google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சென்னை எக்ஸ்பிரஸ்-சினிமா விமர்சனம்

Friday, August 09, 2013

சென்னை எக்ஸ்பிரஸ்-சினிமா விமர்சனம்



(தீர்ப்பு-சினிமாவை சினிமாவாகப் பார்த்தால்...இதைப் போன்ற ஒரு பொழுதுபோக்கு படமில்லை...தெற்கு-வடக்கு என்று வில்லங்கமாகப் பார்த்தால் இதைப் போன்று ஒரு வில்லங்கமான படமுமில்லை...)

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-frc3/p480x480/954726_543897859002862_200284071_n.jpg

இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருகானின் அதிரடி காமெடி காதல் திரைப்படமான சென்னை எக்ஸ்பிரெஸ்......ஒரு சாதாரணமனிதன் காதலால் சக்திமான் போன்று பவர்புல்  மனிதனாக மாறும்  கதைஒரு சாதாரனமான பயணக் கதையைக்   காமெடி- அதிரடி-காதல் காட்சிகளால் அழகுபட இயக்குனர் ரோஹித் ஷெட்டி நகர்த்திச் செல்லும் விதம் அருமை.

http://25.media.tumblr.com/c29d9a8c9a8f646df983e251a6ef4f83/tumblr_mgos1dwhdo1rzxdz0o1_500.jpg
 
மும்பை வயோதிக செல்வந்தர்  Y.Y.மித்தாய்வாலாவின் பேரன் ராகுல் (ஷாருகான்)  தனது தாத்தாவின் கடைசி ஆசையாக அவரது அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைக்க....வெளியுலக  அனுபவம்  இல்லாத ராகுல் ராமேஸ்வரம் போக பயந்து தனது பாட்டியை ஏமாற்றுவதற்காக... சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க....அடுத்த ரயில் நிலையத்தில்   ரயிலில் தடியர்களால் விரட்டப்படும் மீனா லோசினியை சந்திக்கிறான்

http://www.punediary.com/NewsPhotos/F724201321935.jpg
 
மீனா லோசினி (தீபிகா படுகோன்) இந்தி மொழி தெரிந்த தமிழ்நாடு கொம்பன் கிராமத்துத் தாதா பெரியதல என்ற துர்கேஷ்வர் அழகு சுந்தரம் (சத்யராஜ்) மகள்...தனது தந்தை பக்கத்து ஊர் இன்னொரு தாதா தங்கபள்ளி (நிகிடின் தீர்)-க்குத் திருமணம் செய்ய  நிச்சயம் செய்ய...அது பிடிக்காமல் மீனா  புனேவில் உள்ள தனது உறவினர் பெண் வீட்டுக்கு தப்பி ஓடிவர...பெரியதல ஆட்களால் மீண்டும் தமிழ்நாட்டுக்கு அதே சென்னை எக்ஸ்பிரசில் அழைத்து வரப்படும்  பெண்.



 
தனது மகள் மீனா வடநாட்டு ராகுலை விரும்புவதாகச் சொல்ல..
பெரிய தல இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்ய...
தங்கபள்ளி  தன்னிடம் ராகுல் சண்டையிட்டு வெற்றி பெற்றால்தான் என்று வழக்கமாக நமது தமிழ் படங்களில் வரும் வில்லன் போல் சவால் விடுகிறான்.தங்கபள்ளியின் ஆஜானுபாகுவான உடலைக் கண்டு பயந்து...  கழுத்தில் மாலை போட்டு வெட்டப்படும்  கோயில் கிடா மாதிரி மொழி தெரியாத  ஊரில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப் படும் ராகுல் தப்பி ஓடிவிடுகிறான்

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/p480x480/1010759_494017134014659_1429076313_n.jpg
 
தங்கபள்ளிக்கும் மீனாவுக்கும்  மீண்டும் திருமணம் நடக்க இருக்கும் வேளையில்... மீண்டும் விதிவசத்தால் ராகுல் கொம்பன் கிராமத்துக்கு வர.... பூனை புலியாக  மாறியது போல..நம்ம இளையதளபதி கில்லி ஸ்டைலில் மணப்பெண் மீனா கழுத்தில் அரிவாள் வைத்து பெரியதலையை   மிரட்டி.. காரில் தப்பி வந்து இன்னொரு கிராமத்தில் அடைக்கலமாகிறார்கள் அங்கே கட்டிங் அளவு இருந்த ராகுல்-மீனா காதல்...குவாட்டர்...  ஆப்...புல்..அளவுக்கு வளர்ந்து...

மீண்டும் ராகுல் தில்லுடன் குகையிலையே புலியை சந்திக்க மீனாவுடன் கொம்பன் கிராமத்துக்கு வந்து பெரியதலையைச் சந்திக்க வர ..அங்கே தங்கபள்ளிக்கும் ராகுலுக்கும் நடக்கும் சண்டையில் ராகுல் வெற்றிபெற...பெரியதல இருவருக்கும் திருமணம் செய்து வைக்கச் சம்மதிக்கிறார்....அப்பாடா...சுபம்

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/q71/s320x320/65309_504986729570723_1133490932_n.jpg
 
இந்தப் படத்தில் என்ன விசேஷம் என்றால்.... படம் பத்து நிமிடம் இந்தியில் மும்பையில் தொடங்கி ..இருபது நிமிடம் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்தி-தமிழ் என்று பயணித்து வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு வந்து சேர்ந்து....மீதி 1.15 மணி நேரம் ஷாருகான் தவிர தமிழில்தான் ஆங்கில சப்-டைட்டிலுடன் சொல்லப்படுகிறது இயக்குனர் திறமையால் அளவான  வசனங்களுடன் கண்கவரும் காட்சிகளால் நல்லாவே படம் காட்டப்படுகிறது.

காமெடிக்கு என்று தனிப்பட்டு யாரும் இல்லை...சாருகான் மொழிதெரியாமல் அடிக்கும் கூத்துக்களும் அவர் பேசும் அரைகுறை தமிழும்தான்.சத்தியராஜ்க்கு படத்தில் மிகப்பெரியப் பங்கு என்னமா கண்ணு...சௌக்கியமா...?  என்று அடிக்கடி உச்சரிக்கிறார்...தகடு..தகடு என்பதை ஏனோ விட்டுவிட்டார்.  இருந்தாலும் நம்ம ஆளுக்கு பொருத்தமான வேடம்....தூள் கிளப்புகிறார்.
  
                                     thanks-YouTube-by ChennaiExp201


இசை இரட்டையர்கள் விஷால்-செஹ்கர்....அனைத்துப் பாடல்களும் இனிமை எல்லாவர்த்ரையும் மிஞ்சும் டட்லியின் ஒளிப்பதிவு மூனாறு...உதகை மலையும் மலைசார்ந்த இடங்களிலும் ராமேஸ்வரம் கடலும் கடல் சார்ந்த இடங்களிலும் குற்றால அருவியில் குளித்தது போல் கண்களுக்குக் குளிச்சி 

கதைப்படி ஒரு வடநாட்டு வாலிபன் தமிழ்நாட்டு தாதாவின் மகளைக் காதலில் லவுட்டிக்கிட்டு போவது...இங்கே இப்போது தமிழ்நாட்டில் காதல் சாதிவெறியில் சீரழியும் நேரத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் அவர்களுக்கு ஒரு சாட்டையடி...இங்கே காதல் காதலாகப் பார்க்க...பேசப்படுகிறது.

தீர்ப்பு-சினிமாவை சினிமாவாகப் பார்த்தால்...இதைப் போன்ற ஒரு பொழுதுபோக்கு படமில்லை...தெற்கு-வடக்கு என்று வில்லங்கமாகப் பார்த்தால் இதைப் போன்று ஒரு வில்லங்கமான படமுமில்லை...  

    
சிறப்புப் பதிவு-
தலைவா-சினிமா விமர்சனம்




தலைவா-சினிமா விமர்சனம் 
(குறிப்பு-ஆங்கில வலைப்பதிவுகளில் இருந்து சுட்டப்பழம் இது...எனது கருத்து எதுவுமில்லை ஆனாலும் படத்தின் பற்றிய மதிப்பீடு அருமையாக இருக்கிறது தீர்ப்பு-தலைவா மெதுவான...அதே நேரம்  தார்மீகத் திரைப்படம் MORE CLASS...LESS MASS .)........மேலும்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1