google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தலைவா-கணிப்பு முடிவும் தர்மச்சங்கடமும்

Monday, August 12, 2013

தலைவா-கணிப்பு முடிவும் தர்மச்சங்கடமும்


(குறிப்பு-ஒரு பக்கம் நமது கருத்துக்கணிப்பு சொல்லும் முடிவும் இன்னொரு பக்கம் தலைவா படத்துக்கு வந்த தர்மச்சங்கடமும் பற்றிய ஓர் அலசல் பதிவு இது.)


city

தலைவா-திரைப் படத்திற்குத் தமிழ்நாட்டில் மட்டும் இந்தத்  தர்மசங்கடமான நிலை......  இது நியாயமா? என்றக் கருத்துக்கணிப்புக்கு.......
நியாயமே!
  38 (16%)
நியாயமில்லை
  187 (80%)
கருத்து இல்லை
  8 (3%)

Votes so far: 233
Poll closed.................................................என்றும் உலகெங்கும் வெளியானபிறக்கும் தமிழ்நாட்டில் மட்டும்  தலைவா-படத்துக்கு இந்த நிலை வரக் காரணம் யார்....?
அரசியல்
  150 (62%)
நடிகர் விஜய்
  57 (23%)
திரைக்கதை
  4 (1%)
தயாரிப்பாளர்
  4 (1%)
விளம்பர உத்தி
  21 (8%)
கருத்து இல்லை
  5 (2%)

Votes so far: 241
Poll closed................................................என்றும்
(இது கருத்துக்கணிப்பு...பார்வியிடாதவர்கள் பார்வயிட....)
வாக்களித்து உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி



அதேநேரம்....இன்னும் தமிழ்நாட்டில் திரைக்கு வராமல் இருக்கும் தலைவா திருட்டு dvd.... pen-drive என்று வேருரூபத்தில் வீடுகளில் வெற்றிநடை போடுவதும் யாரும் மறுக்கமுடியாது....இன்னும் வலைதளங்கள் ட்வீடர்கள்,முகநூல்வாசிகள்,பதிவர்கள் என்று அனைவரும்  தலைவா பல தமிழ்படங்களின் வெட்டி-ஓட்டல்(copy&paste)
 என்பதையும் பார்க்கும் போது...இனி தமிழ்நாட்டில் திரைகளில் வெளிவந்து எந்த சாதனையும் புரியப்போவதில்லை காலத்தினால் செய்யாத அறுவடை வீனாப்போகும் என்பது போல...  


vijay

"எல்லோருக்கும் நல்லது செய்யும் நமது முதல்வர், தலைவா திரைப்படம் வெளியாவதில் உள்ள பிரச்னையிலும் தலையிட்டு, விரைவில் தமிழகமெங்கும் திரைப்படம் வெளிவர நடவடிக்கை எடுப்பார் " என்று நடிகர் விஜய் அறிவித்திருப்பது.........இன்று  புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசிர்வாதத்திற்கு காத்திருக்கும் தலைவா(ர்)ஆரம்பத்திலேயே அடக்கிவாசித்திருந்தால் வடை போச்சு கதையாக இந்தத் தர்மச்சங்கடமான நிலையும் தலைவா-வுக்கு வந்திருக்காது



"இந்த ஒரு வார பரபரப்பு விஜய்க்கு இரண்டு விஷயத்தை கற்றுக் கொடுத்திருக்கும். ஒன்று நாற்காலிக்கு ஆசைப்பட்டால் ஆணி கிழிச்சாலும் அசரக்கூடாது. அல்லது நாற்காலிக்கே ஆசைப்படக் கூடாது.விஜய் சாய்ஸ் எதுவோ?" ............நன்றி-4தமிழ்மீடியாவுக்காக அபிஷேக்

vijay

"தலைவா படத்தில் அரச நிர்வாகம், குடியாட்சியின் அடிப்படை விதிகளை முறியடித்து ஒரு தாதாவாக இருப்பதே அரசியல் தலைமைத்துவத்திற்கான தகுதி என்று காட்டப்படுகிறது.போலீஸ் பிழை, சட்டவாட்சி பிழை, ஆளாளுக்கு கத்தியை எடுத்து ஆட்களை சீவி எறிவதே தலைமைக்கான அடையாளம் என்றால் பிறகு எதற்கு தேர்தல், சட்டசபை அதிகாரம்.. எல்லாமே கேலிக்கூத்தாகவிடுகிறதே.இதுகூட தெரியாத ஒருவரா எட்டுக்கோடி தமிழருக்கு தலைமைதாங்கப்போகிறார் என்பது மனதுள் ஏற்படும் கவலை…எத்தனை கொலை செய்தாலும் கடைசியில் கதாநாயகனுக்கு தண்டனை இல்லை அவர் தாதாவாக தொடர்வார், அவர் அரசியலுக்கு தலைமை தாங்க நேரம் வந்துவிட்டதென படம் முடிவடைகிறது.."...நன்றி-Written by Thuraiin in அலைகள் 11.08.2013

http://timesofindia.indiatimes.com/photo/21707254.cms

அன்றாட வாழ்வில் ‘தலைவா'' என்று விளையாட்டாக அழைப்பதை, இயக்குனர் விஜய் சீரியஸ் டைட்டிலாக வைத்து விட்டார். ஒரு நல்ல அரசியல் படத்திற்கான தலைப்பை வீணாக்கி விட்டார். ஒரு பாட்டு இடம் பெற்று விட்டால் அரசியல் படமாகிவிடுமா? அதுவும் வடக்கிந்தியர்கள், வடக்கத்திய உடையுடன் 'தலைவா' என்று பாடுவதை பார்க்கும் போது எரிச்சல்தான் ஏற்படுகிறது.....நன்றி-இர தினகர், டல்லஸ் in tamil.oneindia.in


vijay

அண்ணா...ஒரு வேண்டுகொள்னா..படத்துல ஏத்தி விடுற மாதிரி அரசியலுக்கு கண்டிப்பா வந்துருங்கன்னா..சுப்ரமணிய சாமிக்கு அப்புறம் அந்த இடம் இன்னும் காலியாத்தாங்கன்னா இருக்கு...
தலைவா - நாலு கொள்ளி கட்டைய நம்ம காசுபோட்டு வாங்கி, நடுமுதுகுல நாமேளே சொரிஞ்சுவிட்ட மாதிரி இருக்குங்கணா...என்று தான் 10 டாலர் கொடுத்து படம் பார்த்ததை பணத்தை திருப்பிக் கேட்கிறார்..அவிய்ங்க ராஜா  



இடைவேளைக்கு பிறகு படம் நாயகன், பில்லா, பாட்ஷா, தேவர்மகன் என பலபடங்களை நியாபகப்படுத்துகிறது அதானல் நீங்க அங்கேயே பார்த்துக்கங்க..என்கிறார் கவிதைவீதி சௌந்தர்.

அறிஞர் அண்ணாவின் பெயரை மறைமுகமாக சத்திய ராஜூக்கு வைத்தது. மக்கள் அவரை அண்ணா..அதாவது அண்ணன் என்று அழைப்பதால், அவர் அண்ணாவாம். விஜய் அண்ணாவின் வாரிசாம். ஆப்பசைத்த குரங்கு கதை தெரியுமா?..என்று புலம்புகிறார் அண்ணன் செங்கோவி.

கிட்டத்தட்ட எல்லா வலைதளங்களும் பதிவர்கள் பார்வையும் பார்வையிட்டதில் தலைவா-வால் வந்தது தலைவலிதான் மிச்சம் (அதிலப்பாருங்க..இந்த ஆங்கில வலைத்தளங்கள் எல்லாம் ஆகா...ஓகோனு பாராட்டுராயிங்க...அவிங்க நாயகன் தேவர்மகன், பாட்ஷா...படங்களைப் பார்த்திருக்க மாட்டாயிங்களோ....?)  

சி.பி.செந்தில்குமார்@senthilcp 

இனிமே தலைவா ரிலீஸ் ஆவதும் ,நயன் தாரா மேரேஜ் நடப்பதும் 1
  இரா.சசிக்குமார்@rasigan637தமிழ் மக்களின் உணர்வு போரட்டங்களை விலகிஇருந்து வேடிக்கை பார்த்ததின் விலையை, திரைஉலகம் கொடுத்துக்கொண்டிருக்கிறது#விஸ்பரூபம்,தலைவா
ராஸ்கோலு@RazKoLu 
டொரண்ட்டில் பிரம்மாண்ட வெற்றின்னு பேப்பர்ல போடுங்க பாஸு 'தலைவா' வெற்றிய யார் தடுப்பாங்கன்னு பாக்லாம். :))
Doha Talkies@dohatalkies 
அம்மா ஆட்சியே சிறந்த ஆட்சி, தலைவா படத்தை ரிலீஸ் செய்ய விடுங்க - விஜய்யின் கதறல் அறிக்கை 
பஜன்லால் சேட்டு @SettuSays 
இது தான் சாக்குன்னு தலைவா 2 எடுத்திர போறானுங்க !

பசி.!@Pa_Siva தலைவா... தலைவா... பாட்ட கேக்கும்போது அண்ணாவும் எம்ஜியாரும் ஒப்பாரி வைக்குற மாதிரியே கேக்குது...

http://www.teluguone.com/tmdbuserfiles/Vijay-Thalaivaa-First-Look.jpg

இன்னும் படு பயங்கரமாக கீச்சுக்குருவிகள் ANGRY BIRD போல கத்துகின்றன இன்னும் முகநூல் வாசிகள் வாசிப்பதைக் கேட்டால்.........
இப்பதான் தெரியுது தல அஜித் ஒரு வருஷமா  ரூம்போட்டு யோசிச்சு ஆரம்பம்-னு பெயர்வச்சாருனு.....சிங்கம்-2 கர்ஜனை இன்னும் ஓயவில்லை குட்டிப்  புலியின் உறுமலும் தொடர்கிறது...அய்யோ தலைவா உம்மை ஏழரைச் சனி ஆட்டிப்படைக்கிறது..அரசியல் ஆசை    


"1-தலைவா 
2-கவலைப்படாதே! 
3-விட்டத 
4-ஜில்லாவுல பிடி"  

(என்னபன்றது... நம்ம பங்குக்கு நாலு ஆறுதல் வார்த்தை சொல்லிவைப்போம் அதுக்கு கூட பயமாயிருக்கு.. இது சும்மா...தனுஷ தண்ணிகுடிக்க வைக்கிற மாதிரி யாரும் என்கிட்ட மோதாதீங்க...நான் ஒன்னும் ஒஸ்தியான ஆளு இல்ல....படம் தமிழ்நாட்டில் திரையில் வந்ததும் உண்மையான விமர்சனம் எழுதுவோம்....ஆங்..நண்பர்களே சொல்லிப்புட்டேன் என்னை யாரும் தலைவா-னு விளையாட்டுக்கு கூட கூபிடாதீங்க...அவ்வ்வ்வ் )
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1