நீ
எவ்வளவே
வேண்டுமாயினும்
கொள்ளையடி...
அப்படியே
அடித்த பணத்தை
சுவீஸ் வங்கியில்
அடைத்து வைக்காதே!
அப்புறம்
அடைத்து வைப்பார்
உம்மையும் திகாரில்...
திருடிய பணத்தை
வள்ளல் போல்
வாரியிரைத்தால்....
தூற்றியவரேல்லாம்
போற்றுவார் உம்மை.
அதுதான்
சூது கவ்வும்
காசு பணம் துட்டு மணி மணி...
தேடிய பொருளை
பாவத்துக்குப் பயந்து
பகிர்ந்துண்ண...
அன்று அய்யன் சொன்னது.
இல்லறம் என்பது....
இன்று
கொள்ளையடித்தவைகளை
கொடைவள்ளலாய்
வாரிவழங்க..
இந்த பொய்யன் சொல்வது...
அரசியலறம்
கவிதை தந்த குறள் 44:
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கைசாலமன் பாப்பையா உரை:
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.
thanks-YouTube-thinkmusicindia
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |