google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நண்டு-குட்டிக் கவிதை

Monday, July 01, 2013

நண்டு-குட்டிக் கவிதை

freeonlinephotoeditor  
நண்டு-
அலைகடல் ஓரம்
அவள் 
அலைகளோடு
கால் பதிந்து விளையாட..

எங்கிருந்தோ வந்த 
சிறு நண்டு 
அவள் பாதத்தை 
கிள்ளி விட்டு....
பவ்வியமாய் ஓடியது....

அவளோ 
துள்ளிக் குதித்தாள் 

அடேய்...
நண்டுப் பயலே!
இது 
ஈவ்-டீஸிங்
என்று நான் அலறினேன் 
எங்கோ போய் 
ஒழிந்து கொண்டது  

வீழ்ந்தவளை 
தாங்கிப் பிடித்தேன் 
சுனாமி போல்....
அவளை 
சுருட்டிக் கொண்டேன்

அடேய்....
மண்டுப் பயலே!
இதுதான் 
ஈவ்-டீஸிங்
என்று சொன்னார் 
போலீஸ்காரர்  
இந்தா பிடி 
சிறைத் தண்டனை..

(கோபப்படாதீங்க....
எல்லோரும்  எழுதுகிறார்கள் 
காதல் கவிதை என்று 
நானும் எழுதிப் பார்த்தேன்) 

யோவ்...பரிதி 
இப்படியெல்லாம் 
எங்களை வதைத்தால் 
இனி உனக்கு உண்டு 
தூக்குத் தண்டனை 


                 ....................பரிதி.முத்துராசன் 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1