google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்-2

Saturday, July 20, 2013

பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்-2

http://parithimuthurasan.blogspot.com/2013/07/basho-2.html

உண்மையான ஹைக்கூ கவிதைகள்-10 
பாஷோவின் ஹைக்கூ கவிதைகள் அத்தனையும் குயிலோசை போல் இனிமையாக இருக்கின்றன அவைகள் அத்தனையும் இயற்கையைப் பாடுவதுபோல் தெரிந்தாலும் அவைகளுக்குள் மனிதர்களின் வாழ்வியல் தத்துவங்கள் குறியீடாக மறைந்திருக்கின்றன 
freeonlinephotoeditor
 
ஒரு பனிக்காலை 
எனக்கு நானே சவைத்தப்படி
வஞ்சிரமீன் கருவாடு.....இங்கே பாஷோ கருவாடு கடந்த காலத்தைக் குறிக்கிறது இப்போது மீண்டும் அந்த ஹைக்கூ வேறு அர்த்தம் தரும் 

ஒரு விசித்திரமான மலர் 
பறவைகளுக்கும் பட்டாம்பூச்சிகளுக்கும் 
இலையுதிர் வானம்......இங்கே இலையுதிர் காலம் என்பது மனித வாழ்வில் வரும் ஏழரைச் சனி என்பார்களே அந்தக் கெட்ட காலம்  

நினைவுகளின் கொந்தளிப்பு 
கால அழிவின் எஞ்சிய எலும்புக்கூட்டில் 
கத்தியால் குத்துவது போன்று......ஆமாம் முடிந்து போன நிகழ்வுகளை நினைத்து வருந்தும் செயலை இப்படிக் குறிப்பிடுகிறார் 

http://img3.douban.com/view/note/large/public/p211440885-3.jpg

 
சடோ(Sado) தீவிலிருந்து தூரமாக 
கொந்தளிக்கும் கடல்-
பால் வெளி.............அந்த காலத்திலேயே பாஷோ விண்வெளி அறிஞராகக் கற்பனை செய்து எழுதியது.சடோ என்பது ஜப்பானில் உள்ள ஒரு தீவு   
பொதுவாக ஹைக்கூ கவிதைகள் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் மனநிலைக்கு ஏற்ப கருத்து சொல்லும் திறன்கொண்டது.எனவே இங்கே விளக்கம் சொல்கிறேன் என்று உங்களை இனியும் அவஸ்த்தைப் படவைக்க மனமில்லை..உங்களுக்குத் தெரியாதாததா....?

பழைய குளம் .....
ஒரு தவளை குதிக்கும்
தண்ணீர் சத்தம்


http://www.8screensavers.com/screensavers/preview/m/a/magenta-mums-flower-1-screensaver.jpg
மழை வெள்ளத்திற்குப் பிறகு 
சாமந்திப்பூக்களின் மனம் போல 
அவர்கள் உயர்வடைகிரார்கள்

இலையுதிர்கால நிலவொளியில்
ஒரு புழு அமைதியாகக் குடைகிறது
பாதாம் கொட்டை மேல் அமர்ந்து.


குளிரில் நீர்ஜாடியின் 
விரிசல் ஒலி 
நள்ளிரவில் விழிக்கச் செய்தது.

இறந்த பிறகு என் பயணத்தில் 
அனாந்தரப் பொட்டல் வெளிகளில் 
என் கனவுகள் மட்டும் சுற்றும் 

கசக்கும் பணிப்பாகு ஆயினும் 
தொண்டை நனைக்கப் போதும் 
பெருச்சாளிக்கு  
(கவிதைகள் தமிழாக்கம்.........பரிதி.முத்துராசன்)  ..............................................(இன்னும் வரும்)  
இது வாசிக்காதவர்களுக்கு............
பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்-1 (நீங்கள் தீ மூட்டுங்கள்)
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1