google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஐந்து ஐந்து ஐந்து-சினிமா விமர்சனம்

Tuesday, August 13, 2013

ஐந்து ஐந்து ஐந்து-சினிமா விமர்சனம்


(தீர்ப்பு-காதலை திகில் திருப்பங்களுடன் சொல்லும் படம்...எச்சரிக்கை- படம் பார்க்க டாஸ்மாக் குடிமகன்கள் திரையரங்குக்கு போனால்... சரக்கு போடாமல் போங்கள்..அப்புறம் படத்தில் வரும் திருப்பங்களால் உங்கள் மூளைக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் படக் கம்பெனி பொறுப்பல்ல)


bharath

கதை-விபத்தில் மூளை பாதிப்படந்ததாக காட்டப்படும் அரவிந்த்(பரத்)-க்கு தன் காதலி லியனா (மிர்திகா) தன்னுடன் விபத்தில் இறந்த நினைவு....அது விபத்தால் ஏற்பட்ட மெமோரி ஸ்லீப்...இல்லாத ஒன்றை இருப்பது போல்  (ILLUSION) என்று அவரது அண்ணன் கோபால் (சந்தானம்)-லும் மனநல மருத்துவர் ஒருவரும் அவரிடம் சொல்லுவதும்...அதை அவர் நம்ப மறுப்பதுமாக...மிகுந்த அவஸ்த்தை (பரத்துக்கு காதலி கிடைக்காத அவஸ்தை...நமக்கு ஒரு இழவும் புரியாத அவஸ்தை...அப்புறம் நிறைய முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும் வரை..) 





திருப்பங்களில் முக்கியமான (ஹேர்-பின் ட்விஸ்ட்...?) 50-வயது வில்லன் சுதேஷ் பெர்ரி ராஜஸ்தான் குச்சநாடு கிராமத்தில் பாயல்(மிர்திகா) என்ற பெண்ணைக் காதலித்து பாயல் கவுரவக் கொலை செய்யப்பட...சுதேஷ் சென்னை வந்து பல ஆயிரம் கோடி ஈட்டி..ஒரு நிகழ்ச்சியில் பாயல் சாயல் உள்ள லியானாவை சந்திக்க....அவள் மேல் காதல் கொண்டு...அனாதையாக்கி தனது பணபலத்தால் தத்து எடுத்து திருமணம் செய்யப் போகும் வேளையில்....சிவ பூஜையில் கரடி போல் அரவிந்த் லியானா மீது காதல் கொள்ள...


mirthika

மீண்டும் பழைய திருப்பத்துக்கு வருவோம்...உண்மையில் லியனா என்ற பெண் இருக்க....சந்தானம் சாக...மறுபடியும் ஒரு திடீர் திருப்பமாக வில்லனையும் அவரது பாதுகாப்பில் இருக்கும் லியனாவையும் அரவிந்த் கண்டுகொள்ள.... அப்பாடா.... அரவிந்த்-லியனா காதல் வென்றாதா...? என்பதை படம் பார்க்க நினைப்பவர்கள் திரையில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.(அப்புறம் நான் மட்டும் பதிவுல ட்விஸ்ட் வைக்கவில்லைனா எப்படி...?)



பூ இயக்குனர் சசியை பாராட்டியே ஆகவேண்டும் அரவிந்த் & சுரேஷ் எழுதிய கதைக்கு போதும் போதும் என்று தேவையான அளவு டிவிஷ்ட்களை வைத்து கதையின் சஸ்பென்ஸ் எந்த இடத்திலும் கசிந்துவிடாமல் கதை சொல்கிறார்...கொஞ்சம் கசிந்தாலும் அணையுடைந்த வெள்ளம் போல் அத்தனையும் ம்ம்ம்...பார்வையாளர்களையும் குழப்பம் அடித்துச் சென்றிருக்கும் அறுவை வெள்ளத்தில்... 

http://images.desimartini.com/media/versions/main/original/f8728b4f-4dfa-478c-95ea-099172bbd88a_original_image_500_500.jpg

அது உண்மையாகிறது படத்தில் கிளைமாக்ஸ் காட்சி வருவதற்கு முன்பு நமக்கு தெளிவு பிறப்பதால்...உச்ச கட்டத்தில் பரத் சிக்ஸ் பேக் உடம்புடன் போடும் நல்ல சண்டைகாட்சியும் கதையின் விறுவிறுப்பும் எதுவும் இல்லாமல் நமக்கும் விபத்து ஆனதுபோல் மண்டைக் கோளாறு...பரத்துக்கு தெளிகிறது...நமக்கு ஆரம்பிக்கிறது நல்லவேளை படம் அத்தோடு முடிந்தது...நாமளும் பிழைத்தோம் 

படத்தில் சைமன் இசையில் பாடல்கள் இனிமை...சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு பாடல்காட்சிகள்... சண்டைக்காட்சிகள்... கோத்தகிரி மலைக்காட்சிகள் மற்றும் குச்சநாடு... நல்ல அருமையாக படம் பிடித்துள்ளது.



சமீபகாலமாக விபத்தால் அல்லது பிறவியிலேயே மண்டைக் கோளாறு படங்கள் நிறைய தமிழில் வருகின்றன ...அதிலே மண்டைக் கோளாறை நகைச்சுவையுடன் சொன்ன நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் மிகப்பெரிய வெற்றி...சீரியஸாக சொன்ன ஆட்டிசம் (autism) விழிப்புணர்வு படம் ஹரிதாஸ்....விருது படம் வரிசையில்...?  555-படமோ கோளாறு+ காதல்+திகில் என்று புது விருந்து படைக்கிறது 

இயக்குனர் சசி கதை சொல்வதில் வல்லவர் என்பதை மீண்டும் நிருபித்துள்ளப் படம்.... ஆனால் சிலஇடங்களில் குணா கமலையும் சில நேரங்களில் அதர்வாவின் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தையும் நினைவுப் படுத்துகிறது...


555

படம்......பரவாயில்லை....பார்க்கலாம்...காதலை திகில் திருப்பங்களுடன் சொல்லும் படம்...நிறையத் திருப்பங்கள்... திருப்பங்கள்... திரும்பித் திரும்பி கழுத்து சுளுக்கிக் கொள்ளாமல் ...........உஷார் 

                                  thanks-YouTube-NikhilschannelNikhilschannel

(எச்சரிக்கை-படம் பார்க்க டாஸ்மாக் குடிமகன்கள் திரையரங்குக்கு போனால் சரக்கு போடாமல் போங்கள்..அப்புறம் படத்தில் வரும் திருப்பங்களால் உங்கள் மூளைக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் படக் கம்பெனி பொறுப்பல்ல)  

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1