(குறிப்பு-இது ஒரு கற்பனை நகைச்சுவைப் பதிவு. சினிமா சமுதாயத்தின் ஒரு அங்கம் அதற்கு பங்கம் செய்யும் சினிமாக்களை இந்தப் பதிவில் காணலாம் மற்றபடி யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல)
வணக்கம் நண்பர்களே! இன்றைய நமது சினிமா 420 டிகிரி நிகழ்ச்சியில் தில்லு முல்லு படம் இடக்குனர் பத்ரி-நடிகர் சிவா இருவரையும் சிந்திப்போம்........... சற்று சிந்திப்போம்...
இயக்குனர் பத்ரி அவர்களே தில்லு முல்லு படம் பார்த்தவர்கள் (அதாவது உங்களைச் சாராதவர்கள்) அனைவரும் அட..இது என்னக் கொடுமையடா..? என்று இஞ்சி தின்ற குரங்காட்டம் விழித்தார்கள் ஆனாலும் உங்கள் படம் மிகப்பெரிய வெற்றி என்று சொல்லிக்கொள்கிறீர்கள் இது ஒரு தொலைகாட்சி ஊடகத்தின் ஆதரவு இன்றி வேறில்லை...இதுவும் ஒரு வகை தில்லு முல்லுதான் உண்மையா?
அவிங்க..கிடக்கிறாங்க...இப்பலாம் படம் எடுக்க கதையே கிடைக்க மாட்டேங்குது...இப்படி பழைய கள் புதிய மொந்தை மாதிரி எதையாவது உல்டா பண்ண வேண்டியதுதான்...துபாய்ல போய் படம் எடுத்து வந்திருக்கிறோம் அந்த செலவ யார் தேத்துவது....இப்படி தில்லு முல்லு பண்ணவேண்டியதுதான்
பத்ரி சார்..உங்க படத்த பதிவர்கள் சிலர் சூப்பர் என்றும் சிலர் மொக்கை என்றும் இருவேறு கருத்து நிலவியதே ...அதிலேயும் தில்லு முல்லு இருக்கா?
அது எனக்கு தெரியாதுங்க..அது பதிவர் பாலிடிக்ஸ்-ஆக இருக்கலாம் இருந்தாலும் ....குட்டிப்புலியை கூட திட்டினாங்க..ஆனாலும் அது வெற்றிப் பாச்சல் பாயலையா...? நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுக்கிறோம் இவிங்க..ஓசியில ஒரு பிளாக் வைச்சிக்கிட்டு பண்ணுற அழிஞ்சாட்டியம் தாங்கமுடியல....இந்த வெத்து வேட்டுகளால எதுவும் எங்களப் பிடுங்க முடியாது..ஆங்...சரி..நான் ஒரு கேள்வி கேக்கிறேன்..இந்தப் படம் எப்படி உங்க 420 டிகிரியில வரும்...?
ஒரு அப்பாவி பெரிய மனிதனை அவரது பணத்துக்காக ஏமாற்றி இப்படி கோல் மால் செய்து அவருடைய மகளை லவுனு லாவிக்கிட்டு போறக் கதை உங்க படம்... இத அப்புறம் எந்த வரிசையில் சேர்ப்பது...? இயக்குனரே...சும்மாவே சினிமா சமுதாயத்தை சீரழிக்குதுன்னு திண்டுக்கல் லியோனியிலிருந்து அம்புட்டுப் பேரும் அலம்புறாயிங்க...நீங்க நல்லவை செய்யவேண்டாம்..அல்லவை செய்யாம இருந்தாலேப் போதுமே....
நடிகர் சிவா அவர்களே..நீங்க நல்லா வளர்ந்து வரும் நடிகர்...இப்படி முன்னாடியே வந்த படத்தின் கதையில் இப்படி பின்னாடி நடிதால் மீண்டும் பார்க்கிறவங்க அந்த பெரிய நடிகரோட நடிப்போட ஒப்பிட்டுப் பார்ப்பாங்க..னு உங்களுக்கு தெரியாதா...?
நான் என் ஸ்டைல நடிச்சிருக்கேன்...நோ காப்பி அன்ட் பேஸ்ட் எல்லாமே பெஸ்ட்..ஆனா யாரும் சிரிக்கத்தான் மாட்டேங்கிறாயிங்க... அதனால நாங்களே சிரிச்சிக்கிட்டோம்...அப்புறம் சந்தானம் ரோல்லயும் நான்தான் நடிக்கிரதாக இருந்துச்சு..டைரக்டர்தான் வேண்டாமுனுட்டார்....
இதுவரை பொறுமையாக பதிலளித்த இயக்குனர் பத்ரி-நடிகர் சிவா உங்கள் இருவருக்கும் ரொம்ப நன்றி...பழைய ஜோக்க திரும்ப படிச்சாலே சிரிப்பு வராது...பாவம் நீங்க என்ன செய்வீங்க...? எல்லாம் பவர் ஸ்டார் பண்ண கூத்து... கண்ணா லட்டு தின்ன ஆசையா?..னு தில்லு முல்லு பண்ணிட்டிங்க...இன்னும் யாருலாம் பழைய படத்த தூசு தட்டிக்கிட்டு இருக்காங்களோ...அய்யோ சினிமா தேவுடா...நீதான் எங்க தமிழ் சினிமாவை காக்கவேண்டும்..........
சரி...இந்த ட்வீட்டர்கள் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்...
Santh
பழைய 'தில்லுமுல்லு' படத்தில ஒரு பொடியன் கேரக்டர் வரும்,அந்த பொடியன் நடித்த அளவுக்கு கூட சிவா புதிய 'தில்லுமுல்லு'ல நடிக்கல.
தமிழ்த் திரையுலகின் விநோத விபத்துகளில் ஒன்று இந்த மனோபாலா. காமெடிக்கிறேன்னு நம்மளப் போட்டு இம்சிக்கிறார் மனுஷன். #தில்லுமுல்லு
ராகங்கள் பதினாறு பாடலில் சிவாவுக்கு முகத்தில் பாவனைகள் வராமல் மிகவும் பாவமாக நடக்கிறார் #தில்லு முல்லு
தில்லுமுல்லுக்கு பிறகு மன்மத லீலையை ரீமேக் பண்றாராம் பத்ரி, இப்படி நல்ல படங்களை துண்டாடுறதுனால பேர கத்திரின்னே வச்சிருக்கலாம்
ராஸ்கோலு
@RazKoLu
தேங்கா-ரஜினி சீன்கள் பழைய தில்லு முல்லுவில் ரசிக்க சிரிக்க கூடியளவில் இருந்தன, புதிய தில்லு முல்லுவில் நம்மள பாத்து போடா டோமருன்றாங்க,
எங்கப்புடிச்சாங்கன்னு தெரில இந்த தில்லுமுல்லு ஹீரோயின பாக்க நல்லா ஆன்டி மாதிரி இருக்கா
எனக்கு தில்லுமுல்லு ட்ரைலர் சுத்தமா பிடிக்கல பாலச்சந்தர் வாயாலையே என் தில்லுமுல்லுவை விடன்னு சொல்லவச்சது இன்னும் அருவருப்பு
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |