google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஆதலால் தலைவா செய்வீர்

Saturday, August 17, 2013

ஆதலால் தலைவா செய்வீர்


(குறிப்பு-இப்பதிவு கொஞ்சமல்ல...நிறையக் குழப்பமானது.இப்பதிவுக்கு தலைவா-என்று பெயர் வைத்ததால் வந்த குழப்பம். தலைவலி உள்ளவர்கள் படிக்கவேண்டாம் )

  

தமிழ்நாட்டில் சினிமாவிலிருந்து எம்.ஜி.ஆர் நாட்டின் முதலமைச்சர் ஆனாலும் ஆனார்.........அதைத் தொடர்ந்து சினிமாவில் நடிப்பவன் எல்லாம் முதலமைச்சர் கனவில் மிதக்கிறான் இதனால் தமிழ் சினிமாவும் தரம் கெட்டுப் போனது.

kamaraj

தலைவர்கள் உருவாகிறார்கள்........உருவாக்கப் படுவதில்லை  
அன்று காமராஜர் உண்மையான மக்கள் தலைவராக உருவானவர் அவர்  மக்களுக்காகத்  தன் வாழ்க்கையை இழந்தவர் அதனால்தான் அவர் ராஜாஜி என்ற படித்த மேதை  மக்களால் தேர்ந்தெடுக்கப் படாமலேயே முதலமைச்சராக இருந்த போது காமராஜர் தலைவராக........ பெருந்தலைவராக  உருவானார்.

http://www.muthamil.com/2010/images/anna_periyar.JPG

தந்தை பெரியார் தனது சுயமரியாதை நடவடிக்கைகளாலும் பகுத்தறிவு சிந்தனைகளாலும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்காகப் பாடுபட்டதாலும் அனைவர் இதயங்களிலும் தலைவருக்கும் மேல் சமுதாயத் தந்தையாகப் போற்றப்பட்டார்.

freeonlinephotoeditor

அதே போன்றுதான் அறிஞர் அண்ணாவும் தமிழ் மக்களுக்காக...தமிழ் மொழிக்காகத் தனது சிந்தனை செயல்களால் பல போராட்டங்கள் சந்தித்து தந்தை பெரியார் வழியில் தலைவராக உருவானார்.

அவரைத் தொடர்ந்து அன்றைய காலகட்டத்தில்அவருக்கு உறுதுணையாக இருந்ததால் கலைஞரும் தலைவரானார்....இன்றுவரை அவர் தலைவர் பதவியைக் கட்டிக் காப்பதிலே உள்ளே வெளியே போராட்டம் அவருக்கு ஏனென்றால் அவர் உருவான தலைவர் அல்ல பலரால் உருவாக்கப் பட்டவர் 

எம்.ஜி.ஆர் தலைவர் ஆனது...அவரது சினிமா கவர்ச்சி  மட்டுமல்ல...அவரது வள்ளல்தன்மை இன்னும் நிறைய....
அன்று அவர் தலைவராக அவரது சினிமா மன்றங்கள் உதவின 

freeonlinephotoeditor

இன்றைய முதல்வர் அம்மாவும் உருவான தலைவர் அல்ல...எம்.ஜி.ஆரால் உருவாக்கப் பட்டவர்....
அதுமட்டுமல்ல எதிரிகளும் சில நேரம் தலைவர்களை உருவாக்குவார்கள் அம்மா முழுக்க முழுக்க அவர்களது எதிரிகளால் உருவாக்கப் பட்டவர்கள் 

அன்று பீரங்கி வண்டியிலிருந்து அவர்கள் கீழே தள்ளி விடப்பட்ட நிகழ்ச்சியிலிருந்து இன்று வரை அவர்கள் சந்தித்தவைகள் நிறைய...
தலைவியான பிறகு .....மீண்டும் கீழே விழுந்திடக் கூடாதென்று கவனமாக இருக்கிறார்கள்
அரசியலில் எதிரிகள் எதிரில் இல்லை...அருகிலேயே இருப்பார்கள் 

இன்று முதல்வர் ஆவதற்குச் சினிமாவையும் அதன் மாயையும் நடிகர்கள் பயன் படுத்துகிறார்கள் சிலர் பட்டது போதும் விட்டது சனியன் என்று ரசிகர்கள் மன்றங்களைக் கலைத்துவிட்டும் சிலர் இமையமலை பக்கம் பண்டாரமாக அலைகிறார்கள்

சிலரோ தலைவா என்று சினிமாவில் பாட்டுபாடி..கூத்தடித்து முதல்வர் நாற்காலியை பிடிக்க நினைக்கிறார்கள் .....ஆதலால் தலைவா செய்கிறார்கள் அதனால் அவர்களுக்கு ஒன்றுமில்லை படம் எடுத்தவர் படுத்திருக்கிறார் மருத்துவ மனையில்....

(அய்யோ...இந்தக் கதையெல்லாம் இங்கே வேண்டாம் ஆதலால் தலைவர் செய்வீர் என்று தலைப்பு ஏன் வைத்தாய்...? அதைச் சொல்லு.....)

அண்ணேன்...அதைத்தான்  இவ்வளவு நேரம் சொல்லிக்கிட்டு இருக்கிறேன் என் உயிரிலும் மேலான தமிழ் சினிமா நடிகர்களே...நீங்கள் கில்லியாக நடிக்கும் போது நாங்கள் துள்ளித் துள்ளி கைதட்டினோம் இப்படி நீங்கள் சில்லியாக நடிக்கும் போது....... ஜல்லியாக உடைந்துபோனது நாங்கள்தான்...நீங்கள் அல்ல

freeonlinephotoeditor

ஆதலால் சினிமா செய்வீர்......சினிமாவில் அரசியல் செய்யாதீர்  
இப்படி அவஸ்தைகள் எங்களுக்கு வேண்டுமென்றால்....

http://picturesartblog.files.wordpress.com/2013/03/862791_134369470071678_137243230_n.jpg?w=487

ஆதலால் தலைவா செய்வீர் 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1