google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தலைவா-வின் இந்த நிலைக்கு யார் காரணம்? (கருத்துக்கணிப்பு)

Saturday, August 10, 2013

தலைவா-வின் இந்த நிலைக்கு யார் காரணம்? (கருத்துக்கணிப்பு)


(குறிப்பு-தலைவா திரைப் படம் தமிழ்நாட்டில் வெளிவராமல் தர்மசங்கடம்.இந்த நிலைக்கு காரணம் யார் என்று ஒரு கருத்துக்கணிப்பு)


thalaivaa

இன்று தலைவா திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகவில்லை என்று கோவையில் ஒரு  தீவிர ரசிகர் தற்கொலை செய்து கொண்டார்..செய்தியைக் கேட்கவே நெஞ்சு பதறுகிறது.
இந்த  நிகழ்வு அறியாமையின் விளைவா..? ஒரு நடிகர் மேல் உள்ள பற்றின் வெளிப்பாடா...?  என்ன சொல்வது...? இப்படி தமிழ் சமுதாயத்தில் சினிமாவின் தாக்கம் அதீதமாக உள்ளது.

(இன்னும் நீங்கள் அதிகம்  வாசிக்க விருப்பபட்டால்...
மகாயுத்தம்-சினிமா V s அரசியல் 
என்ற பதிவை படிக்கவும் இல்லையேல் கருத்துகணிப்பில் வாக்களிக்க.....தொடரவும்)




அன்று பராசக்தி திரைப்படத்தைத் தடை செய்து அந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய அன்றைய அரசியல்வாதிகள் போன்று இல்லை 
இன்றைய சினிமா அரசியல்வாதிகள்...இவர்கள் வேறு உத்திகளைக் கையாளுகிறார்கள் பாபா படப் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு ஓடுவது...மதவாதிகளைத் தூண்டி விஸ்வரூபம் காட்டுவது...துப்பாக்கியால் சுட்டால்....பீரங்கியால் தாக்குவது...
இப்படி பார்க்கும் போது  இன்று தலைவாவுக்கு வந்த நிலை தொண்டர்கள் ரசிகர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு மோசமானது அல்ல


சிங்கம்-2 படத்தை (TRIBUTE TO INDIAN POLICE) என்று இந்திய போலீஸ்க்கு அற்பனித்தது போல் தலைவா-வை (TRIBUTE TO INDIAN POLITICS) என்றா போடமுடியும்...? என்று கேட்கலாம் அதுவும் நியாயமே!


vijay

ஆனால் தலைவாவின் இந்த நிலைக்கு அரசு எவிதத்திலும் பொறுப்பல்ல என்று அரசு உயர் அதிகாரிகள் கைவிரித்துவிட்டனர் நாட்டில் எத்தனையோ அவலங்களை சரிசெய்யவே நேரமில்லாத போது 
ஒரு சினிமாவுக்காக எந்த முதல்வரும் சிரத்தை எடுக்க நாடு சினிமா அல்ல.இந்த நிலைக்கு தாங்கள் காரணமில்லை என்று தமிழகக் காவல்துறை உயர் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

http://thaalamcinema.com/thaalam_admin/News_images/1375473593FIR%20on%20Thalaiva.jpg

அதே நேரத்தில் சமுதாயத்தைத் திசைதிருப்பும் வகையில் சட்டத்தைக் கையில் எடுக்கும் கதாநாயகன் கதை கொண்ட படத்திற்கு வரிவிலக்கு கிடையாது என்று வணிக வரித்துறை விளக்கம் அளித்துள்ளது 


vijay

வரிவிலக்கு இல்லை என்றால் வருமான இழப்பு வரும் என்று படத்தயாரிப்பு...வினியோகஸ்தர்கள்... திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் தயங்குகிறார்கள்...படம் வெளிவரும் அன்று பல லட்சங்கள் செலவு செய்யும் இவர்கள்....பல கோடிகள் செலவு செய்து படம்காட்டும் இவர்கள் சொல்லும் இந்தக் கதை நியாயமானதல்ல... 

இப்படி நிறைய தலைவலியை தலைவா திரைப்படம் அவரை நேசிப்பவர்கள் நேசிக்காதவர்கள் என்று  அனைவருக்கும்  குழப்பம்.



பதிவுவாசி நியாயன்மார்களே! 
இந்த ஒருநாள் கருத்துக்கணிப்பில்  
கட்சி பாகுபாடின்றி...நடிகர்கள் பாகுபாடின்றி 
இங்கே வாக்களித்துஉண்மையை உலகுக்குத் தெரியப் படுத்துங்கள்...

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/p480x480/156717_480948665282954_1319738609_n.jpg
தலைவா-திரைப் படத்திற்குத் தமிழ்நாட்டில் மட்டும் இந்தத்  தர்மசங்கடமான நிலை...... 
இது நியாயமா?


தலைவா-வின் இந்த நிலைக்குக் 
காரணம் யார்...?




வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி.....

(எச்சரிக்கை-நான்  எந்த அரிசியல் கட்சிக்கும் எந்த நடிகருக்கும் எந்த மதத்துக்கும் ஆதரவு -ஆதாயம்- ஆர்வம் கொண்டவன் அல்ல என்பதை மீண்டும் தெரியப்படுத்துகிறேன்) 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1