google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தங்கமீன்கள்-சினிமா விமர்சனம்

Friday, August 30, 2013

தங்கமீன்கள்-சினிமா விமர்சனம்


(தீர்ப்பு-படம் பார்க்கப் போகுமுன் மனதில் இருந்த ஏதோ ஒர் இறுக்கம்...படம் முடியும் போது நம்மிடம் இல்லை அதிரடி,குத்துப்பாட்டு,கவர்சிக்கூத்து போன்ற சினிமாத்தனங்கள் இல்லாத ஒரு நல்ல சினிமா பார்த்த நிறைவு...) 

தங்கமீன்கள்-கதை ஒரு புறம் பெற்றோர்-பிள்ளைகள் பாசம் என்று சொல்வதும் இன்னொரு புறம் தனியார் பள்ளிக்கூடங்களில் நடக்கும் அவலங்களைத் தோலுரிக்கிறது. 

தன் 8-வயது மகள் செல்லம்மா (பேபி சாதனா) மீது உயிரே வைத்திருக்கும் தந்தை கல்யாணசுந்தரம் என்ற கல்யாண் (இயக்குனர் ராம்) அதே போல் தன் தந்தை மீதும் பாசமாக இருக்கும் மகள் என்று காட்சிகள் நகர்ந்துகொண்டிருக்க... 

http://images.desimartini.com/media/versions/main/original/e74d226d-e911-4fa5-83f0-b4b6126ce2ad_original_image_500_500.jpeg
 
மகள் படிக்கும் பெரிய தனியார் பள்ளியில் கட்டுப்பாடு என்ற பெயரில் நடக்கும் குழந்தைகள் அவமரியாதையைக் கண்டு கல்யாண் கோபப்பட.. அதனால் கல்யாணின் தந்தை (பூ ராமு)க்கும் அவருக்கும் மனஸ்தாபம் வந்து....கல்யாணி கோபித்துக்கொண்டு கொச்சி போகிறார்.... 

தந்தையைப் பிரிந்த மகளுடன் பேசி அவள் ஆசைப்பட்டது போல் கிருஸ்துமஸ் தாத்தா போல் பேசுகிறார்...கடைசியில் அவள் கேட்ட வோடாபோன் நாய்க்குட்டி(PUG)-க்காகப் பல கஷ்டங்கள் சந்தித்து........கடைசியில் கல்யாணி தன் மகள் ஆசையை நிறைவேற்றினாரா...? நாய்க்குட்டி வாங்கிக்கொடுத்தாரா...? பள்ளி மேட்டர் என்னவாயிற்று...? இதுதான் படத்தின் முக்கியக் கிளைமாக்ஸ் காட்சி....திரையில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.



 (யோவ்...என்னய்யா இது? சின்னப்புள்ளத்தனமாயிருக்கு என்று நீங்கள் நினைக்கவோ கேட்கவோ தோன்றும் .ஆம்..இது குழந்தைகள் பற்றிய படம் ஆனால் குழைந்தைப் படம் அல்ல இது வாழ்க்கையின் நிதர்சனங்களையும் அன்றாட நிகழ்வுகளையும் எந்தவிதமான சினிமாத்தனமான நடிப்புகளும் ஜோடிப்புகளும் இல்லாமல் சொல்லும் சினிமா... 

நடிகை பத்மப்பிரியா..பூ ராமு இவர்களைத் தவிர அனைவரும் புது முகங்களாக..ஆனாலும் அவர்கள் அத்தனை பேரும் கதாப்பத்திரங்களாகத் திரையில் வாழ்கிறார்கள்..அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது...அனைவரும் நாம் நிஜத்தில் சந்திக்கும் மனிதர்களாக.......யாரும் நடிக்கவில்லை. கல்யாண் மனைவியாக வரும் ஷெல்லி கிஷோர் நடிப்பு அற்புதம்


http://cinebuzz.in/wp-content/uploads/2012/11/Thanga-Meengal-Movie-500x280.jpg

படம் ஆரம்பமே தங்கமீன்களைத் தேடி செல்லம்மா குளத்துக்குள் இறங்கப் போகும் திகிலூட்டும் காட்சி...அடுத்து தன் மகளைக் காப்பாற்றியும் ராம் பாடும்...ஆனந்த யாழை மீட்டுகிறாள்...என்று யுவன் சங்கர் ராஜாவின் இனிமையான இசையில் Arbhindu Saaraa ஒளிப்பதிவில் நம்மை வித்தியாசமான ஒர் உலகில் சஞ்சரிக்க வைக்கிறது.... அதே போன்று  அப்பாவும் மகளும் நிலவைக் கையில் பிடித்துக் குதுகளிக்கும் நதிவெள்ளம்...பாடல் காட்சியும் நம் நெஞ்சை விட்டு அகலாது...

 சில நேரங்களில் ராமின் நடிப்பும் படத்தில் உருவாக்கப்பட்ட காட்சிகள்...பள்ளியில் ஆசிரியையிடம் தர்க்கம் செய்வது..மகள் நாய்குட்டி கேட்டால் என்பதற்காக அல்லாடுவது ஆஸ்திரேலிய-விலிருந்து வந்த தங்கையிடம் விமான நிலையத்தில் விவாதம் செய்வது..இப்படி சில காட்சிகள் அவரை ஏதோ மனவியாதிக்காரர் போல் காட்டினாலும் படத்தில் உள்ள வலுவான கதை...நிறைய வலுவான காட்சிகள்..குறைகளை மறைக்கின்றன..மறக்கச் செய்கின்றன (அப்படித்தான் முத்தம் காமம் என்று எதையோ சொல்லி...கவிதை பாடி தேவையில்லாமல்...) 


                 thanks-YouTube-by directorramofficialdirectorramofficial

தங்கமீன்கள்- நம்பத்தகாத,இயற்கைக்கு மாறுபட்ட கவர்ச்சியான காட்சிகள் எதுவுமில்லாமல்...காட்சிக்குக் காட்சி உண்மையின் பிரதிபலிப்பாக யதார்த்தமாக உள்ளது.


 தீர்ப்பு-படம் பார்க்க போகும் முன் யதார்த்தம் என்ற பெயரில் கழுத்து அறுவையாக இருக்குமோ..? என்ற இறுக்கத்தில் தயக்கமாக இருந்தது...ஆனால் படம் பார்த்தப் பிறகு...........

 அதிரடி,குத்துப்பாட்டு,கவர்சிக்கூத்து போன்ற சினிமாத்தனங்கள் இல்லாத ஒரு நல்ல சினிமா பார்த்த நிறைவு... 


(குறிப்பு-நான் படம் பார்த்த கோல்மால் தியேட்டரில் ப்ரொஜெக்டர் ப்ராப்ளம்..1 மணி நேரம் தாமதமாகத்தான் படம் காட்டினார்கள் 1.20 உள்ளே போனவன் 4.30 மணிக்குத்தான்   வெளியேவிட்டார்கள்...(அதுதான் பதிவு எழுத காலதாமதம்) ஆனாலும் படம் பார்க்கும்போது எவ்வித அழற்சியும் இல்லாமல் இருந்ததே படத்தின் சிறப்பு...மேலும் இதுவரை குத்து சினிமாவுகளுக்கே விமர்சனம் எழுதிப் பயக்கம்...ச்சே....பழக்கமானதால் இந்தப்படத்திற்கு விமர்சனம் எழுத கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது) 
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1