்று பாரதிராஜா சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டார்களோ? இப்படி இவர்கள் விஷமப் பார்வை பார்க்கிறார்கள்)அந்தக் கதை சொல்லவா?

freeonlinephotoeditor

செருப்பு தைக்கும் சாதியை சேர்ந்த ஆடு மேய்க்கும் கொடிவீரனும் கள்ளச் சாராயம் காய்க்கும் சாதியைச் சேர்ந்த சுள்ளி பொறுக்கும் அன்னக்கொடியும் கருவேலம் காட்டிலும் கரட்டு மேட்டிலும் விரல் சூப்பும் அருவருப்பு  காட்சிகளை ஏதோ லைலா-மஜ்னுவின் காவியக் காதல்காட்சிகள் போன்று அடிக்கடி  கடி வெறுப்பு காட்டிய இயக்குனரின் ரசனை உத்தியைச் சொல்வதா....? (இதில் வேறு..மோதிரவிரல்,சுண்டு விரல்,கட்டை விரல்..என்று விரல் சப்புவதில் பல அர்த்த சாஸ்த்திரங்கள் கண்டுபிடிப்பு)...நீங்களே கேளுங்கள்

எல்லாவற்றையும் விடக் கொடுமை செருப்பு,நகம்,(முதல் மரியாதையில் காட்டிவிட்டதால் முடியை விட்டுவிட்டார்), கள்ளிச்செடி, கள்ளச்சாராயம், விபச்சாரம்,கடன்,வட்டிக்கு ஈடாக பொண்டாட்டி,... இதுதான் கிராமம் என்று பாரதிராஜா கிராமத்தைக்  கொச்சை படுத்திய கதையை சொல்லவா....?

ஊத்தவாயன் சடையன்(மனோஜ் குமார்) ஏதோ அதிசயமான கண்டுபிடிப்பு கதாபாத்திரம் போன்று படம் முழுக்க அவனையையும் அவன் கையாலாகாத தனத்தையும் பிரதானமாக காட்சிப்படுத்தி....அளவுக்கு மீறி அதீதமாக காட்டி.... அதுவே அருவெறுப்பாக ..இயக்குனர் இமயம் மகன் மீது பாசத்தில் சறுக்கி விழுந்த கதையைச் சொல்லவா...? (நல்லவேளை நடிகர்  பார்த்திபனும் இயக்குனர் அமீரும் மடையர்களாக சடையனாக நடிக்காமல் தப்பிப் பிழைத்தார்கள்...அவர்கள் அறிவாளிகள் )

மகன் ஆண்மையில்லாதவன் என்று தெரிந்ததும் சங்குனி  ஊரெல்லாம் கடன்கொடுத்து வீடு நிறைய அடுத்தவன் பெண்டாட்டிகளை அடைத்து வைத்திருந்தும் மருமகள் அன்னக்கொடியை அடைய நினைத்து அவள் கை விரல்களை சப்பும் விரசமான இச்சை கதையைச் சொல்லவா...?   

நடிப்பை எல்லோரும் முகத்தில் காட்டினால்  அன்னக்கொடியாகா நடித்துள்ள கார்த்திகா தன் முதுகில் காட்டுகிறார்...திணிக்கப்பட்ட எச்சை காட்சி...கொடிவீரன் தோளில்ஏறிக்கொண்ட அன்னக்கொடிக்கு கொடிவீரன் தொடையில் கொடுக்கும் முத்தக்காட்சி...அதனால் அவள் பெரிய பென்னாவதாக காட்டுவது...   இன்னும் ஊரில் வேசியாக நடித்துள்ள அம்ம(ன)....ணி சடையனுடன் ஒட்டி உறவாடும் காட்சி..இப்படி நிறைய ஷகிலா படத்தைவிட அதிக கில்மா காட்சிகள் தந்து இன்னும் இளமையாக தன்னைக் காட்டிக்கொள்ளும் பாரதிராஜாவை பாராட்ட வார்த்தைகளே இல்லை 

freeonlinephotoeditor
புதுமுகம் லஷ்மண் பெயருக்குத்தான் கதாநாயகன் கொடிவீரன்...நடிப்பதற்கு எந்த சந்தர்ப்பமும் இல்லை...அதனால்தான் படத்தின் டைட்டிலில் இருந்துகூட காணாமல் போய்விட்டார்.

மனோஜ் குமார்...ஊத்தவாயோடு கறைபடிந்த பற்களோடு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த காட்டுமிராண்டி தமிழனின் விஸ்வரூபம்...(சும்மாவே..தமிழன் என்றால் ஏளனமாகப் பேசுராயிங்க... அய்யா..பாரதிராஜா அன்னக்கொடியை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பி இருக்கும் தமிழனின் கொஞ்ச மானத்தையும் கப்பலேற்றி விடாதீர்கள்) படத்துக்கு சடையன் என்று பெயர் வைத்திருக்கலாம்.    

படத்தில் கதைதான் காணவில்லை இசை..பாடல்கள்...ஒளிப்பதிவு...இப்படி எதுவும் இருந்தும் இல்லாதது போல்... எண்ணக் கொடுமையடா இது?



அன்னக்கொடி-பாரதிராஜாவின் சாயம் வெளுத்துப் போச்சு...அவரது வெற்றிப் படங்கள் 16-வயதினிலே,புதிய வார்ப்புகள்,அலைகள் ஒய்வதில்லை,மண்வாசனை,முதல் மரியாதை போன்ற வெற்றிப்படங்களுக்கு பின்னால் உதவியாளர்கள் என்ற போர்வையில் கலைமணி,.பாக்கியராஜ்,மணிவண்ணன்...இப்படி மிகப்பெரிய சினிமா சித்தர்கள்  இருந்திருக்கிறார்கள்...அவர்கள் வைத்த புள்ளிக்கு இவர்  கோலம் போட்டு  வெற்றி கொண்டாடி இருக்கிறார்...அன்னக்கொடி- இன்று அவரே வைத்த புள்ளிகளுக்கு அவரே போட்ட கோலம்....அலங்கோலம் 


அன்னக்கொடியின் கதைக்களம் நான் வளர்ந்த...வாழ்ந்த...வடுகப்பட்டி அருகில் உள்ள தேனி அதன் சுற்றுவட்டார மண்வாசனை...சத்தியமாக இந்தப் படத்தில் சொல்லப்பட்டது போல் அங்கே காதல் இவ்வளவு கீழ்த்தரமாக இருந்ததில்லை....இப்படி சங்குனிகளையும் சடையன்களையும் அங்கே நான் கண்டதில்லை 

freeonlinephotoeditor

அன்னக்கொடியின் மீது அவ்வளவு பிரியமாக உள்ள  கொடிவீரன்  இன்னொருத்தியை மணந்து கையில் குழந்தையுடன் இருந்த போதும் அவன் மனைவியையையும் தூக்கிச் செல்லும் சடையன்..அப்புறம் அவன் மனைவி தூக்கில் தொங்க...அன்னக்கொடி கொடிவீரன் குழந்தைக்கு பாலுட்டுவதும் ..கடைசியில் இவர்கள் இணைந்துகொள்வதும்...அதற்கு இயக்குனர் பாரதிராஜா கடைசியில் திரையில் காதலுக்கு புது விளக்கம் சொல்வதும் நீங்களே கேளுங்கள்...   
"முக்கி முக்கி திண்ணவும் மூத்திரம் பெய்யவும்தான் உன் ஆத்தா பெத்துபோட்டாளா..." இந்த ஒரு வசனம் மட்டுமே போதும் படத்தின் ரசனைக்கு   
ஆக மொத்தத்தில்........
அன்னக்கொடி-கொச்சை...இச்சை...எச்சை...பச்சை..மே..மே 



  சிங்கம் 2
                    சினிமா விமர்சனம்  


surya

சிங்கம்-2 என்ன சொல்லுது....?
                                    thanks-YouTube-by suntv


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1