google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இஸ்ஸாவின் ஹைக்கூ கவிதைகள்

Sunday, July 28, 2013

இஸ்ஸாவின் ஹைக்கூ கவிதைகள்

(இங்கே இஸ்ஸாவின் ஹைக்கூ கவிதைகள் எனக்குப் பிடித்தவைகள் ஐம்பது கவிதைகள் எனது கவிதை நடையில் மொழியாக்கம்.....)
http://www.gwarlingo.com/wp-content/uploads/2012/06/issa_the_haiku_poet-by-Hashimoto-Heihachi.jpg

கோபயாஷி இஸ்ஸா-இவர் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த கவிஞர் இளமையில் தாயாரின் இறப்பும் சித்தியின் கொடுமையும் இவரைக் கவிதை எழுதத் தூண்டியது.இவரது ஹைக்கூ கவிதைகளில் சோகம் பாலாடை போர்த்தியது போல் இருக்கும்.

இவர் எழுதிய 20,000 க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகள் இயற்கை,வாழ்வின் அன்றாட விதிமுறைகள்,அனுதாபங்கள்...பற்றி விவரிக்கும்..........அதில் சில  
http://www.indieday.cn/blog/wp-content/uploads/2009/05/hokusai2.jpg

ஒ...நத்தையே 
புஜி மலை மீது ஏறு...
ஆனால், மெதுவாக...மெதுவாக  

நீங்கள் பிறந்த போதும் ஒரு குளியல்,
நீங்கள் இறந்த போதும் ஒரு குளியல்,
என்ன முட்டாள்தனம்.

 
ஒரு குயில் பாடுகிறது 
எனக்கும் அந்த மலைக்கும் 
எனக்கும் அந்த மலைக்கும் 

ஒரு பெரிய தவளையும் நானும் 
ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு 
யாரும் நாங்கள் நகரவில்லை 

எப்போதும் நான் புத்தரிடம் பிராத்திப்பது 
நான் கொசுக்களை 
கொல்லாமல் இருக்க வேண்டுமென்று  

என்ன வயது உனக்கு? என்று  
புத்தாடையிலிருந்த அந்தப் பையனிடம் கேட்டதும் 
ஐந்து விரல்களையும் நீட்டினான் 

http://24.media.tumblr.com/tumblr_m090weq1rT1qc6wuio1_500.jpg  

இரவுப்பூக்களின் மலர்ச்சி 
மக்கள் முகத்தில் 
இசையின் மிளிர்ச்சி 

நீர்பறவைகள் போன்று குழந்தைகளின் போலித்தனம் 
இன்னும் அற்புதமாக உள்ளது 
நீர்பறவைகளை விட...

அந்த ஈயைக் கொல்ல வேண்டாம், பார்!
அது பிரார்த்தனை செய்கிறது உங்களிடம்
அதன் கைகளையும் கால்களையும் தேய்த்து


http://www.thecie.org/issa/images/issa400.jpg  
என் கிராமம்-
அந்த மக்களைப் பற்றி எதுவும் தெரியாது 
ஆனால் எல்லோரும் 
அலங்கோலமான கொல்லைப்பொம்மைகள்  

கவலைப்படாதீர்கள் சிலந்திகளே!
நான் என் வீட்டை வைத்துள்ளேன் 
சாதாரணமாகத்தான் 

தண்ணீரில் ஆட்டம் போடும் வாத்துக்கள்-
அவைகள் நம்பிக்கையில் உள்ளன 
இன்றிரவு அதிர்ஷ்டம் அடிக்குமென்று...?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJxLSFLYbQ81ZAcp78qFMV1L2gBtKxer7Bc6SsGV0STJ7_C97AEYQfn-iubdq8HIzJyHoAtnvCk38-8aYYv6DWfIUxZXMLCz1w-qtGJt5ogALALFfAdB8rKaP9n3E7uiWIl4tXeBIHWPMO/s1600/umbrells.jpg
 
அந்தச் சிறிய தீவுகளிலும் 
எல்லோரும் உழுது பயிர்செய்கிறார்கள் 
வானம்பாடிகள் பாடுகின்றன 

பூச்சிகளுடன் கூட....
சிலரால் பாடமுடியும் 
சிலரால் முடியாது.

அந்த வசந்த நிலவின் முகாம்-
பன்னிரண்டு ஆண்டுகள் பழையது 
என்னால் சொல்ல முடியும் 

தூங்கி எழுந்த அந்தப் பூனை    
கொட்டாவி விட்டுப் புறப்பட்டது 
காதல் செய்ய....

ஏ....குருவி!
நீ போகும் வழியில் 
வருகிறது குதிரை.

எவ்வளவுக்கு எவ்வளவு 
உனக்குள் நீ அனுபவிக்கிறாய் 
அந்துப்பூச்சியே....?

நான் வெளியே போகிறேன் 
ஈக்களே! மிக நிதானமாக 
காதல் செய்யுங்கள்.
http://talesofjapan.kasugadesign.pro/images/kasuga_haiku_anim.gif
வசந்த மழையில் 
ஒர் அழகான பெண் 
கொட்டாவி விடுகிறாள் 

புதர் நிழலில் 
ஒரு பெண் அவளுக்குள் 
பாடுகிறாள் நடவுப்பாடல் 

அந்தப் பிந்தைய நாளில் 
காலச் சிதைவு
எங்கெங்கும் செர்ரிப் பூக்கள் 

இந்த உலகத்தில் 
நாம் நடக்கிறோம் நரகத்தின் கூரையில் 
மலர்களை வெறித்தப் படி.........

அரை நாள் குட்டித்தூக்கம் 
யாரும் 
என்னைத் தண்டிக்கவில்லை 

நண்பகல் குட்டித்தூக்கத்தில் 
நாற்று நடுபவர்கள் பாட்டு கேட்டு 
எனக்குள் வெட்கப்படுகிறேன் 

 
புத்தாண்டு தினம்-
காண்பதெல்லாம் களிப்பில் 
நான் சாதரணமாக் உணர்கிறேன் 
http://nipponario.abranera.com/wp-content/uploads/2012/03/3ea1c68668d04182334cfdffb51d_grande.jpg
புத்தாண்டு அதிகாலை-
குளத்து வாத்துக்கள் கத்தும் 
க்குவாக்...க்குவாக்  

எந்தச் சந்தேகமும் இல்லை 
அந்த மலைக்குயில் 
அடம்பிடித்து அழும் குழந்தை 

தொட்டிக்குள் இருப்பதை 
அறியாத அந்த மீன் 
குளிறுட்டுகிறது தொட்டி வாயிலை

ஆர்வமின்றி 
பூக்கின்றது 
என் பிளம் மரம் 

பனி மழையின் பீச்சல்  
என் கதவுக்கு வெளியே 
நேர்துளை செய்கிறது 

பார்க்கவும் 
ஒரு தொலைநோக்கி மூலம்......
விலைமதிப்புள்ள மூடுபனி 

கோடை இரவு-
நட்சத்திரங்கள் கூட 
கிசுகிசுக்கின்றன ஒன்றுக்கொன்று....

அந்த அழகான பெண்.......
கடித்து நொறுக்கியபடி 
பொதியப்பட்ட அரிசி ரொட்டியை 

அந்தக் குருவி-
இங்கேயும் அங்கேயும் தேடுகிறது 
நீ எதையும் இழந்தாயா...?

அந்தக் காகம் 
அங்கே நடக்கிறது 
வயலை உழுவது போல...

முள்ளங்கி பிடுங்கும் மனிதன் 
என் வழியைச் சுட்டிக்காட்டினார்
ஒரு முள்ளங்கியைக் கொண்டு...


இன்றிரவும் நிலவின்....
நான் தவறவிட்டேன் 
அவளது புலம்பல்

அந்தக் காட்டுக்கோழி அழுகிறது 
இப்போதுதான் பார்த்தது போல் 
அந்த மலையை 

பனிக்கட்டி உருகுகிறது...  
அந்தக் கிராமம் பெருகுகிறது 
குழந்தைகளால் 

அந்தத் தேரை.........
இப்படித்தான் தெரிகிறது 
நுண்ணுயிர்த்திரளை விழுங்கியது போல 

இந்த அந்துப்பூச்சி பார்த்தது பிரகாசம் 
அந்தப் பெண்ணின் அறையில்.........
எரிந்தது வறுவலாக 

என் வீட்டுக் கூரையில் 
ஓர் அங்குலப் புழு
விட்டங்களை அளந்தபடி....

புத்தர் படத்தின் கீழ் 
வசந்தகாலப் பூக்கள் 
அலுப்பு 

கல்லறைகளுக்குச் சென்று 
அந்தக் கிழட்டு நாய்-
வழிகாட்டுகிறது 



http://www.sidewaysstation.com/060508_2325_ThePoemariu1_6.jpg  
அதிசயமான ஓன்று!
செர்ரிப் பூக்கள் மரத்தடியில் 
வாழ்வது.......
 
(அவரது மகளின் கல்லறையில் 
அவள் இறந்த முப்பது நாட்களுக்குப் பிறகு...)
காற்றில் விழுந்தன.....
அவளுக்குப் பிடித்த 
செவ்வந்திப் பூக்கள் 

என் தந்தையுடன் 
நான் பார்க்கவேண்டும் விடியல்
பசும் வயல்வெளி மீது....

http://a-z-animals.com/media/animals/images/470x370/sea_slug6.jpg அந்தக் கடல் நத்தைகளுக்கு 
எதுவும் தெரியவில்லை 
ஜப்பானியர்களைப் பற்றி..

எழுத்துச் சாணி போடுவது 
பணக்காரர்களுக்கு 
கலை அல்ல 

இப்படி இஸ்ஸாவின் ஹைக்கூ கவிதைகள் களிப்புடன் குதித்து  எல்லோரையும் களிப்படையச் செய்கின்றன.

அடுத்து யோசா புசோன் என்ற ஹைக்கூ கவிஞரும் ஓவியரும் எழுதிய சில கவிதைகளைக் காண்போம் 
                                                ...........................இன்னும் வரும்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1