google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சினிமா இயக்குனர்களே! இங்கே பதிவர்கள் ஜாக்கிரதை!

Monday, July 29, 2013

சினிமா இயக்குனர்களே! இங்கே பதிவர்கள் ஜாக்கிரதை!

(குறிப்பு-இது சினிமா இயக்குனர்களை உஷார் படுத்தும் எச்சரிக்கைப் பதிவு. சினிமா விமர்சகர்கள் என்றப் போர்வையில் உலாவரும் ட்வீட்டர்கள்..முகநூல்வாசிகள்...பதிவர்கள்   பற்றிய ஒரு சிறப்பு...சாரி....சிரிப்பு பதிவு. எச்சரிக்கை- இங்கே  எந்த சினிமா விமர்சகர்களும் தனிப்பட்டு விமர்சிக்கப்படவில்லை) 

freeonlinephotoeditor

என் உயிரிலும் மேலான தமிழ் சினிமா இயக்குனர்களே! கொஞ்சம் உஷாராக இருங்கள்...அன்று உங்கள் திரைப்படம் சில மாத -வாரயிழகள்..சில நாளிழல்கள் மட்டுமே விமர்சித்தன..இப்போது எல்லாம் மாறிவிட்டது...

freeonlinephotoeditor

உங்கள் படத்தில் நீங்கள்  இடைவேளை விடும் போது...ஏன் படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களிலேயே விமர்சிக்கப்படுகிறது...ஒரு ட்வீட்டர் ஒரு கீச்சு கீச்சினால்..அது பல லட்சம் கீச்சர்களிடம் போய் மொக்க...மொக்க..என்று கத்துகிறது.

freeonlinephotoeditor

ஒரு படத்தின் முதல் காட்சி முடிந்த அடுத்த நிமிடமே அது விலாவாரியாக முகநூலில் வாசிக்கப்படுகிறது..சில முகமூடி முகநூல் வாசிகள் தங்கள் விருப்பு வெறுப்பை அங்கே எச்சில் உமிழ்கிறார்கள்...

இப்படித்தான் சில பதிவர்களும் ரசனையுடன் எழுதுவதாக நினைத்துக் கொண்டு எதையாவது எழுதுகிறார்கள்...அவர்களை யாரும் குறை சொல்லமுடியாது....உங்களுக்கு கோடிகள் பெரிதல்ல......எங்களுக்கு ஒரு ரூபாயும் சிறிதல்ல. 

freeonlinephotoeditor

சில நல்ல தமிழ் இயக்குனர்கள்கூட...   ஹோலிவுட் திரைப்படங்களில் உள்ள சில புதிய தொழில்நுட்பங்களை தங்கள் தமிழ் சினிமாவில் பயன்படுத்தி..பல கோடிகள் செலவு செய்து...தயாரிப்பாளர்களை திருவோடு ஏந்தவிட்டு  தெருவோடு அலையவிடுகிறார்கள்..அப்புறம் அவர்களும் தூங்குகிறார்கள் அவர்கள் திறமையிலும்   சிலந்தி வலை பின்னுகிறது...

freeonlinephotoeditor

இப்போதைய தமிழ் சினிமா புதியப் புரட்சியாக....3-D, DSLR கேமரா டிஜிட்டல்,ஆரோ 11.1 3D ஒலி (AURO-3D) இன்னும் பல தொழில்நுட்பங்ள் உபயோகப்படுத்தி  தமிழில் இப்போது படம் எடுக்கிறார்கள்.....

              
       thanks-YouTube-bySony Music India Sony Music India

சமீபத்திய மரியான் ஒரு சிறந்த உதாரணம்....ஆழ்கடலில் மரியான் தனுஷ் குத்தீட்டியுடன் சுறா வேட்டையாடும்  காட்சி...
பாலைவனத்தில் சிறுத்தைப் புலிகள் வேடிக்கை காட்டும்  காட்சி... வெள்ளை மணல்பரப்பில் காதல் பாடல் காட்சி..இப்படி நிறைய சொல்லலாம் இவைகள் உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான..மார்க்ஸ் கொனின்க்கக்ஸ் (Marc Koninckx) மூலம் படம்காட்டப்பட்டது.அதேபோல் ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஆரோ 3 D ஒலிவடிவம் ...

                             thanks-YouTube-by xcjustin

இங்கே தமிழ்நாட்டில் எத்தனை திரையரங்குகளில் Perlux® Digital திரை இருக்கிறது...? உங்களின் டிஜிட்டல் ஒளிப்பதிவை எந்தனை திரையரங்குகள் அதன் தன்மை மாறாமல் திரையிடமுடியும்..? 

                                           thanks-Youtube-by sethami

DIGITAL IMAX HD-வடிவத்தில் வரும் உங்கள் படம் இங்கே யாரால் பார்த்து ரசிக்க முடியும்...? 

First 4K 3D projection plus 3D sound combination

                                  thanks-YouTube-by barcoTV

எத்தனை திரையரங்குகளில் உங்கள்   ஆரோ 11.1 3D ஒலியை அப்பாவி சினிமா ரசிகன் அனுபவிக்க முடியும்...?

                         thanks-YouTube-by DirectorTutsDCU

உங்கள் முயற்சியை விழலுக்கு இரைத்த நீராக வீணாகப் போகிறது...டிஜிட்டல் LED திரையில் பார்க்கவேண்டிய திரைப்படத்தை ப்ரோஜெச்சன் திரையில் பார்த்தால் அதன் தரம் எப்படி இருக்கும்.....?

                             thanks-YouTube-by Ray Ameyar

தமிழ் இயக்குனர்களே நீங்கள் ஹோலிவுட் ரேன்ஜ்க்கு படம் எடுத்துள்ளேன் என்று சொல்லும் போது சென்னை மாநகரில் உள்ள ஒரு ரசிகன் கூட அனுபவிக்க முடியவில்லை...யாருக்காக படமெடுக்கின்றீர்கள்...? அமெரிக்கா..ஆப்பிரிக்கா...அண்டார்டிகா ரசிகனுக்கு படம் எடுக்கின்றீர்கள் என்றால் உங்கள் படப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு..அங்கே பறந்து போங்கள்    கதையை நம்பி படமெடுங்கள்.. 

                            thanks-YouTube-by DarkHoleFilms

ரசிகனின் நாடி பிடித்து ரசனைக்குப் படமெடுங்கள் 
கவர்சிக் குத்துப்பாட்டும் கொலைவெறி டான்ஸும் கையை வெட்டுவது...தலையை வெட்டுவது என்று வன்முறை காட்சிகளையும் காட்டி வெற்றிபெறலாம் என்று நினைக்காதீர்கள்...

உங்களுக்கு கோடிகள் பெரிதல்ல......எங்களுக்கு ஒரு ரூபாயும் சிறிதல்ல..சிந்தியுங்கள்.......சீரழியாதீர்கள்......இந்தச் சமுதாயத்தையும் சீரழிக்காதீர்கள்.   

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1