google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: செவ்வாய்க்கு செல்லும் ஹைக்கூ

Friday, July 12, 2013

செவ்வாய்க்கு செல்லும் ஹைக்கூ



உணமையான ஹைக்கூ கவிதைகள்-7
பாராம்பரிய ஜப்பனீஸ் ஹைக்கூ கவிதைகள் அங்கேயே இன்று பல மாற்றங்களுடன் நவீனமாக எழுதப்படுகின்றன...
அதிலும் வேற்று மொழிகளில் அதற்கு எந்தக் கட்டுப்படும் இல்லை

freeonlinephotoeditor

நண்பனே 
பான்பராக் போடாதே
உன் வாயில் புற்றுநோய்!  ............பரிதி.முத்துராசன்

நவீன  ஹைக்கூ கவிதைகள் அதன் கருப்பொருள் எதைப்பற்றியும் விவரிக்கும் தன்மை கொண்டது...ஆனால் அதைச் சாதாரண மக்கள் எளிதில் புரிந்து ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கவேண்டும்

freeonlinephotoeditor


மரம் விட்டு மரம் தாவு 
கட்சி விட்டு கட்சித் தாவுன 
கால உடைச்சிடுவேன்..ஆங்  ...........பரிதி.முத்துராசன்


நன்கு அறியப்பட்ட தினமும் நடைபெறும் சூழ்நிலையை விவரித்து வாசகருக்கு புது அனுபவத்தைக் கொடுக்கக் கூடிய ஹைக்கூ கவிதைகளே இன்று பிரபலமாக இருக்கின்றன.

freeonlinephotoeditor

தேர்தல் வருகிறது 
நாளை விடிந்து விடும் 
இந்தக் குப்பைகள் அழிந்துவிடும் ...........பரிதி.முத்துராசன் 

இன்றைக்கு ஹைக்கூ கவிதையின் சிறப்பு செவ்வாய் கிரகம் வரை செல்ல இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா....?
நவம்பர் 18, 2013 இல் செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல இருக்கும்
மேவன்(MAVEN) விண்கலத்தின் இறக்கைகளில் ஹைக்கூ கவிதைகளை எழுதி அனுப்புகின்றார்களாம்...
உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் என்று வலைதளத்தில் வேண்டுகின்றார்கள் 


beach

(The MAVEN missions ‘Going to Mars’ campaign invites the public to submit names and poems which will be included on a special DVD. The DVD will be adhered to the MAVEN spacecraft and launched to Mars on Nov. 18, 2013. Credit: NASA/GSFC.........thanks universetoday.com)

 

ரிஷ்வன் ரிஷ்வன் 

இதோ நமது தமிழ் ஹைக்கூ கவிஞர் ரிஷ்வனும் அவரது ஹைக்கூ கவிதையும் பங்கு பெற்றதற்கான நாஸாவின்அங்கீகாரச் சான்றிதழ்...


ஒளிரும் வான் நட்சத்திரம்
விரிக்கிறது சிவப்பு கம்பளம்
பூமி மனிதர்களை வரவேற்க..!
.....................................................ரிஷ்வன் 


 sparkling red in the black sky
spreading red carpet
saying 'welcome' to humans


 .....................................................by rishvan


அவர் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.........

பொதுவாக  எல்லாமொழிகளிலும் தினமும் நடைமுறை செய்திகள் உடனுக்குடன் ஹைக்கூ கவிதைகளாகப் படைக்கப்படுகின்றன
இதோ தினமும் அன்றாடச் செய்திகளைக்  கவிதையாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் blueprintreview வலைதளத்தில் எழுதிவரும் 
 ஸ்டெல்லா பியர்இதேஸ் என்ற ஹைக்கூ கவிஞர் (In the Garden of Absence-என்ற கவிதை தொகுப்பும் வெளியிட்டுள்ளார்)
அவரது சில கவிதைகளைக் காண்போம்.....

freeonlinephotoeditor
1-இலையுதிர்கால ஆற்றின்
தலையில் எண்ணுகிறேன்
நிலவின் கதிர்களை 

2-தூரத்து ரயிலின் விசில் சப்தம்
மான்கள் தடம் மாறின

3-குளிர்காலத்தில் நகரம்-
மாடியிலிருந்து பார்க்க
தனிமையைத் துடைக்கிறது. 

4-வதந்திகள் -
கற்களைத் தள்ளிச் செல்லும் 

நீரோடை அலைகள் 

5-முதல் ஐக்கூ
இனிமையான
நறுமணம்
பச்சை தேயிலை
  

இப்படித்தான் உணர்ந்தவை கேட்டவை அத்தனையும் ஹைக்கூ கவிதைகளாகப் படைக்கின்றார்கள் நிறையக் கவிஞர்கள்....

கிளாசிக் கார் வடிவமைப்பாளர் கரோல் ஷெல்பி 89 வயதில் இறந்தார் என்ற செய்தியைக் கேட்டவுடன்........
கடைசிச் சுற்றில் 
கடைசித் திருப்பம்-
தூரத்து இடிமுழக்கம் 
...........என்று எழுதுகிறார் மைக்கேல் ஹென்றி லீ (Haiku News)
இப்படி நிறையச் சொல்லிக்கொண்டு போகலாம் 


இதனால் கவிஞர் பெருமக்களுக்குச் சொல்வது என்னவெனில் நீங்கள் அன்றாடம் கேட்கும் செய்திகளை உங்கள் இதயம் என்ன சொல்லுதோ 
அதை நச்சென்று நாலு வார்த்தை எழுதி....
டிவீட்டரில் கீசுங்கள்...அல்லது முக நூலில் வரையுங்கள் 

freeonlinephotoeditor
அன்பர்களே உங்கள் கவிதை உடன் செவ்வாய் கிரகத்துக்குப் பறந்து போய்விடும் என்று நினைக்காதீர்கள்.... அல்லது சுற்றிக்கொண்டிருக்கும் இந்தப் பூமி  சுற்றுவதை மறந்து உங்கள்  கவிதையை நின்று வாசிக்கும் என்று நினைக்காதீர்கள் 
நாளை என்றாவது ஒருநாள் ....
உங்கள் கவிதையில் உண்மையிருந்தால் 
உலகம் உங்களை உற்றுப் பார்க்கும்...உண்மை. 

        
                            .......................(இன்னும் வரும்....எப்போதாவது )
                                             
   
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1