google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தமிழ் சினிமாவும் கவர்ச்சிக் கன்னிகளும்

Sunday, July 21, 2013

தமிழ் சினிமாவும் கவர்ச்சிக் கன்னிகளும்

(குறிப்பு-இது என் தனிப்பட்ட சினிமா அனுபவப் பதிவு....என் வாலிப வயது முதல் இப்போதுவரை சினிமாவில் நான் கண்ட கவர்ச்சீ அனுபவம்... விருப்பமுள்ளவர்கள் மேலும் வாசிக்க தொடங்கலாம்)

அப்போதெல்லாம் சினிமாவில் கவர்ச்சிக்கு என்று சில நடிகைகளும் நடிப்புக்கு என்று சில நடிகைகள் கதாநாயகி அந்தஸ்திலும் இருப்பார்கள் இப்போதெல்லாம்காலம் மாறிவிட்டது தமிழ்த்திரையில் கவர்ச்சியும் மாறிவிட்டது..திரையில் தோன்றும் கதாநாயகிகள் மட்டுமின்றி அம்மாக்கள்,மாமியார்கள் இப்படி அத்தனை பேரும் உடையிலோ நடையிலோ அல்லது பேசும் வசனங்களிலோ கவர்ச்சி காட்டுகிறார்கள்...இன்னும் சிலப்படங்களில் குத்துப்பாட்டு என்று சில பெரிய நடிகைகள் ஆட்டம் போடுகிறார்கள்

எனக்கு மீசை முளைக்கும் வயது இருக்கும் போது வடுகப்பட்டியில் உள்ள திருமலை திரையரங்கில் வருடத்திற்கு பத்து தடவை புத்தம் புது காப்பியாக வெளிவரும் எம்.ஜி.ஆரின் குலேபகாவலி திரைப்படத்தில் ராஜகுமாரியை திரையில் கண்டு போஸ்டர்களை முறைத்துப் பார்த்த நினைவுகள் இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.அப்புறம் வீட்டுக்கு தெரியாமல் அருகிலுள்ள பெரியகுளம் ரஹீம் திரையரங்கில் சில A முத்திரை போட்ட  இந்திப் படங்கள் பார்த்த நினைவு..ஹெலன்,ஜீனத் அமன் இன்னும் சில நடிகைகள் பெயரெல்லாம் நினைவு இல்லை 


அப்போது படங்களில் ஜோதிலட்சுமியின் ஆட்டம் பெரிதாகப் பேசப்படும்  கல்லூரி படிக்கும் காலத்தில் மதுரை நாகமலையில் இருந்த கொட்டகை திரையரங்கில் அடிக்கடி சில கில்மாபடங்கள் போடுவார்கள் அதில்  கர்ணன் இயக்கத்தில் ஜம்பு தமிழ் படத்தில் ஜெயசங்கருக்கு ஏதோ ஒரு மாலா நடிகை தாடி  வழிக்கும் கவர்ச்சி காட்சி...?யையும் இன்னும் சிலவற்றையும் பார்த்து தூக்கம் தொலைந்துபோனது..நேரம் கிடைக்கும் போது மதுரை ரீகல் திரையரங்கில் சில ஆங்கிலப்படங்கள் பார்த்ததும் உண்டு...அங்கே படத்தைவிட படம் பார்க்க வரும் காமக்கிருக்கர்கள் பண்ணும் அட்டுழியங்கள் அதிகம் 

மதுரையில் என் கல்லூரி காலகட்டங்களில் நான் பார்த்த கவர்ச்சிப்படங்கள் அதிகம் 1978-ல் வந்த ஜெகன் மோகினி என்ற தெலுங்கு டப்பிங் தமிழ் படம் ஜெயமாலினி (காமப்)பேய்   படம் என் போன்ற வாலிபர்களை அன்று கலங்கடித்தது.அதைத் தொடர்ந்து நேற்று ராத்திரி யம்மா..என்று  சில்க் ஸ்மிதா முனகல் சத்தமும் அவரது ராஜ்ஜியமும் வடநாடுவரை படையெடுத்து சென்று வெற்றிக்கொண்டது..பாவம் அம்மணிக்குதான் வாழ்க்கையில் தோல்வி. அதற்குப் பிறகு நிறைய குத்துப்பாட்டு அம்மணிகள் வந்தாலும் நமீதா கொஞ்சகாலம் நீடிக்க வந்ததே வினை கதாநாயகிகளேல்லாம் குத்துபோட ஆரம்பித்து...பாவம் அவர்களை ஓரம்கட்டிவிட்டார்கள்

1983-ல்  சென்னைக்கு வந்தப்பிறகு மேற்படி படங்களுக்கு மலையாளம்தான் முன்னோடி என்றும் இங்கே அவளுடைய ராவுகள் தனிமவுசு என்பதையும் அறிந்துகொண்டேன்...பிறகு ஷகிலா அம்மணியின் அரைகுறை ஆடையில்..இவர்கள் படங்களுக்கென்றே சில திரையரங்கங்கள் உண்டு..இப்போது அவைகளைக் காணோம் (இப்போதுஎல்லாப் படங்களுமே கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அப்படியோ)

சென்னையில் சபையர்-புளு டைமன்ட்-எமரால்ட் என்று மூன்று திரையரங்கங்கள்  மவுன்ட்-ரோட்டில் உள்ள காலத்தில் அங்கே படத்துக்கு நேரம் காலம் கிடையாது..எப்போது வேண்டுமாயினும் டிக்கெட் எடுத்து போகலாம் எப்போ வேண்டுமாயினும் வெளியே வரலாம் ..அங்கே போனால் இருப்பது திரையரங்கில் பத்து ஆண்-பெண் ஜோடிகள்...(கல்லூரியில் கட்-அடித்து வந்தது போல் தெரியும்)...படத்தைவிட இவர்கள் லூட்டி இருட்டறையில் ரொம்ப (ஆ)பாசமாக இருக்கும்  

                                 thanks-YouTube-by Rajshri Tamil
முன்பெல்லாம் படங்களில் ஏதாவது கற்பழிப்பு காட்ட்சிகள் வைப்பார்கள் எம்.ஜி.ஆர்.போன்ற கதாநாயகர்கள் பாயிந்துவந்து வில்லன்களை நாலு போடுபோட்டு மீட்டு ஆடை கிழிந்த அந்தப் பெண்ணை மீட்டு அவர் போட்டிருக்கும் சட்டையை கழட்டிக்கொடுத்து அணியச் சொல்வார்கள் அவர்படத்தில் வரும் கதாநாயகிகளே ஆடையில் கவர்ச்சியாகத்தான் இருந்தார்கள் அதிலும் புரசித்தலைவர் பாடல் காட்சிகளில் "இதழே..இதழே...தேன் வேண்டும்" என்று கதாநாயகிகளை அனுஅனுவாக ரசிப்பார் அங்கே கவர்ச்சி இருந்தது ஆபாசமில்லை  இப்போதெலாம் படங்களே கவர்ச்சியில் அன்னக்காவடி எடுக்கிறது. குடும்பத்தோடு   படம் பார்ப்பதையே நான் விட்டுவிட்டேன்.

freeonlinephotoeditor

இப்போது வரும்   படங்களில் ஏன் கவர்ச்சி நடிகைகளை தனியாக வைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் முடிவு செய்துவிட்டாரோ...? அல்லது இயக்குனர் பார்வையோ...? கதாநாயகிகளையே கவர்ச்சி காட்ட வைத்துவிடுகிறார்கள்..எந்த நடிகை என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை எல்லா நடிகைகளுமே அப்படித்தான் இருக்கிறார்கள் 
சமீபத்திய சிங்கம் 2-அருமையான அதிரடித் திரைப்படத்தில்கூட ஹன்ஷிகா-அனுஷ்கா இரண்டு பேர் போடும் கவர்ச்சி ஆட்டம் போதாதென்று அஞ்சலியின்  இடையை குழுக்க விட்டார்கள்..காலம் கெட்டுப் போச்சப்பா.

(அண்ணேன்..காலமெல்லாம் நல்லாத்தான் இருக்கு...நீங்க மட்டும் வாலிப வயசில் இப்படிப்பட்ட படத்துக்கு ஆ...னு வாயத்திறந்து அலையும்போது...பாவம் இப்ப இருக்கிற சிறுசுக பார்த்திட்டுதான் போகட்டுமே... உங்களுக்கு வயாசாயிடுச்சு...படத்துக்கு போகாம..மடத்துக்கு போங்க)

அடேய்..தம்பி அறிவுச்செல்வா.... மடம்னா எந்த மடம்னு தெரியலையேடா..? அந்த ......யானந்தா மடத்துக்காடா...அங்கப் போயி ஏதாவது குண்டக்க மண்டக்க யோகம்னு குதிச்சி...வயசான காலத்தில எங்கயாவது உயிர்நாடியில பிடிச்சிக்கப் போகுது...இன்னும் கொஞ்சகாலத்துக்கு இப்படி படம்பார்த்தே காலத்த ஓட்டிட்டுப் போறேண்டா....தம்பி)

அது சரி...இப்பலாம் பதிவுக்கு முன்னுரை குடுக்கிறீங்க இப்படி.....
(குறிப்பு-இது என் தனிப்பட்ட சினிமா அனுபவப் பதிவு....விருப்பமுள்ளவர்கள் மேலும் வாசிக்க தொடங்கலாம்) 
அது ஏன்.....?

நம்மப் பதிவுகளை படித்துவிட்டு யாரும் அறுவையிசத்தால் பாதிக்கப் கூடாது என்ற நல்ல எண்ணம்தான்....முதல்லயே சொல்லிப்புட்டா விருப்பம் இருக்கிறவங்க படிப்பாங்க..அதனால்தான்...ஹி...ஹி.
 

இப்பல்லாம்............
T.V- யில  படம் காட்டுறதக்கூட
சென்னைத் தெருவில 
போஸ்டர் ஓட்ட ஆரம்பிச்சிட்டாயிங்க....
கழுத கெட்டா குட்டிச்சுவறு....இதுதானோ...???   

freeonlinephotoeditor
 
ஜூலை-21 மாலை 5 மணிக்கு..........
அட..இன்னிக்குத்தாங்க..
இப்படியே போனா.... 
இனிமே புதுப்படமும் 
தொலைக்காட்சியிலத்தான் 
ரிலீஸ் பன்னுவாயிங்களோ....?

சரி...நம்மளும் ஒரு போஸ்டர் ஓட்டிடுவோம் 
சிரிப்புப் பதிவு..
சாரி...சிறப்புப் பதிவு  ..........

freeonlinephotoeditor

மரியான்-வெற்றிப்படமா...?(கருத்துக்கணிப்பு) 
(குறிப்பு-இது உர்ர்....உர்ர்...மரியானைக் கடித்து குதறும் விமர்சனப் புலிகளின் உறுமல்கள்...ட்வீட்டர்கள்,பதிவர்கள்..பார்வைகள்    அப்படியே உங்கள் பார்வையில்...கருத்துக்கணிப்பு )





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1