google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஆதலால் காதல் செய்வீர்-சினிமா விமர்சனம்

Thursday, August 15, 2013

ஆதலால் காதல் செய்வீர்-சினிமா விமர்சனம்


(தீர்ப்பு-ஆதலால் காதல் செய்வீர்...உண்மையில் இது காதல் படமல்ல காதலர்களுக்கு பாடம். காதலர்கள் பெற்றோர்கள் அனைவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டியத் திரைப்படம்)


aadhalal

ஆதலால் காதல் செய்வீர் படத்தின் கதை...ஒரு வரியில் சொல்வதென்றால்...விளையாட்டு காதல் விபரீதக் கருவாகி சாதியால்..அரசியலால்  சித்ரவைப்பட்டு எப்படி அனானதைகளை பிறப்பிக்கிறது...என்பதை இன்றைய தமிழ்நாட்டு சாதிக்காதலை யதார்த்தமாக சொல்கிறது..

http://www.cineattack.com/img_articles/838b.jpg
கார்த்திக் (சந்தோஷ்) தன் நண்பர்கள்-நண்பிகள் நட்பு  வட்டத்தில் உள்ள ஸ்வேதா (மனிஷா)-வைக் காதலிக்க..முதலில் மறுக்கும் ஸ்வேதாவும் பிறகு கார்த்திக்கைக் காதலிக்க...இவர்கள் காதல் இருவர் வீட்டுக்கும் தெரியாமல் நாளொருவண்ணமாக வளர்ந்து..மாமல்லபுரத்தில்  அவுட்டிங்....ஸ்வேதா கர்ப்பமாகிறாள்....

http://www.kollywoodtoday.net/wp-content/uploads/2012/11/aadhalal-kadhal-seiveer-movie-stills-181.jpg

வீட்டுக்கு தெரியாமல் இருவரும் நண்பர்கள் உதவியுடன் ஸ்வேதாவின் கருவைக் கலைக்க முயற்சி செய்ய...அது முடியாமல்...இருவர் பெற்றோர்களுக்கும்  தெரியவரும் போது...இவர்கள் ஓன்று சேர முதலில் கார்த்திக்கின் சாதியும் சாதியைச் சேர்ந்தவர்களும் தடையாக கார்த்திக்கின் பெற்றோர் வழியில் அரசியல் செல்வாக்கும் போலீஸ் ஆதரவும் ஸ்வேதாவுக்கும் அவளது பெற்றோர்களுக்கும் மிரட்டலாகிறது.....

இவர்கள் காதல்  வெற்றிபெற்றதா...? இருவரும் வாழ்வில் வென்றார்களா....? ஸ்வேதாவின் வயிற்றில் வளர்ந்த குழந்தை என்ன ஆனது....?இவைகளைத் தெரிந்துகொள்ள திரையரங்கில் பாருங்கள்



aadhalal

முதலில் கல்லூரிக் காதல் துணுக்குத் தோரணங்களால் நகைச்சுவையாக படம் ஆரம்பித்து படிப்படியாக.... இயக்குனர் சுசீந்திரன் இந்தப் படத்தில் இன்றைய தமிழகத்தின் சாதீயக் காதலை கையில் எடுத்ததும் பகீர் என்றது ..?

இவர் எந்தப் பக்கம் சார்பாக எடுக்கப் போகிறாரோ..சாதியக் காதலுக்கா...? இப்படி ஓடிப் போகிற காதலர்கள் ஆதரவாகவா...? அல்லது கலங்கி நிற்கும் பெண்ணைப் பெற்ற பெற்றோர்கள் பக்கம் ஆதரவாகவா...? என்று 




படம் பார்க்கும் நமக்கு மிகப் பெரிய கேள்விக் குறி....? ஆனால் நடப்பதோ வேறு..அங்கேதான் இயக்குனர் இமயமலை சிகரம் உயரம் நிற்கிறார்.
ஆதலால் காதல் செய்வீர் என்று படத்தின் தலைப்பைப் பார்த்து இயக்குனரை நீங்கள் எடைபோடமுடியாது...சமுக அவலங்களை நையாண்டியாக குண்டூசியால் குத்திக் காட்டி இன்று அவலத்தில் அலையும் காதலர்களுக்கு பாடம் புகட்டுகிறார்...


இயக்குனரின் மிகச் சிறப்பு கதாப்பாத்திரங்களின் படைப்பு.அளவாக கதைக்கு தேவையான பாத்திரங்கள்...கார்த்திக் அப்பா பிரசவத்திற்கு வந்துள்ள   தன் மகள் மீது காட்டும் நியாயம் அதே நேரம் தன் மகனால் கெடுக்கப்பட்ட ஸ்வேதாவின் கருவைக் கலைக்க சொல்லும் குடும்பப் பெருமை காட்டும் நியாயம் என்று இரு வேறு முரண் பட்ட உருவம் 



கார்த்திக்காக நடித்துள்ள சந்தோஷ்க்கு இன்றைய நாம் காணும் யதார்த்தமான வாலிபக் காதலன் வேடம் ஸ்வேதாவாக நடித்துள்ள மனிஷா அட்டகாசமாக நடித்துள்ளார்...காதலனுடன் பெற்றோரை விட்டு பெங்களுருக்கு பாதிதூரம் ஓடிப்போவதும் பின்பு பாசத்தில் மீண்டும் பெற்றோரிடம் வருவதும்..அவரது நளினமான காதல் மிளிச்சியும் ஆவேசமானப் பார்வையும் முன்பு நடிகை சரிதாவிடம் கண்டது. 

http://chennaionline.com/images/articles/April2013/65e8a6c9-074c-4c63-ad4e-154f0101a6bdOtherImage.jpg

ஸ்வேதாவின் அப்பாவாக ஜெயபிரகாஷ் தனது சிறப்பான நடிப்பை தன் மகள் களங்கப் பட்டு நிற்கும் போது கண்கலங்கி நம்மையும் கலங்கச் செய்கிறார்...பூர்ணிமா பாக்கியராஜ் கார்த்திக்கின் அம்மாவாக...நடிப்பதற்கு ஒன்றுமில்லை அதே நேரம் ஸ்வேதாவின் அம்மாவாக நடித்துள்ள துளசி  அன்பு..ஆவேசம் இரண்டின் கலவையாக நடிப்பில்  எங்கோ போய்விட்டார்..

இசை யுவன் சங்கர்ராஜா தனது த்ந்தையைப் போல் காலத்துக்கேற்ப நளினமாகவும் இனிமையாகவும்  பின்னணியிலும் பாடல்களிலும் தாலாட்டுகிறார்....இன்னொரு இளையராஜாவை இசைவடிவம் 


freeonlinephotoeditor


 வார்த்தைகளால் வாழும் வாலிபக் கவிஞனுக்கு என் காணிக்கை



தப்புத்தாண்டா பாடல் வரிகள் மறைந்த மகாகவி வாலி அய்யா அவர்களின் வார்த்தைகளில் துள்ளல் போடுகிறது...அர்த்தம் நிறைந்தது..ஒரு பாடலில்  படத்தின் முழுக் கதையும் சொல்லிவிட்டு உடலால் மறைந்துபோனார்...வார்த்தைகளால் வலம் வந்துகொண்டிருக்கிறார் 

                                thanks-YouTube-by saregamasouthsaregamasouth


 
A.R.சூர்யாவின்  ஒளிப்பதிவு-  படத்துக்கு காட்சிகளால் மெருகூட்டுகிறது அவரது கேமரா வன்னத்தூரிகையாக பாடல்கள் மட்டுமின்றி ஒவ்வொரு காட்சிகளிலும் பிரேம் பிரேமாக காதல் ஓவியமாக வரையப் பட்டுள்ளது....
aadhalal

படத்தின் முக்கிய கதாநாயகன் வேறு யாருமல்ல ஆதலால் காதல் செய்வீர் என்பதுதான் படத்தின் தலைப்பு காதல் அகராதியில்  பல்வேறு அர்த்தங்கள் தரும்............இயக்குனர் சுசீந்திரனின் குட்டிப்படம்.. 
அதே நேரத்தில் இந்தப் படத்திற்கு உங்கள் இதயம் கொடுக்கும்.... நிரந்திர இடம்.

தீர்ப்பு-ஆதலால் காதல் செய்வீர்...உண்மையில் இது காதல் படமல்ல காதலர்களுக்கு பாடம். காதலர்கள் பெற்றோர்கள் அனைவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டியத் திரைப்படம்

*******************************************************************************
இன்னும் தொடர.....
காதல் பற்றி சென்னை எக்ஸ்பிரஸ் தீபிகாவின் பேட்டி ..........


(குறிப்பு-இது சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் சொல்லப்பட்ட சாதி,மதம்,இனம் கடந்த காதல் பற்றி தீபிகாவின் பேட்டி...) 
மேலும் .....

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1